TA/Prabhupada 0446 - லக்ஷ்மியை நாராயணனிடமிருந்து பிரிக்க முயற்சி செய்யாதீர்கள்



Lecture -- Seattle, October 2, 1968

ஆகையால் ஸாக்ஷத் ஸ்ரீ. அவள் எப்போதும் இணைந்து இருப்பார். யாராவது ஸ்ரீயை நாராயணனிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்தால், அவர் அழிக்கப்படுவார். அதற்கு உதாரணம் ராவணன். ராவணன் லக்ஷிமியை ராமரிடமிருந்து பிரிக்க விரும்பினான். இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது அதனால் ராவணன், சந்தோஷமடைவதிற்கு பதிலாக .... அவர் சந்தோஷமானவர் என்று பொதுவாக சொல்லப்படுகிறது, பௌதிக செல்வமிக்கவர். ஆனால் அவர் லக்ஷ்மியை நாராயணனிடமிருந்து பிரித்த உடனடியாக, அவர் அணைத்து நண்பர்களுடன் அழிக்கப்பட்டார். ஆகையால் அதைச் செய்ய முயற்சி செய்யாதீர்கள், லக்ஷ்மியை நாராயணனிடமிருந்து பிரிப்பது. அவர்களை பிரிக்க முடியாது. ஆனால் யாராவது அவ்வாறு முயற்சி செய்தால், அவர் நாசப்படுத்தப்படுவார். அவர் நாசப்படுத்தப்படுவார். அதற்கு உதாரணம் ராவணன். ஆகையால் தற்சமயம் மக்கள் ஸ்ரீயின் பணம் மேல் மிகவும் பிரியமாக இறக்கிறர்ர்கள். ஸ்ரீ ஐஸ்வர்யா. ஸ்ரீ ஐஸ்வர்யா. ஸ்ரீ ஐஸ்வர்யா ப்ரஜெபசவ:. பொதுவாக மக்கள், அவர்களுக்கு ஸ்ரீ வேண்டும், பணம், அல்லது அழகு, அல்லது அழகான பெண். ஸ்ரீ ஐஸ்வர்யா: பணம், செல்வம். ஸ்ரீ ஐஸ்வர்யா ப்ரஜெபசவ:. ப்ரஜா. ப்ரஜா என்றால் குடும்பம், சமூகம், பணம். அவர்களுக்கு வேண்டும். ஆகையால் ஸ்ரீ மீது எப்போதும் அதிக ஆசை கொண்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீயை தனியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். பிறகு நீங்கள் நாசப்படுத்தப்படுவீர்கள். இதுதான் அறிவுரை. நீங்கள் ஸ்ரீயை தனியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நாராயணனுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நாராயணனை வைத்துக் கொள்ளுங்கள். ஆகையால் பணம் உடையவர்கள், பணக்காரர்கள், செல்வம் உடையவர்கள், அவர்கள் நாராயணனையும் அவர்களுடைய பணத்துடன் வழிபட வேண்டும். பணத்தைச் செலவழியுங்கள். பணம் நாராயணரின் சேவைக்கு உகந்தது. ஆகையால் உங்களிடம் பணம் இருந்தால், ராவணனைப் போல் வீணாக்காதீர்கள், ஆனால் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுங்கள். உங்களிடம் பணம் இருந்தால், அதை சும்மா மிகவும் விலை உயர்ந்த ஆலயங்களுக்கு செலவழியுங்கள், லக்ஷ்மி-நாராயண, ராதா-கிருஷ்ண, சீதா-ராம போன்றவற்றை நிறுவுங்கள், அவ்வாறு செய்யுங்கள். மற்ற வழிகளில் உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். அப்போது நீங்கள் எப்போதும் பணக்காரனாக இருப்பீர்கள். நீங்கள் ஏழையாகமாட்டிர்கள். ஆனால் நீங்கள் நாராயணனை ஏமாற்ற நினைத்தவுடனேயே, அதாவது "நான் உங்கள் லக்ஷிமியை எடுத்துவிட்டேன்," நீங்கள் பட்டினியாக இருங்கள். அந்த கொள்கை மிகவும் மோசமானது. ஆனால் எவ்வகையிலும், ஸ்ரீ இருக்கும் இடமெல்லாம், அங்கு நாராயணனும் இருப்பார், மேலும் நாராயணன் இருக்கும் இடமெல்லாம், அங்கு ஸ்ரீ இருப்பார். ஆகையினால் நாராயணனும் ஸ்ரீயும். நரசிம்ஹ-தேவதான் நாராயண, மேலும் லக்ஷ்மியுடன், அவர்கள் தொடர்ந்து... ஆகையினால் தேவாஸ், தேவர்கள், அவர்கள் அதைப் பார்த்தவுடன் "நாராயண, நரசிம்ஹ-தேவ, மிகவும் கோபமாக இருக்கிறார். ஒருவராலும் அவரை சாந்தப்படுத்த முடியவில்லை," ஆகையால் அவர்கள் நினைத்தார்கள் அதாவது "லக்ஷ்மி அவருடன் தனிப்பட்டு இணைந்தவர், தொடர்ந்து நாராயணனுடன் இருப்பவர், ஆகையால் அவர்கள் சென்று அவரை