TA/Prabhupada 0450 - பக்தி தொண்டாற்றும் போது பௌதிக ஆசைகளை நினைக்க கூடாது
Lecture on SB 7.9.4 -- Mayapur, February 18, 1977
ப்ரடுயம்ன: மொழிபெயர்ப்பு - "நாரத முனிவர் தொடர்கிறார்: ஓ அரசே, உன்னதமான பக்தன் ப்ரஹ்லாத ஒரு சிறுவனாக இருந்தாலும், அவர் பகவான் பிரம்மாவின் வார்த்தைகளை எற்றுக் கொண்டார். அவர் படிப்படியாக பகவான் நரசிம்ஹ தேவை நோக்கி தொடர்ந்தார், மேலும் கீழே குணிந்து கையை கட்டிக்க கொண்டு அவருடைய மரியாதைக்குரிய அஃஞ்சலியை செலுத்தினார்." பிரபுபாதர்: ததேதி சனகை ராஜன் மஹா-பாகவதோ 'ர்பக: உபேத்ய புவி காயேன நனாம் வித்ருதாஞ்ஜலி: (ஸ்ரீ.பா. 7.9.4) ஆகையால் ப்ரஹலாத மஹாராஜ் ஒரு மஹா-பாகவத, சாதாரண பக்தர் அல்ல. 'ர்பக:. 'ர்பக: என்றால் அப்பாவி பிள்ளை, ஐந்து வயது சிறுவன். ஆனால் மஹா-பாகவத. அவன் பையன் என்பதால் அல்ல... அஹைதுகி அப்ரதிஹதா (ஸ்ரீ.பா. 1.2.6). ஒரு சிறுவன் மஹா-பாகவத ஆக முடியும், மேலும் நன்றாக கற்றறிந்த கல்விமான் ஒரு அரக்கனாக ஆகலாம். பக்தி மிகவும் உன்னதமானது அதனால் இவை முரண்பாடாக இருக்கும். 'ர்பக:. 'ர்ப என்றால் முட்டாள் தனம் அல்லது குழந்தைத் தனம், ஆனால் அதே நேரத்தில் மஹா-பாகவத. அது சாத்தியமே. மஹா-பாகவத என்றால்... வேறுபட்ட பக்தர்களுக்குள் நாம் வேறுபடுத்த வேண்டும்: கனிஷ்த அதிகாரீ, மத்யம-அதிகாரீ மேலும் மஹா-பாகவத, உத்தம-அதிகாரீ. உத்தம-அதிகாரீ. ஆகையால் ப்ரஹலாத மஹாராஜ் ஒரு மஹா-பாகவதம், மஹா-பாகவத, அவனுக்கு இப்போது ஐந்து வயது என்பதால் அல்ல.... இல்லை அவனுடைய தாயின் கருப்பையிலிருந்தே அவன் மஹா-பாகவதாக இருந்தான். அவனுடைய தாயார் தேவர்களால் தாக்கப்படும் போது, கைதி செய்யப்படட போது, மேலும் தேவர்களால் இழுத்துச் செல்லப்பட்ட போது, நாரதர் முனிவர் அவ்வழியே கடந்துச் சென்றார்: "நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" மேலும் "அவர் ஹிரண்யகஷிபுவின் மனைவி, மேலும் கருப்பையில் ஒரு குழந்தை இருக்கிறது. ஆகையால் நாங்கள் அந்த குழந்தையையும் கொல்ல வேண்டும்." நாரதர் முனிவர் உடனடியாக அவர்களிடம் கூறினார், "இல்லை, இல்லை, இல்லை, இல்லை. அவன் சாதாரண குழந்தையல்ல. அவன் ஒரு மஹா-பாகவத. ஆகையால் தொடாதீர்கள்." அதனால் அவர்கள் உடன்பட்டார்கள். நாரத முனிவர்.... இது தேவர்கள். சில தவறுகள் செய்த போதிலும், நாரதர் முனிவர் அவர்களிடம் கட்டளையிட்டதும் அதாவது "அவனுக்கு தீங்கு செய்ய முயற்சிக்காதீர்கள். அவன் ஒரு மஹா-பாகவத," உடனடியாக .... பிறகு நாரத முனிவர் கூறினார், "என் அன்பு மகளே, உன் கணவர் திரும்பி வரும் வரை நீ என்னுடன் வா." ஹிரண்யகஷிபு தேவர்களை வெற்றிக் கொள்ள கடுமையான தவம் மேற்கொள்ள சென்றிருந்தான். இது அரக்கர்களின் கடுமையான தவம். ஹிரண்யகஷிபு மிகவும் கடுமையான தவத்தில் இடுபட்டிருந்தார். அதன் குறிக்கோள் என்ன? சில பௌதிக நோக்கங்கள். ஆனால் அவ்வகையான தவம், தபஸ்யா, பயனற்றது. ச்ரம ஏவ ஹி கேவலம் (ஸ்ரீ. பா. 