TA/Prabhupada 0441 - கிருஷ்ணர் பரமன், மேலும் நாம் துண்டு பகுதிகள்
Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968
பக்தர்: "முழுமுதற் கடவுள் தான் நித்தியமான தனித்துவம் பெற்றவர், மேலும் அர்ஜுன், பகவானின் நித்தியமான சேர்க்கை, மேலும் அங்கு கூடியிருக்கும் அனைத்து மன்னர்களும் தனித்துவம் பெற்ற நித்தியமானவர்கள். அவர்கள் கடந்த காலத்தில் தனியாக இருந்ததில்லை என்று பொருள்படாது. மேலும் அவர்கள் நித்தியமானவர்களாக இருக்கமாட் டார்கள் என்று பொருள்படாது. அவர்களுடைய தனித்தன்மை கடந்த காலத்தில் இருந்தது, மேலும் அவர்களுடைய தனித்தன்மை எதிர்காலத்திலும் தடையின்றி தொடரும். ஆகையினால் எந்த தனி ஜீவாத்மாக்களுக்காகவும் புலம்புவதிற்க்கு எந்த காரணமும் இல்லை. மாயாவதி அல்லது அருவ தத்துவம் அதாவது முக்தி பெற்ற பின் தனி ஆத்மா, மாயாவின் திரையால் அல்லது மாயை தோற்றத்தால் பிரிக்கப்பட்டு, தனித்தன்மை இன்றி அருவ பிரமனுடன் ஒன்று சேர்ந்து தொடரும்...." பிரபுபாதர்: இப்போது, மாயாவதி கூறுகிறார்கள் அதாவது இந்த தனித்தன்மை ஒரு மாயை. ஆகையால் அவர்களுடைய எண்ணம் யாதெனில் ஆன்மா, முழு ஆத்மாவும் ஒரு உருண்டை. அவர்கள் தத்துவம் யாதெனில் கடாகாஷ் பொடாகாஷ். கடாகாஷ் பொடாகாஷ் என்றால்....வானத்தைப் போல். வானம் ஒரு பரந்த வெளி, தனித்தன்மை வாய்ந்த பரந்த வெளி. ஆகையால் ஒரு தொட்டியில், தண்ணீர் தொட்டியில், மூடப்பட்டிருக்கும் ஒரு குடத்தில்... இப்போது, அந்த குடத்தினுள்ளும், அங்கு வானம் இருக்கிறது, ஒரு சிறிய வானம். இப்போது அந்த குடம் உடைந்தவுடன், வெளியில், பெரிய வானம், மேலும் குடத்தில் இருந்த சிறிய வானம் கலந்துவிடுகிறது. அதுதான் மாயாவாத தத்துவம். ஆனால் இந்த ஒப்புமை பிரயோகிக்க முடியாது. ஒப்புமை என்றால் ஒரே மாதிரியாக இருக்கும் புள்ளி விபரம். அதுதான் ஒப்புமையின் சட்டம். வானம் ஒப்பிடப்பட முடியாது... குடத்தினுள் இருந்த சிறிய வானம் ஜீவாத்மாக்களுடன் ஒப்பிடப்பட முடியாது. அது பொருள், கருப்பொருள். வானம் ஒரு கருப்பொருள், மேலும் தனி ஜீவாத்மாக்கள் ஒரு ஆன்மா. ஆகையால் நீங்கள் எவ்வாறு கூறலாம்? எவ்வாறு என்றால் ஒரு சிறிய எறும்பு போல், அது ஆன்மிக ஆன்மா. அதற்கு அதன் தனித்தன்மை உள்ளது. ஆனால் இறந்த பெரிய கல், குன்று அல்லது மலை, இவைகளுக்கு தனித்தன்மை கிடையாது. ஆகையால் பொருளுக்கு தனித்தன்மை கிடையாது. ஆன்மாவிற்கு தனித்தனிமை உள்ளது. ஆகையால் ஒரே மாதிரியான கருத்து வேறுபட்டால், பிறகு அங்கு ஒப்புமை இல்லை. அதுதான் ஒப்புமையின் சட்டம். அதனால் நீங்கள் பொருளுடன் ஆன்மாவை ஒப்பிடக் கூடாது. ஆகையினால் இந்த ஒப்புமை தவறானது. கடாகாஷ் பொடாகாஷ். பிறகு மற்றோரு உதாரணம் பகவத் கீதையில் உள்ளது. கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது மமைவாமஷோ ஜீவ -பூத (ப.