சாந்தப்படுத்தட்டும்." அது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சாஃஷாத் ஸ்ரீஹ ப்ரஷிதா தேவைர். தேவர்கள், பகவான் பிரம்மா, பகவான் சிவா மேலும் பலர், அவர்கள் வேண்டுகோளிட்டனர், "தாயே, நீங்கள் உங்கள் கணவரை சாந்தப்படுத்த முயலுங்கள். எங்களால் அது சாத்தியமில்லை." ஆனால் அவர்களும் பயந்தார்கள். அவர்களும் பயந்தார்கள். சாஃஷாத் ஸ்ரீஹ ப்ரஷித தேவைர் த்ருஷ்ட்வா தம் மஹத் அத்புதம். அவர்களுக்குத் தெரியும் அதாவது "என் கணவர் நரசிம்ஹ-தேவாக தோன்றி இருக்கிறார்," ஆனால் பகவானின் அந்த அற்புதமான தோற்றம் பயங்கரமாக இருப்பதால், அவர்களுக்கு அவர் முன் செல்வத்திற்கு துணிவு இல்லை. ஏன்? இப்போது, அதுருஷ்தசுருத-பூர்வத்வாத்: தன் கணவரால் நரசிம்ஹ-தேவ வடிவத்தில் தோன்ற முடியும் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. இந்த நரசிம்ஹ-தேவ அம்சம் குறிப்பாக ஹிரண்யகஷிபுகாக மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் சக்திவாய்ந்தது. ஹிரண்யகஷிபு பிரம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கினார், அதாவது பகவான், தேவர்கள், எவராலும் அவரை கொல்ல முடியாது; மனிதர்களாலும் கொல்ல முடியாது, மிருகங்களாலும் கொல்ல முடியாது, ஒவ்வொன்றாக. மறைமுகமாக ஒரு திட்டம் வகுத்தார் ஒருவராலும் அவரை கொல்ல முடியாமல். ஏனென்றால் முதலில் அவர் மரணமற்றவராக விரும்பினார், ஆகையால் பிரம்மா கூறினார் "நான் மரணமற்றவனல்ல. நான் எவ்வாறு உனக்கு அந்த ஆசீர்வாதத்தை.....? அது சாத்தியமல்ல." ஆகையால் இந்த ராக்ஸசஸ், பிசாசுகள், அவர்கள் மிகவும் திறமையானவர்கள், துஷ்க்ருதின, திறமையானவர்கள் - ஆனால் பாவச் செயல்களுக்காக. அதுதான் ராக்ஸசஸ் அம்சங்கள். ஆகையால் அவன் வேறு திட்டம் தீட்டினான், அதாவது "மறைமுகமாக நான் பிரம்மாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவேன், அவ்வழியில் நான் என்றும் சரஞ்சீவியாக இருப்பேன்." ஆகையால் பிரம்மாவின் வாக்கை காப்பாற்றுவதிற்காக, நாராயணன் நரசிம்ஹ-தேவாக: பாதி சிங்கம், பாதி மனிதனாக தோன்றினார். ஆகையினால் அதுருஷ்தசுருத-பூர்வத்வ. லக்ஷ்மி கூட பகவானின் இதுபோன்ற அம்சத்தைப் பார்த்ததில்லை, பாதி சிங்கம், பாதி மனிதனாக. இது நாராயணன், அல்லது கிருஷ்ணர், சகல சக்திமிக்கவர். அவர் எந்த அம்சத்திலும் தோன்றலாம். அதுதான். . . அதுருஷ்தசுருத-பூர்வ. பார்த்ததே இல்லை. அவர் நாராயணனுடன் இணைந்திருப்பினும், நாராயணனின் இதுபோன்ற அற்புதமான தோற்றத்தை அவர் பார்த்ததே இல்லை. ஆகையினால் அது சொல்லப்படுகிறது, அதுருஷ்தசுருத-பூர்வத்வாத் சா ந உபேயாய சண்கிதா. லக்ஷ்மிஜி கற்புள்ளவர்கள். ஆகையால் சண்கிதா: அவர் பீதி நிறைந்தவராக இருந்தார், "ஒருவேளை அவர் வேறுபட்ட மனிதர்." மேலும் அவர் கற்புள்ளவர், சிறந்த கற்புக்கரசி. அவர் எவ்வாறு வேறு மனிதருடன் சேருவார்? ஆகையினால் சண்கிதா. இந்த வார்த்தைப் உபயோகிக்கப்படுகிறது, சண்கிதா. அவர் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியவராயினும், இருப்பினும், அவர் நினைக்கிறார், "என் கணவராக இருக்காது." இதுதான் உயர்ந்த பண்புடைய கற்பு, கற்புக்கரசி, அதாவது லக்ஷ்மிஜி கூட, விஷ்ணுவைப் பற்றி சந்தேகம் கொள்கிறார், அவர் பேசவில்லை, அணுகவில்லை. சண்கிதா. இது லக்ஷ்மிஜியின் மற்றோரு தன்மை. அவர் அச்சம் கொண்டார், "அவர் ஒருவேளை நாராயணனாக இருக்காது," ஏனென்றால் அவர் தன் கணவரின் இத்தகைய அற்புதமான தோற்றத்தை, பாதி சிங்கம் மேலும் பாதி மனிதனாக அனுபவித்ததில்லை. ஆகையால் அதுருஷ்தசுருத-பூர்வத்வாத் சா நோபேயாய சண்கிதா.