TA/Prabhupada 0461 - குரு இல்லாமலே என்னால் செயல்பட முடியும்-அது முட்டாள்தனம்
Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977
எவ்வாறு என்றால் எங்கள் நாட்டைப் போல், ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்கலாம், ஒரு கவிஞர், ரவீந்தரநாத் தாகூர் இருந்தார். அவருக்கு ஆக்ஸ்வோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து பல உயர்ந்த பதவி கிடைத்தது. அவருக்கு கிடைத்தது... அவர் பள்ளிக்கூடம் சென்றதில்லை, ஆனால் அவருக்கு, டாக்டர் பட்டம் கிடைத்தது, "டாக்டர் ரவீந்தரநாத் தாகூர்." மேலும் நீங்கள் நினைத்தால் அதாவது "நானும் பள்ளிக்கூடம் செல்லாமல் டாக்டர் பட்டம் பெறப் போகிறேன்," அது அறியாமை. அது சிறப்புடையது. அதேபோல், மற்றவரை பாவனை செய்ய முயலாதீர்கள். பொதுவான செயலைப் பின்பற்றுங்கள், சாதன-சித்ஹி. சாஸ்திரத்தில் அறிவுரைத்தது போல் ஒழுக்க நெறிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஆகையினால் அங்கே பல சாஸ்திரங்கள் உள்ளன. மேலும் குரு வழிகாட்டியாவார். நாம் எப்போதும்... நீங்கள் நித்திய-சித்ஹா, அல்லது க்ரூப -சித்ஹா இருந்தாலும், நீங்கள் பொது ஒழுக்க நெறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அதைச் செய்ய முயற்சி செய்யாதீர்கள். நாம் பின்பற்ற வேண்டும். நித்ய... சைதன்ய மஹாபிரபு போல். கிருஷ்ணரே சைதன்ய மஹாபிரபு ஆவார், பகவான், ஆனால் அவர் குருவை ஏற்றுக் கொள்கிறார். அவருடைய குரு யார்? எல்லோருக்கும் அவர் குரு, ஆனால் அவரும் ஈஸ்வர புரியை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணர் தானே, அவர் சாண்டிபணி முனியை தன் குருவாக ஏற்றுக் கொண்டார், குரு இல்லாமல் நீங்கள் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது என்று நமக்கு கற்பிக்கிறார். ஆதெள குர்வாஸ்ரயம். முதல் வேலை குருவை ஏற்றுக் கொள்வதாகும். தத்-விஞாநார்த்தம் ஸ குரு எவாபிகச்செத் (மு. 1.2.12). "நான் மிகவும் முன்னேற்றமடைந்துவிட்டேன். எனக்கு எந்த குருவும் தேவைப்படாது. குரு இல்லாமலே என்னால் செயல்பட முடியும்." என்று நினைக்காதீர்கள். அது முட்டாள்தனம். அது, சாத்தியமல்ல. "கட்டாயமாக." தத்-விஞாநார்த்தம். தத்-விஞாநார்த்தம் என்பது ஆன்மீக விஞ்ஞானம் "கண்டிப்பாக அணுக வேண்டும்." குரும் ஏவாபிகச்செத் சமித-பனி: ஸ்ரொதிரியம் ப்ரம-நிஷதம். தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஸ்ரேய உத்தமம் (ஸ்ரீ.