TA/Prabhupada 0463 - உள்ளத்திற்கு வெறுமனே கிருஷ்ணரை நினைக்க பயிற்சியளித்தால், நீங்கள் பாதுகாப்பு பெற்றவர



Lecture on SB 7.9.8 -- Mayapur, February 28, 1977

ப்ரத்யும்னன் : மொழிபெயர்ப்பு - "பிரகலாத மஹாராஜன் பின்வருமாறு துதித்தார்: அசுரர்களின் குடும்பத்தில் பிறந்த நான், பொருத்தமான பிரார்த்தனையை பரமபுருஷரைத் திருப்திப்படுத்தக் கூடிய த்குந்த ஸ்தோத்திரங்களைச் செய்வது எவ்வாறு சாத்தியமாகும்? பிரம்மா முதலான அனைத்து தேவர்களும், அனைத்து முனிவர்களும் ஸத்வ குணத்தில் இருப்பதால், தகுதி மிக்கவர்களாக இருப்பினும், அவர்களுடைய வார்த்தைப் பிரவாகங்களால் இக்கணம் வரை அவர்களால் பகவானைத் திருப்திப் படுத்த இயலவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்? எனக்குச் சிறிதளவு தகுதிகூட இல்லை." பிரபுபாதர்: ஸ்ரீ பிரகலாத உவாச ப்ரஹ்மாதய: ஸுர-கணா முனய 'த ஸித்தா: ஸ்த்வைகதான-கதயோ வசஸாம் ப்ரவாஹை: நாராதிதும் புரு-குணைர் அதுனாபி பிப்ரு: கிம் தோஷ்டும் அர்ஹதி ஸ மே ஹரிர் உக்ர-ஜாதே: (ஸ்ரீமத் பாகவதம் 7.9.8). ஆகையால் உக்ர-ஜாதே: என்றால் அசுர குடும்பம், தீவிரம். உக்ர. இந்த பௌதிக உலகினுள் மூன்று வகையான தன்மைகள் உள்ளன. ஆகையினால் குண மயி என்று கூறப்பட்டுள்ளது, தைவீ ஹ்யேஷா குண-மயி (பகவத் கீதை 7.14). குண-மயி என்றால் பௌதிக இயற்கையின் மூன்று விதமான குணங்கள்: சத்வ-குணம், ரஜோ-குணம், மற்றும் தமோ-குணம். ஆகையால் நம் மனம் அலைபாய்கிறது. எல்லோரும் மனத்தின் இயல்பை அறிந்திருக்கிறார்கள், சில நேரம் ஒன்றை ஏற்றுக் கொள்ளும், மறுபடியும் அதை நிராகரிப்பது. சங்கல்ப-விகல்ப. இது மனத்தின் தன்மை, அல்லது மனத்தின் குணம். சில சமயங்களில் மனம் சத்வ-குணத்திற்குச் செல்லும், சில சமயங்களில் ரஜோ-குணத்திற்கு, சில சமயங்களில் தமோ-குணத்திற்கு. இவ்விதமாக நமக்கு பல்வேறு மனநிலை ஏற்படுகிறது. இவ்விதமாக, இறக்கும் தருவாயில், எந்த மனநிலை, இந்த உடலை விட்டு போகும் அந்த தருணத்தில் இருக்கிறதோ, அது என்னை சத்வ-குண, ரஜோ-குண, தமோ-குண போன்ற மற்றொரு உடலுக்கு எடுத்துச் செல்லும். இவ்வாறுதான் ஆத்மாவின் இடமாற்றம் நடக்கிறது. ஆகையினால அந்த மற்றோரு உடல் கிடைக்கும்வரை நம் மனதிற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதுதான் வாழ்வதற்கான கலை. ஆகையால் உங்கள் மனத்தை கிருஷ்ணரை நினைப்பதற்கு மட்டும் பயிற்சி அளித்தால், பிறகு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். இல்லையெனில் அங்கு விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. யம் யம் வாபி ஸ்மரன் பாவம் தய்ஜத்-யந்தே கலேவரம் (பகவத் கீதை. 8.6). இந்த உடலை விடும் நேரத்தில், கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஈடுபடுத்த நாம் மனதிற்குப் பயிற்சி அளிக்கவில்லை என்றால், பிறகு அங்கு ... ஒரு குறிப்பிட்ட வகையான உடலை நாம் பெறுவோம். ஆகையால் பிரகலாத மஹாராஜ், இவ்வகையான ஊகம் செய்யும் சிந்தனையாளர்களைச் சேர்ந்தவர் இல்லையென்றாலும்.... அவர் நித்திய-ஸித்3த4. அவருக்கு வாய்ப்பு இல்லை, ஏனென்றால் அவர் எப்போதும் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டிருக்கிறார். (சத்தமான மின்னியல் ஒலி) (பக்கத்தில்:) என்ன அது? ஸ வை மன:...(மறுபடியும் சப்தம்) ஸ வை மன: கிருஷ்ண - பதாரவிந்தயோர் (ஸ்ரீமத் பாகவதம். 9.4.18). இந்த எளிமையான விஷயத்தை பயிற்சி செய்யுங்கள். கிருஷ்ணர் இங்கு இருக்கிறார். நாம் ஸ்ரீ மூர்த்தியை தினமும் பார்க்கிறோம், மேலும் கிருஷ்ணரின் தாமரை திருப் பாதங்களைப் பார்க்கிறோம். இவ்விதமாக உங்கள் மனதை நிலைநிறுத்துங்கள், பிறகு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். மிகவும் எளிமையான முறை. அம்ப்ரீஷ மஹாராஜ், அவரும் ஒரு சிறந்த பக்தர். அவர் மன்னனாக இருந்தார், மிகவும் பொறுப்பானவர், அரசியல்வாதி. ஆனால் அவர் மனதை கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நிலைப் பெறச் செய்யும் வகையில் தன் மனதை ஈடுபடுத்தினார். ஸ வை மன: கிருஷ்ண - பதாரவிந்தயோர் வாசாமஸி வைகுண்ட குணானுவர்ணனே. இந்த பயிற்சி. வெற்றுறை பேசமாட்டார்கள். (மறுபடியும் சப்தம்). (பக்கத்தில்:) என்ன பிரச்சனை? வெளியே எடுக்கவும்.