TA/Prabhupada 0460 - பிரகலாத மஹாராஜ் சாதாரண பக்தர் அல்ல. அவர் நித்திய-சித்ஹா



Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977

ஆகையால் பிரகலாத மஹாராஜ்... தந்தையுடன் சில கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் தந்தை ஒருவேளை... அவர் ஒரு மிகப் பெரிய மனிதர். அவர் அண்டங்கள் முழுவதும் வெற்றிக் கொண்டார். ஆகையால் அவர் ஒரு எழ்மையான மனிதரின் மகன் அல்ல. பிரகலாத மஹாராஜ் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகன். மேலும் அவர் தந்தையால் போதுமான அளவிற்கு கல்வி கற்பிக்கப்பட்டார், நிச்சயமாக, ஐந்து வயதிற்குள். ஆகையால் ஜன்மமைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீ. அங்கே அனைத்தும் இருந்தது, ஆனால் பிரகலாத மஹாராஜ் இந்த ஜட சூழ்நிலையை சார்ந்திருக்கவில்லை. அவர் பரவசமடைய தெய்வீகமான நிறைவான மகிழ்ச்சி அளிக்கும் பக்தி தொண்டில் மிகவும் ஆழ்ந்து சார்ந்திருந்தார். அதுதான் தேவையானது. அந்த நிலையை நாம் உடனடியாக அடைய முடியாது. அவர் நித்திய-சித்ஹா. நான் விளக்க போவது போல், அதாவது எப்போதெல்லாம் கிருஷ்ணர் தோண்றுகிறாரோ, அவருடைய நித்திய-சித்ஹா பக்தர்கள், இணைந்தவர்கள், அவர்களும் வருவார்கள். ஆகையால் கெளராண்கர சங்கி-கணே, நித்திய-சித்ஹா போலி மானே, தர ஹய வ்ரஜபூமி வாச, அது போல், நரோத்தம தாஸ தாக்கூர்... எவ்வாறு என்றால், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு, நித்தியானந்த, ஸ்ரீ அத்வைத, கதாடர, ஸ்ரீ வாசதி கெளர பக்த வ்ருந்த. ஆகையால் சைதன்ய மஹாபிரவுடன் இணைந்த இவர்கள், அவர்கள் நித்திய-சித்ஹா ஆவார்கள். அவர்களில் யாரையும் நீங்கள் தவிர்க்க முடியாது மேலும் உங்கள் சொந்த கற்பனையில், அதாவது "நான் வெறுமனே வழிபடுவேன்..." கிருஷ்ணர் தோன்றியுள்ளார் - பஞ்ச-தத்வ. கிருஷ்ணர் ஈஸா, மேலும் நித்யானந்த பிரபு, ப்ரகாஷ, பகவானின் முதல் விஸ்தாரமாகும். பகவானுக்கு பல விஸ்தரிப்பு உள்ளது. அத்வைத அச்சுத அனாதி அனந்த-ரூபம் ஆத்யம் புராண-புருஷம் (பிச. 5.33). அவருக்கு பல ஆயிரம் உள்ளது . அதில் முதல் விஸ்தரிப்பு பலதேவ்-தத்வ, நித்யானந்த; மேலும் அவருடைய அவதாரம், அத்வைத; மேலும் அவருடைய ஆனமீக சக்தி, கதாடர; மேலும் அவருடைய ஓரத்தில் உள்ள சக்தி, ஸ்ரீவாஸ். பிறகு சைதன்ய மஹாபிரபு தோன்றினார் பன்ஞவுடன் ... பன்ஞதத்வாத்மகம். நீங்கள் எதையும் தவிர்க்க முடியாது. நீங்கள் நினைத்தால் அதாவது "நான் வெறுமனே வழிபடுவேன் ...," ஓ அது பெரிய குற்றமாகும், "... சைதன்ய மஹாபிரபு அல்லது வெறும் சைதன்ய-நித்தியானந்த" கூடாது. நீங்கள் பன்ஞதத்வாத்மகம், பன்ஞதத்வாத்மகம் கிருஷ்ணம், அனைவரையும் வணங்க வேண்டும். அதேபோல், ஹரே கிருஷ்ண மஹா-மந்தர, பதினாறு பெயர்கள், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, (பக்தர்கள் உச்சாடனம் செய்கிறார்கள்) ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. ஆகையால் நீங்கள் குழப்ப கூடாது. நீங்கள் சாஸ்திரத்தின்படி செய்ய வேண்டும். மஹாஜனோ யென கத: ஸ பந்தா: (சி.சி. மத்திய 17.186). நீங்கள் சாஸ்திரத்திலிருந்து விலகிச் சென்றால், பிறகு நீங்கள் வெற்றி பெறவே முடியாது. ய: சாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம-காரத: ந ஸ ஸித்திம் அவாப்னோதி ந ஸுகம் ந பராம் கதிம் (ப.கீ. 16.23) ஆகையால் நீங்களும் பிரகலாத மஹாராஜ் போல் சம நிலையை அணுக வேண்டும் என்றால், நாம் உடனடியாக அவரைப் போல் செய்யக் கூடாது. நாம் சாதன-பக்தியை பின்பற்ற வேண்டும், சாதன-பக்தி பொதுவானது; மேலும் க்ரூப -சித்ஹா, அது சிறப்புடையது. அது கணக்கிட முடியாதது. கிருஷ்ணர் விரும்பினால், அவர் யாரையும் உடனடியாக முக்கியமானவராக மாற்ற முடியும். அதுதான் க்ரூப -சித்ஹா. ஆகையால் அங்கே மூன்று விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்: நித்திய-சித்ஹா, சாதன-சித்ஹா, க்ரூப -சித்ஹா. பிரகலாத மஹாராஜ் நித்திய-சித்ஹா ஆவார். அவர் சாதாரண சாதன-சித்ஹா அல்லது ... நிச்சயமாக, இறுதியில் அங்கே எந்த வேற்றுமையும் இல்லை, சாதன-சித்ஹா அல்லது க்ரூப -சித்ஹா அல்லது நித்திய-சித்ஹா, ஆனால் நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் அதாவது பிரகலாத மஹாராஜ் சாதாரண பக்தர் அல்ல; அவர் நித்திய-சித்ஹா. ஆகையினால் அவர் உடனடியாக நித்தியமான அறிகுறிகளை மேம்படுத்தினார், அஸ்த-சித்ஹி. அஸ்த-சித்ஹி நீங்கள் பக்தியின் அமிர்தத்தில் படித்திருக்கிறீர்கள். ஆகையால் இந்த ஆனந்த பரவசம், ஏகாக்ர-மனசா. ஏகாக்ர-மனசா, "முழு கவனத்துடன்." நமக்கு அந்த முழு கவனம் ஏற்பட நுறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம், முழு கவனம். ஆனால் பிரகலாத மஹாராஜ் - உடனடியாக. ஐந்து வயது பையன் உடனடியாக, ஏனென்றால் அவர் நித்திய-சித்ஹா. நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேணடும் அதாவது நாம் அவரைப் போல் செய்யக் கூடாது. "இப்போது பிரகலாத மஹாராஜ் உடனடியாக ஏகாக்ர-மனசா ஆனார், மேலும் நானும் அவ்வாறு ஆகலாம்." இல்லை. அது சாத்தியமல்ல. ஒருவேளை சாத்தியமாகலாம், ஆனால் அது முறை அல்ல.