பா.11.3.21). நித்தியமான விஞ்ஞானம், ஆன்மிக அறிவு இவற்றை அறிந்துக்கொள்ள நீங்கள் உண்மையிலேயே உறுதியாக இருந்தால், ஓ, உங்களுக்கு கண்டிப்பாக குரு வேண்டும். தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஸ்ரேய உத்தமம். மேலும் சைதன்ய மஹாபிரபு கூறியது போல், ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தார' ஏ தேஷ் (சிசி. மத்திய 7.128). குருவை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள முடியாது. இல்லை. அனைத்து வேத இலக்கியத்திலும் இது போன்ற ஒரு நிகழ்வு இல்லை. மேலும் இன்று, பல அயோக்கியர்கள், எவ்வித அங்கிகாரமும் இல்லாமல் குருவாக வருகிறார்கள். அது குருவல்ல. நீங்கள் அங்கிகாரம் பெற வேண்டும். ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது: (ப.கீ. 4.2) பரம்பரா காணாமல் போன உடனடியாக, ஸ காலேனேஹ மஹதா யோகோ நஸ்தொ பரந்தப, உடனடியாக அழிந்துவிடும். ஆன்மீக வீரியம் முடிவடைந்துவிடும். நீங்கள் ஒரு குருவைப் போல் ஆடை அணியலாம்,தற்புகழ்ச்சியாகப் பேசலாம், பெரிய வார்த்தைகள், ஆனால் அது பயனுள்ளதாக இருக்காது. ஆக இவைதான் அதன் விஞ்ஞானம். ஆகையால் பிரகலாத மஹாராஜ் நம்முடைய குரு ஆவார். அவர் சாதாரணமானவர் அல்ல. "அவர் ஐந்து வயது சிறுவன்; அவருக்கு அறிவுப் பலம் இல்லை" என்று நினைத்துவிடாதீர்கள். இல்லை. அவர் அவர் குற்றமற்ற நித்திய-சித்ஹா குரு, மேலும் நாம் எப்போதும் அவருடைய கருணை வேண்டி பிராத்தனை செய்ய வேண்டும். மேலும் அதுதான் வைஷ்ணவ தாகுர. வைஷ்ணவ தாகுர துமார குக்குர போலியா ஜானஹ மொரே. இது பணிவான முறை. "ஓ வைஷ்ணவ தாகுர..." வைஷ்ணவர்கள் அனைவரும் தாகுர . அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தாகுர்... ஆகையினால் நாம் அழைக்கிறோம்: பக்திவினோத் தாகுர, பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுர. ஆகையால் வைஷ்ணவ, பிரகலாத தாகுர. ஆகையால் நாம் எப்போதும் வழிபட வேண்டும், வைஷ்ணவ தாகுர துமார குக்குர போலியா ஜானஹ மொரே. இது... பக்திவினோத் தாகுர பற்றி ஒரு பாடல் உள்ளது: "என் அன்புள்ள வைஷ்ணவ தாகுர, தயவுகூர்ந்து என்னை உங்கள் நாயாக ஏற்றுக் கொள்ளுங்கள்." வைஷ்ணவ தாகுர. ஏனென்றால் நாய், தன் எஜமானின் அறிகுறிக்கு ஏற்ப, அனைத்தையும் கீழ்படிந்து செய்யும், நாம் இந்த பாடத்தை நாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், எஜமானிடம் எவ்வாறு நம்பிக்கையுடன் நடந்துக் கொள்வதென்று. அதுதான் அறிவுரை. அனைத்திலும் நீங்கள் ஏதாவது கற்றுக் கொள்ளலாம். அனைவரும். ஆகையினால் மஹா-பாகவத, அவர்கள் அனைவரையும் குருவாக ஏற்றுக் கொள்வார்கள், ஏதாவது கற்றுக் கொள்ள. உண்மையிலேயே நாயிடமிருந்து நாம் இந்த கலையை காற்றுக்கு கொள்ளலாம், வாழ்க்கையில் ஆபத்துக்கு ஆளாகும் நிலையிலும் எவ்வாறு நன்றியுடன் இருப்பது என்று. அங்கே பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன, நாய் தன் எஜமானனிற்காக உயிரையே கொடுத்துள்ளன. ஆகையால் ... மேலும் நாம் வைஷ்ணவர்களுக்கு ஒரு நாயாக இருக்க வேண்டும். சாடியா வைஷ்ணவ-சேவா, நிஸ்தார பாயெசெ கெபா.