1.2.8). ஜட செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்கள் துறவறம் மேற்கொள்வார்கள். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், தொழிலிலோ, பொருளாதார துறையிலோ அல்லது அரசியலிலோ, அவர்களால் முன்னேற்றம் அடைய முடியாது. அவர்கள் மிக, மிக கடினமாக உழைக்க வேண்டும். எவ்வாறு என்றால் நம் நாட்டைப் போல , அபாரமான தலைவர் மஹாத்மா காந்தி, அவர் மிக, மிக, கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இருபது வருடங்களாக டர்பனில் அவர் நேரத்தை வீணடித்தார், மேலும் இந்தியாவில் முப்பது வருடங்கள். நான் கூறலாம் அவர் நேரத்தை வீணடித்தார். எதற்காக? சில அரசியல் நோக்கங்களுக்காக. அவருடைய அரசியல் நோக்கம் என்ன? "இப்போது நாம் இந்தியன் என்று அழைக்கப்படும் ஒரு குழுவாக இருக்கிறோம். நாம் கண்டிப்பாக வெள்ளையர்களை துரத்தி அடித்து மேலும் அதிசிறந்த அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்." அதுதான் நோக்கம். அன்யாபிளாஷிதா-ஷுன்யம் (ஸிஸி. மத்ய 19.167). இதன் நோக்கம் என்ன? இன்று நீங்கள் இந்தியன், நாளை நீங்கள் வேறு ஏதாவதாக இருக்கலாம். ததா தேஹாந்தர்-பிராப்தி: (ப. கீ.2.13). நீங்கள் உங்கள் உடலை மாற்ற வேண்டும். ஆகையால் அடுத்த உடல் என்ன? நீங்கள் மறுபடியும் இந்தியனாக இருக்கப் போகிறீர்களா? உத்தரவாதம் கிடையாது. இந்தியாவின் மீது உங்களுக்கு மிகவும் அதிகமான நேசம் இருந்தால் கூட, சரி, உங்களுடைய கர்மாவிற்கு ஏற்ப உடல் கிடைக்கும். ஒரு மரத்தின் இந்திய உடல் கிடைத்தால் கூட, பிறகு நீங்கள் ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்பீர்கள். அதனால் என்ன பயன்? கிருஷ்ணர் கூறுகிறார் ததா தேஹாந்தர்-பிராப்தி:. ஒரு மனிதன் மறுபடியும் ஒரு மனிதனாகவே வருவான் என்று கிருஷ்ணர் சொல்லவில்லை. அதற்கு உத்தரவாதம் இல்லை. சில போக்கிரிகள் கூறுகிறார்கள் அதாவது ஒரு முறை மனிதனான பிறகு, அவன் தாழ்வான நிலையை அடைவதில்லை. இல்லை. அது உண்மையல்ல. உண்மை என்னவென்றால் 8,400,000 வேறுபட்ட உயிரினங்களில், உங்களுடைய கர்மாவிற்கு ஏற்ப உங்களுக்கு ஒரு உடல் கிடைக்கும். அவ்வளவு தான். உத்தரவாதம் இல்லை அதாவது உங்களுக்கு.... மேலும் உங்களுக்கு ஒரு இந்தியன் உடல் கிடைத்தாலும், யார் உங்கள் மேல் அக்கறை கொள்வார்கள்? ஆகையால் கிருஷ்ண உணர்வு இல்லாமல், நாம் எவ்வகையான கடும் துறவறம், பிராயச்சித்தம் நிறைவேற்றினாலும், அது வெறுமனே பயனற்றது நேரத்தை வீணாக்குவது. நமக்கு தெரிந்திருக்க வேண்டும். வெறுமனே நேரத்தை வீணாக்குவது. ஏனென்றால் நீங்கள் உங்கள் உடலை மற்ற வேண்டும். அனைத்தும் மாறிவிடும். நீங்கள் நிர்வாணமாக வந்திர்கள்; நீங்கள் நிர்வாணமாக போக வேண்டும். நீங்கள் இலாபம் பெற முடியாது. ம்ருத்யு: ஸர்வ-ஹராஷ் சாஹம் (ப.