கீ. 15.7). "இந்த தனி ஆத்மாக்கள், அவர்கள் என்னுடைய அங்க உறுப்புக்கள்." ஜீவ-லோகெ சனாதன: மேலும் அவர்கள் நித்தியமானவர்கள். அப்படி என்றால் அவர்கள் நித்தியமான அங்க உறுப்புக்கள். பிறகு எப்போது... இந்த மாயாவதியின் தத்துவத்தை எவ்வாறு ஆதரிப்பது, அதாவது மாயாவினால், மாயாவினால் திரையிடப்பட்டு, அவர்கள் இப்போது தனித்து, பிரிந்து காட்சியளிக்கிறார்கள், ஆனால் மாயாவின் திரை நீக்கப்பட்டால், அவைகள் ஒன்று சேரும் எவ்வாறு என்றால் குடத்தில் உள்ள சிறிய வானம் மேலும் வெளியில் இருக்கும் பெரிய வானம் ஒன்று சேரும்? ஆகையால் இந்த ஒப்பும தர்க்க ரீதியாக தவறானது, நன்றாக நம்பத்தகுந்த வேதத்தின் பார்வையில். அவைகள் நித்தியமான கூறுகள். பகவத் கீதையில் இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அதாவது ஆன்மா கூறுபடுத்தப்பட முடியாது. ஆகையால் நீங்கள் கூறினால் அதாவது மாயாவின் திரையால் ஆன்மா துண்டுகளாகிவிட்ட்ன என்று, அது சாத்தியமல்ல. அதை வெட்ட முடியாது. எவ்வாறு என்றால் ஒரு பெரிய காகிதத் துண்டை சிறு துண்டுகளாக வெட்டினால், அது சாத்தியம் ஏனென்றால் அது பொருள், ஆனால் ஆன்மிக ரீதியாக அது சாத்தியமில்லை. ஆன்மீகமாகவும், நித்தியமாகவும், துண்டுகள் துண்டுகள் தான், பரமன் பரமன் தான். கிருஷ்ணர் பரமன், மேலும் நாம் துண்டு பகுதிகள். நாம் நித்தியமான துண்டுகள். இந்த கருத்துக்கள் பகவத் கீதையில் பல இடங்களில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த பகவத் கீதையின் ஒரு பிரதியை வைத்துக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் எல்லோரும், மேலும் அதை கவனமாக படியுங்கள். மேலும் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரு பரிட்ஷை இருக்கும். ஆகையால்.... நிச்சயமாக, அது தன்னிச்சையானது. ஆனால் அடுத்த செப்டம்பர் மாதத்து பரிட்ஷைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். மேலும் பரிட்ஷையில் வெற்றி பெற்ற ஒருவருக்கு பக்தி-சாஸ்திரி என்ற பதவிப் பெயர் கிடைக்கும். அதை விநியோகம் செய்துவிட்டிர்களா...ஆம். தொடருங்கள். பக்தர்: "நாம் தனித்தன்மையை கட்டுண்ட நிலையில் தான் நினைப்போம் என்னும் அந்த தத்துவம் இங்கு ஆதரவு பெறவில்லை. கிருஷ்ணர் விவரமாக கூறுகிறார் அதாவது எதிர் காலத்திலும் கூட பகவானின் மேலும் மற்றவர்களின் தனித்தன்மை அப்படியே இருக்கும்..." பிரபுபாதர்: கிருஷ்ணர் கூறவில்லை அதாவது முக்தி பெற்ற பிறகு இந்த தனி ஆன்மாக்கள் பரமனின் ஆன்மாவுடன் சேரும் என்று. கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறவில்லை.