TA/Prabhupada 0442 - கிறித்துவ மெய்யியலில், ஒருவர் கடவுளிடம் வேண்டுவது என்னவென்றால், ‘எங்களுக்கு அன்றாட உ



Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

பக்தர்: தனது தனித்துவம் மட்டுமின்றி, எல்லா ஜீவன்களின் தனித்துவமும், எதிர்காலத்திலும்கூட நித்தியமாகத் தொடருமென்று கிருஷ்ணர் இங்கே தெளிவாகக் கூறுகிறார். இது உபநிஷதங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மாயைக்கு உட்படாதவர் என்பதால் அவரது இக்கருத்து அதிகாரபூர்வமானதாகும்." பிரபுபாதர்: ஆம், உபநிஷத் கூறுகிறது நித்யோ நித்யானாம். இப்போது, நித்ய என்றால் நித்தியமான, மேலும் பரம புருஷர், பரம நித்தியமானவர், மேலும் தனி ஆத்மாக்கள் ஆகிய நாமும், நித்தியமானவர்கள். ஆகையால் அவர் தலைமை நித்தியமானவர். எகோ பஹுனாம்... அவர் எவ்வாறு தலைவராவார்? எகோ பஹுனாம் விததாதி காமான். அந்த ஒன்று, நித்தியமான ஒன்று, நபர், மற்ற நித்தியமானவர்களின் தேவைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயங்கள் தெளிவாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையிலேயே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எவ்வாறென்றால் கிருஸ்த்துவ வேதவியலில், ஒருவன் தேவாலயத்திற்கு சென்று பகவானிடம் வேண்டுகிறார், "எங்களுக்கு எங்கள் அன்றாட ரொட்டி கொடுங்கள்." அவர் ஏன் பகவானைக் கேட்கிறார்? நிச்சியமாக, இந்த நாத்திக வகுப்பைச் சேர்ந்தவர்கள் இப்போது அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள், "ரொட்டி எங்கு இருக்கிறது? நீங்கள் தேவாலயத்திற்குப் போகிறீர்கள். நீங்கள் எங்களிடம் வாருங்கள், நாங்கள் உங்களுக்கு ரொட்டி கொடுக்கிறோம்." ஆகையால் இந்த வேத சிந்தனை அங்கேயும் இருக்கிறது. வேதம் கூறுகிறது, எகோ பஹுனாம் விததாதி காமான். அந்தப் பரம நித்தியமான ஒருவர், அவர் அளிக்கிறார், மற்ற அனைத்து தனி நித்தியமானவர்களையும் பராமரிக்கிறார். மேலும் பைபிளும் உத்தரவிடுகிறது அதாவது "நீங்கள் போங்கள், பகவானிடம் உங்கள் ரொட்டியை கேளுங்கள்." ஆகையால், பகவான் பராமரிப்பவராகவும், அளிப்பவராகவும் இல்லாதிருந்தால், இந்தக் கட்டுப்பாடு ஏன்? ஆகையினால் அவர் தான் தலைவர், அவர் தான் பராமரிப்பவர். மேலும் இதுதான் நிலை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. அவர்தான் ஒப்புயரற்றவர். மேலும் இதைத் தெரிந்துக் கொள்வதால் ஒருவர் அமைதி அடையலாம். அதுதான் வேதத்தின் கட்டளை. தொடரவும். பக்தர்: "கிருஷ்ணர் மாயைக்கு உட்படாதவர் என்பதால்,அவரது இக்கருத்து அதிகார பூர்வமானதாகும். தனித்துவம்..." பிரபுபாதர்: ஆம். கிருஷ்ணரின் இந்த கருத்து மாயையில் உள்ளது என்று மாயாவாதி கூறினால், அதாவது "அவர் 'அனைவரும் கடந்த காலத்தில் தனித்துவம் வாய்ந்த நபர்களாக இருந்தனர்.' என்று கூறுகிறார் இல்லை, கடந்த காலத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்தனர், ஒட்டு மொத்தமாக, ஒரே விதமான கலவையாக. மாயையினால், நாம் தனிப்பட்டவர்களாகி விட்டோம்." மாயாவாதி அவ்வாறு கூறினால், பிறகு கிருஷ்ணர் கட்டுண்ட ஆத்மாக்களில் ஒருவர் ஆகிறார். அவர் தன்னுடைய அதிகாரத்தை இழந்துவிடுகிறார். ஏனென்றால் கட்டுண்ட ஆத்மாவினால் உங்களுக்கு உண்மையை அளிக்க முடியாது. நான் கட்டுண்ட ஆத்மா. பூரணமாக உள்ள ஒன்றைப் பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆகையால் கிருஷ்ணர் பூரணமானவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆகையால் மாயாவாதியின் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படடால், பிறகு கிருஷ்ணரின் தத்துவம் மறுக்கப்பட வேண்டும். கிருஷ்ணர் மறுக்கப்படடால், பிறகு கிருஷ்ணரின் புத்தகம், பகவத் கீதையை படிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் பயனில்லை, நேரத்தை வீணாக்குவதாகும். நம்மைப் போல் ஒரு கட்டுண்ட ஆத்மாவினால் ... ஏனென்றால் நாம் கட்டுண்ட ஆத்மாவிடமிருந்து எந்த அறிவுரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால் ஆன்மிக குருவை, நீங்கள் கட்டுண்ட ஆத்மா என்று எடுத்துக் கொண்டாலும், ஆனால் அவர் தானே எதையும் கூறுவதில்லை. கிருஷ்ணர் கூறியதை சொல்கிறார். வேத கொள்கை யாதெனில் பௌதிக நிலையிலிருந்து ஒருவர் விடுபடவில்லை என்றால், அவரால் நமக்கு எந்த நிறைவான அறிவையும் அளிக்க முடியாது. கட்டுண்ட ஆத்மா, கல்வியில் எவ்வளவுதான் முன்னேற்றமும், பாண்டித்யமும் பெற்றவராக இருந்தாலும், அவரால் நமக்கு எந்த நிறைவான அறிவையும் அளிக்க முடியாது. இந்த பௌதிக சட்டங்களின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் ஒருவரால் மட்டுமே, நமக்கு நிறைவான அறிவை அளிக்க முடியும். அதேபோல் சங்கராசார்யர், அவரும் ஒரு அருவவாதி, ஆனால் அவர் பூரண அதிகாரியான கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். ச பகவான் ஸ்வயம் க்ருஷ்ண. "கிருஷ்ணர் தான் அந்த முழுமுதற் கடவுள்." இந்த நவீன மாயாவாத கொள்கையாளர்கள், சங்கராசார்யரின் இந்த அறிக்கையை வெளிப்படுத்துவதில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக. . ஆனால் சங்கராசார்யரின் கருத்து உள்ளது. நம்மால் ஆதாரம் அளிக்க முடியும். அவர் கிருஷ்ணரை பூரணமான அதிகாரியாக ஏற்றுக் கொள்கிறார். அவர் கிருஷ்ணரை போற்றியும் வழிப்பட்டும் பல அருமையான ஸ்லோகங்களை எழுதியுள்ளார். மேலும் இறுதியில் அவர், பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட-மதே என்று கூறுகிறார். "நீங்கள் போக்கிரிகள், முட்டாள்கள். நீங்கள் புரிந்துக் கொள்வதற்கு இலக்கணத்தை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்." "இவையெல்லாம் முட்டாள்தனம்." பஜ கோவிந்தம். "கோவிந்தனை வழிபடுங்கள்." பஜ கோவிந்தம் பஜ... அவர் மூன்று முறை கூறினார். " கோவிந்தனை வழிபடுங்கள்." பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம். எவ்வாறென்றால், சைதன்ய மஹாபிரபு மூன்று முறை கூறினார், ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21). மூன்று முறை என்றால் மிகுந்த அழுத்தமாகச் சொல்வது. நாம் சில நேரங்களில் சொல்வோம், "நீங்கள் இதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள்," என்று சொல்வதைப் போல் அப்படியென்றால் இனியும் மறுத்தல் இல்லை. அனைத்து அழுத்தமும் முடிந்தது. ஒரு காரியம் மூன்று முறை அழுத்தமாக கூறிய உடன் , இறுதி முடிவுஎன்று பொருள் . ஆகையால் சங்கராசார்யர் கூறினார், பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட-மதே. மூடா, மூடா நான் பல முறை விவரித்துள்ளேன். மூடா என்றால் போக்கிரி, கழுதை நீங்கள் உங்கள் இலக்கணப் புரிந்துணர்வைச் சார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், துகருன கரணே. துக்ருன், இவை இலக்கணங்கள் இணை, மற்றும் முன்னொட்டம், ப்ரத்ய, ப்ரகரண. ஆகையால் நீங்கள் இந்த வினையடி, அந்த வினையடியை சார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், மேலும் அர்த்தத்தை உங்களுக்கு தகுந்தார் போல், வேறு விதமாக திரித்தும், உருவாக்கிக் கொண்டிம் இருக்கிறீர்கள். இவை அனைத்தும் முட்டாள்தனங்கள் இந்த துகருன கரணே, இலக்கணத்தில் உங்களுடைய வார்த்தை ஜால வித்தை, மரண தருவாயில் உங்களை காப்பாற்றாது. அயோக்கியர்களே, நீங்கள் கோவிந்தனை வழிபடுங்கள், கோவிந்த, கோவிந்த. அதுதான் சங்கராசார்யரின் அறிவுரையும் கூட. ஏனென்றால் அவர் ஒரு பக்தர், அவர் ஒரு சிறந்த பக்தராக இருந்தார். ஆனால் அவர் ஒரு நாத்திகனாக நடித்தார் ஏனென்றால் அவர் நாத்திகர்களோடு தொடபு கொள்ள வேண்டியிருந்தது. அவர் தன்னை ஒரு நாத்திகனாக காட்டிக் கொள்ளவில்லை என்றால், நாத்திகத் தொண்டர்கள் அவர் கூறுவதை கேட்கமாடடார்கள். ஆகையினால் அவர் மாயாவாத கொள்கையை தற்காலிகமாக சமர்ப்பித்தார். மாயாவாத கொள்கை சாசுவதமாக ஏற்றுக் கொள்ளப்படாது. நித்தியமான தத்துவம் பகவத்-கீதையாகும். அதுதான் தீர்ப்பு.