கீ. 10.34). ஸர்வ-ஹராஷ் ச. நீங்கள் தேடிப் பெற்ற எதுவென்றாலும், அனைத்தும் எடுத்துச் செல்லப்படும். ம்ருத்யு... ஹிரண்யகஷிபு போல். ஹிரண்யகஷிபு, அவர் தேடிப் பெற்ற அனைத்தும், ப்ரஹலாத மஹாராஜ் கூறுகிறார், "ஒரு வினாடியில், நீங்கள் எடுத்துவிட்டிர்கள். ஆகையால், என் பகவானே, தாங்கள் ஏன் எனக்கு இந்த ஜட ஆசீர்வாதம் வழங்குகிறீர்கள்? அதனுடைய மதிப்பு என்ன? நான் என் தந்தையைப் பார்த்திருக்கிறேன்: வெறுமனே அவருடைய புருவங்கள் சிமிட்டுவதினால் தேவர்கள் பயந்துவிடுவார்கள். அத்தகைய நிலையை தாங்கள் ஒரு வினாடியில் முடித்துவிட்டிர்கள். ஆகையால் இந்த பௌதிக நிலையால் என்ன பயன்? ஆகையினால் தூய பக்தர்களாக இருப்பவர்கள், பௌதிக நிலையில் உள்ள எதையும் விரும்பமாட்டார்கள். அன்யாபி லாஷிதா-ஷுன்யம்' ஜ்ஞான-கர்மாத் யனாவ்ரு'தம் ஆனுகூல்யேன க்ரு'ஷ்ணானு-ஷீலனம்' பக்திர் உத்தமா (பிச. 1.1.11) அதை நாம் எப்போதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பக்தி தொண்டாற்றும் போது பௌதிக ஆசைகளை நினைக்க கூடாது. பிறகு அது தூய்மையற்றதாகிவிடும். ந சாது மன்யே யதோ ஆத்மனோ 'யம் ௮சன அபி க்லேசத ஆஸ தேஹ. பௌதிக ஆசையை நினைத்த உடனடியாக, அதனால் நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கிவிட்டிர்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு உடலை பெறப் போகிறீர்கள். உங்களுடைய ஆசைகள் நிறைவேறிவிடும். கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர் - யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததை பஜாமி (ப.கீ. 4.11) - பக்தியினால் சில ஆசைகளை நீங்கள் நிறைவேற்ற விரும்பினால், கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர்: "சரி." ஆனால் நீங்கள் மற்றோரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் தூய்மையானவரானால், வெறுமனே, த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி (ப. கீ. 4.9). இதுதான் வேண்டும், தூய்மையான பக்தர். ஆகையினால் நாங்கள் அனைவருக்கும் தூய்மையான பக்தராக அறிவுரை கூறுகிறோம். தூய்மையான பக்தர்... இதுதான் உதாரணம், மஹா-பாகவத. இந்த ஐந்து வயது சிறுவன, அவனுக்கு எந்த வேலையும் இல்லை திருப்திப்படுத்துவதைத் தவிர, கிருஷ்ணரின் தூய்மையான பக்தனாக.