TA/Prabhupada 0445 - இது ஒரு பாணியாக வந்துவிட்டாது, நாராயணனை எல்லோருக்கும் சமமாக்குவது



Lecture on SB 7.9.2 -- Mayapur, February 12, 1977

ப்ரடுயம்ன: மொழிபெயர்ப்பு - "தன லக்ஷ்மி, அனைத்து தேவர்களாலும் பகவானுக்கு முன் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படடார்கள், ஏனென்றால் பயத்தினால் அவர்களால் செல்ல முடியவில்லை. அவர்கள் கூட பகவானின் இத்தகைய அற்புதமான அசாதாரணமான ரூபத்தைக் கண்டதில்லை, ஆகையினால் அவர்களால் பகவானை அணுக முடியவில்லை." பிரபுபாதர்: ஸாக்ஷத் ஸ்ரீ: ப்ரோஷிதா தேவைர் தருஷ்ட்வா தம் மஹத் அத்புதம் அத்ருஷ்டாஸ்ருத-பூர்வத்வாத் ஸா நோபேயாய சங்கிதா (ஸ்ரீ. பா. 7.9.2) ஆகையால் ஸ்ரீ லக்ஷ்மி, அவர் எப்போதும் நாராயண பகவானுடன் இருப்பர். லக்ஷ்மி-நாராயண. எங்கெங்கெல்லாம் நாராயணன் இருக்கின்றாரோ அங்கெல்லாம் லக்ஷ்மியும் இருப்பார். ஐஸ்வர்யஸ்ய சமாகிரஸ்ய வீரஸ்ய யசஷஹ் ஸ்ரீயஹ (விஸ்ணு புராண 6.5.47). ஸ்ரீயஹ. ஆகையால் பகவான், முழுமுதற் கடவுள், எப்போதும் ஆறு செலவச் சிறப்பை பூரணமாக பெற்றுள்ளார்: ஐஸ்வர்ய, செல்வம், சமாகிரஸ்ய, அனைத்து செல்வங்களும்...அவருடன் ஒருவராலும் போட்டியிட முடியாது. இங்கு இந்த பௌதிக உலகில் போட்டி உள்ளது. உங்களிடம் ஆயிரம் உள்ளது, என்னிடம் இரண்டாயிரம் உள்ளது, மற்றோரு மனிதரிடம் மூவாயிரம் அல்லது மூன்று இலட்சம் உள்ளது. ஒருவராலும் சொல்ல முடியாது, "இதோ முடிவு, 'என்னிடம் பணம் இருக்கிறது.' " இல்லை. அது சாத்தியமல்ல. அங்கு கண்டிப்பாக போட்டி இருக்கும். சம ஊர்த்வ. சம என்றால் "சரிசமமான," மேலும் ஊர்த்வ என்றால் "உயர்ந்த." ஆகையால் ஒருவரும் நாராயணனுக்கு சமமாக இருக்க முடியாது, மேலும் ஒருவரும் நாராயணனைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது. இந்நாளில் இது ஒரு பாணியாக வந்துவிட்டாது, அதாவது தரித்திர-நாராயண. இல்லை. தரித்திரம் நாராயணாவாக முடியாது, மேலும் நாராயண தரித்திரமாக முடியாது. ஏனென்றால் நாராயண எப்போதும் ஸ்ரீ லக்ஷ்மியுடன் சேர்ந்தே செல்வார். அவர் எவ்வாறு தரித்திரமாக முடியும்? இவை உற்பத்தி செய்யப்பட்ட முட்டாள்தனமான கற்பனை, அபராத. யாஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம-ருத்ராதி-தைவதை: ஸமத்வேனைவ வீக்ஷேத ஸ பாஷண்டீ பவேத் த்ருவம் (சி.சி. மத்திய 18.116) சாஸ்த்திரம் கூறுகிறது யாஸ் து நாராயணம் தேவம் . நாராயண, முழுமுதற் கடவுள் .... ப்ரஹ்ம-ருத்ராதி-தைவதை:. தரித்திரத்தைப் பற்றி கூற என்ன இருக்கிறது, நீங்கள் நாராயணனை மற்ற பெரிய, பெரிய, தேவர்களுடன் சரிசமமாக்கினால் கூட பிரம்மாவைப் போல் அல்லது சிவனைப் போல், நீங்கள் அவ்வாறு பார்த்தல் கூட அதாவது "நாராயணன் பகவான் பிரம்மா அல்லது சிவனைப் போல் திறமையானவர்," ஸமத்வேனைவ வீக்ஷேத ஸ பாஸண்தி பவேத் த்ருவம், உடனடியாக அவர் ஒரு பாஸண்தி. பாஸண்தி என்றால் பெரும் பாவி. இதுதான் சாஸ்திரத்தின் ஆணை. யாஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம-ருத்ராதி-தைவதை: ஸமத்வேனைவ. ஆகையால் இது ஒரு பாணியாக வந்துவிட்டாது, நாராயணனை எல்லோருக்கும் சமமாக்குவது. ஆகையால் இம்முறையினால் இந்திய கலாச்சாரம் சிதைந்துவிட்டாது. நாராயண சமமாக முடியாது. நாராயண நேரில் பகவத் கீதையில் கூறியிருக்கிறார், மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய (ப. கீ. 