TA/Prabhupada 0444 - கோபியர்கள் பௌதீகத்தால் கட்டுண்ட ஆன்மாக்கள் அல்ல, முக்தி அடைந்தவர்கள்



Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

பிரபுபாதர்: ஆம்?


பக்தன்: தாங்கள் எழுதியதில் நான் ஓரிடத்தில் படித்தது என்னவென்றால், ராதா கிருஷ்ணருக்கு இடையில் இருக்கும் மறைபொருள் நிறைந்த அன்பு பரிமாற்றங்களை புரிந்துகொள்ள, கோபியர்களின் தொண்டர்களானோருக்கு தொண்டு செய்ய வேண்டும். மேலும் நீங்களும் கோபியர்களின் தொண்டராக நான் கருதினேன். அது சரியா? அல்லது... நான் எவ்வாறு கோபியர்களை சேவிப்பது?


பிரபுபாதர்: கோபியர்கள் பௌதீகத்தால் கட்டுண்ட ஆன்மாக்கள் அல்ல. அவர்கள் முக்தி அடைந்த ஆன்மாக்கள். ஆக முதலில் நீ இந்த கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபட வேண்டும். பிறகு தான் கோபியரை எப்படி சேவிப்பது என்கிற கேள்விக்கே இடம் உண்டு. தற்போது, கோபியரை சேவிக்க மிக ஆவலாக இருக்கவேண்டாம். பௌதீக வாழ்விலிருந்து விடுபட முயற்சி செய்தால் போதும். பிறகு கோபியரை சேவிப்பதற்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருக்கும் நேரம் வரும். பௌதீகத்தில் இந்த கட்டுண்ட நிலையில் நம்மால் எந்த தொண்டும் செய்ய இயலாது. கிருஷ்ணர் தான் அதை நிகழ்த்துகிறார். ஆனால் இந்த அர்ச-மார்கத்தின் வழியாக நம் சேவையை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணர் நமக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பைத் தருகிறார். உதாரணமாக நாம் கிருஷ்ணரின் விக்ரகத்தை வைத்து, விதிமுறைப்படி பிரசாதத்தை நைவேத்தியம் செய்கிறோம். இவ்வாறு நாம் முன்னேற வேண்டும், இந்த திரு நாம ஐபம் செய்வது, திருப்புகழை கேட்பது, கோயிலில் வழிபடுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் செய்வது. இவ்வாறு நாம் முன்னேறும் போது, தானாகவே கிருஷ்ணர் உனக்கு வெளிப்படுத்துவார், அதன்பின் உனக்கு உன் நிலை புரியும், எப்படி நீ...


கோபியர் என்றால் எப்பொழுதும் பகவானின் சேவையில் ஈடுபட்டிருப்பவர். ஆக அந்த நித்திய உறவு வெளிக்காட்டப்படும். நாம் அதற்க்காக காத்திருக்க வேண்டும். உடனேயே கோபியரை சேவிப்பதுப் போல் நகல் செய்ய முடியாது. இந்த க்ஷணமே கோபியரை சேவிக்க நினைப்பது நல்ல யோசனை அல்ல. அதற்கு பொறுத்திருக்க வேண்டும். தற்போது, விதிமுறைகளை, கட்டளைகளை பின்பற்றி தினசரி சேவைகளை நாம் செய்ய வேண்டும்.