7.7). மற்றோரு வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது: அசமெளர்துவ. எவரும் நாராயணனுக்கு இணையாக முடியாது, விஷ்ணு-தத்வ. இல்லை. ஓம் தத் விஷ்ணோ பரமம் பாதம் சதா பஸ்யந்தி சூரயஹ: (ரிக். வேத. 1.22.20). இது ரிக் மந்திர. விஷ்ணோ பாதம் பரமம் பாதம். பகவான் அர்ஜூனால் இவ்வாறு அழைக்கப்பட்டார், பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் (ப.கீ. 10.12). பரமம் பவான். ஆகையால் இந்த பாஷண்டி, கற்பனை ஆனமீக வாழ்க்கையில் ஒருவருடைய முன்னேற்றத்தை கொன்றுவிடும். மாயாவாத. மாயாவாத. ஆகையினால், சைதன்ய மஹாபிரபு மாயாவதியுடன் தொடர்பு கொள்வதை கடுமையாக தடை செய்துள்ளார். மாயாவாதி பாஷ்ய ஷுனிலே ஹய சர்வ-நாஷ (சி. சி, 6.169): "மாயாவதியுடன் தொடர்பு கொண்டுள்ள எவரும், அவருடைய ஆன்மீக வாழ்க்கை முடிவடைந்துவிடும்." சர்வ-நாஷ. மாயாவாதி ஹய கிருஷ்னே அபராதி. இந்த மாயாவதி போக்கிரிகளை தவிர்க்க நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். "நாராயணர் தரித்திரமாகிவிட்டார்." இதுபோன்ற ஒரு நிகழ்வு இருக்க முடியாது. அது இயலாதது. ஆகையால் நாராயண எப்போதும் இணைந்து இருப்பது சாகஷாத் ஸ்ரீ:. ஸ்ரீ, அதிலும் இங்கு, ஸ்ரீ லக்ஷிமிஜி, குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது அவர்கள் எப்போதும் நாராயணனுடன் தெடர்ந்து இணைந்திருப்பார் என்று. அந்த ஸ்ரீ விஸ்தரிப்பு நடப்பது வைகுண்டலோகத்தில். லக்ஷிமி-சஹஸ்ர ஸ்த-ஸம்பரஹ்ம சேவியமானம். சிந்தாமணி ப்ரகர-சத்மசு கல்ப விருக்ச லக்ஷசாவ்ருதேஷு சுரபிர் அபிபாளயந்தம் லக்ஷிமி-சஹஸ்ர-ஸ்த-ஸம்பரஹ்ம சேவியமானம் கோவிந்தம் ஆதி புருஷம் தம அஹம் பஜாமி (பி. ச. 5.29) ஸ்ரீ, லக்ஷிமி மட்டுமல்ல, ஆனால் லக்ஷிமி-சஹஸ்ர ஸ்த. மேலும் அவர்கள் பகவானுக்கு சேவை செய்துக் கொண்டிருக்கிறர்ர்கள், ஸம்பரஹ்ம சேவியமானம். நாம் ஸம்பரஹ்மவுடன் லக்ஷிமியிடம் வணங்குகிறோம், "தாயே எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள். எனக்கு கொஞ்சம் சலுகை கொடுங்கள், நான் சந்தோஷமாக இருப்பேன்." நாம் ஸ்ரீயை வேண்டுகிறோம். இருப்பினும், அவர்கள் ஸ்ரீயாக, இருக்கவில்லை. ஸ்ரீயின் மற்றோரு பெயர் சண்ஜலா. சண்ஜலா, அவர்கள் இந்த பௌதிக உலகில் இருக்கிறார்கள். இன்றைய தினம் நான் ஒரு கோடீஸ்வரனாக இருக்கலாம், நாளை நான் தெருவில் ஒரு பிச்சைக்காரனாக இருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு செழுமையும் பணத்தைச் சார்ந்துள்ளது. ஆகையால் பணம்,ஒருவரிடமும் நிரந்தரமாக இருக்காது. அது சாத்தியமல்ல. அந்த ஊசலாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீயை, அவர்கள் பகவானை ஸம்பரஹ்ம, மரியாதையுடன் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், "லக்ஷிமி ஒருவேளை போகமாட்டார்கள்," ஆனால் அங்கே, ஸ்ரீ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், "கிருஷ்ணர் ஒருவேளை போகமாட்டார்கள்." அதுதான் வேறுபாடு. லக்ஷிமி எந்த தருணத்திலும் போய்விடுவார்கள் என்று இங்கு நாம் பயந்துக் கொண்டிருக்கிறோம், மேலும் அவர்கள் கிருஷ்ணர் போய்விடுவார் என்று பயந்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வேறுபாடு. ஆகையால் அத்தகைய கிருஷ்ணர், அத்தகைய நாராயண, அவர் எவ்வாறு தரித்திரமாக இருக்க முடியும்? இவை அனைத்தும் கற்பனையே.