TA/Prabhupada 0464 - சாஸ்த்திரம் நேரத்தை வீணே கழிக்கும் சோம்பேரிகளுக்கானதல்ல
Lecture on SB 7.9.8 -- Mayapur, February 28, 1977
ஆகையால் மஹாஜனோ யேன கத: ஸ பந்தா: (சி.சி. மத்திய 17.186) நாம் மஹாஜனாக்களை பின்பற்றினால், நாம் கிருஷ்ண உணர்வை பூரணமாக நன்றாக கற்றுக் கொள்ளலாம். மஹாஜனா என்றால் சிறந்த தனித்துவம் பெற்ற பகவானின் பக்தர்கள். அவர்கள் மஹாஜனாஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். ஜனா என்றால் "நபர்". எவ்வாறு என்றால் சாதாரண முறையில், இந்தியாவில் ஒரு பணக்காரன் மஹாஜனா என்று அழைக்கப்படுகிறான். ஆனால் இந்த மஹாஜனா என்றால் பக்தி தொண்டில் பணக்காரராக இருப்பவர். அவர் மஹாஜனா என்று அழைக்கப்படுகிறார். மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:. நமக்கு அம்பரீஷ மஹாராஜ் இருக்கிறார்; நமக்கு பிரகலாத மஹாராஜ் இருக்கிறார். அங்கே பற்பல மன்னர்கள் இருக்கிறார்கள், யுதிஷ்திர மஹாராஜ், பரீக்ஷித் மஹாராஜ், அவர்கள் ராஜரிஷிகள். கிருஷ்ண உணர்வு, உண்மையிலேயே, சிறந்த உருவவாதிகளுக்கானது. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் விவஸ்வான் மனவே ப்ராஹ் மனுர் இக்ஷ்வாகவே 'ப்ரவீத் (பா.கீ. 4.1) ஏவம் பரம்பரா - ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது: (பா.கீ. 4.2). உண்மையிலேயே , சாஸ்த்திரம் நேரத்தை வீணே கழிக்கும் சோம்பேரிகளுக்கானதல்ல. அதிகம் கற்ற பிராமணர்களுக்கும் அதிகம் உயர்ந்த ஷத்திரியர்களுக்கும். மேலும் வைஷ்யர்களும் சூத்திரர்களும், அவர்கள் சாஸ்தரத்தில் மிகவும் கற்றறிந்தவர்களாக எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால், சரியான பிராமணரும் உயர்ந்த ஷத்திரியர்களின் வழி காட்டுதலால் அவர்களும் பூரண நிலை பெறுவார்கள். முதல் பூரண நிலை ரகம், முனயோ, அது சொல்லப்படுவது போல், ஸாத்விகதான்-கதயோ முனயோ (ஸ்ரீ.பா. 7.9.8), அபார முனிவர்கள். பொதுவாக, "அபார முனிவர்கள்" என்றால் பிராமணர்கள், வைஷ்ணவர்கள். அவர்கள் பக்தி தொண்டில் சத்வ குண நிலையில் உள்ளவர்கள். ரஜஸ், தமோ-குணத்தில் உள்ளவர்கள் அவர்களை நெருங்க முடியாது. நஷ்ட - ப்ராயேஷு அபத்ரேஷு நித்யம் பாகவத சேவயா (ஸ்ரீ.பா. 1.2.18). பத்ர மேலும் அபத்ர, நல்லதும் மேலும் கேட்டதும். ஆகையால் ரஜோ குண மேலும் தமோ குண கேட்டது, மேலும் சத்வ குண நல்லது. அது கூறுவது போல் நிலை நாம் இருந்தால், ஸாத்விகதான்-கதயோ.... நீங்கள் எப்போது சத்வ குணவில் நிலைப் பெற்றிருந்தால், பிறகு அனைத்தும் தெளிவாக செய்யப்படும். சத்வ குண என்றால் ப்ரகாஷ். அனைத்தும் தெளிவாக இருக்கும், அறிவு நிறைந்திருக்கும். மேலும் ரஜோ-குண தெளிவாக இருக்காது. உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது: எவ்வாறு என்றால் மரக்கட்டைப் போல். அங்கு நெருப்பு உள்ளது, ஆனால் நெருப்பின் முதல் அறிகுறி, மரக்கட்டை, நீங்கள் புகையைக் காணலாம். நீங்கள் மரக்கட்டையில் தீயை கொளுத்தும் பொது, முதலில் புகை வரும். ஆகையால் புகை ...முதன் முதலில் மரக்கட்டை, பிறகு புகை, பிறகு நெருப்பு. மேலும் நெருப்பிலிருந்து, நீங்கள் நெருப்பை யாகத்திற்கு பயன்படுத்தும் பொது, அதுதான் இறுதியானது. அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வருகிறது. பூமியிலிருந்து, மரக்கட்டை வருகிறது, மரக்கட்டையிலிருந்து புகை வருகிறது, புகையிலிருந்து நெருப்பு வருகிறது. மேலும் நெருப்பு, தீ யாகத்திற்கு பயன்படுத்தும் பொது, ஸ்வாஹா - அப்போது நெருப்பு சரியான முறையில் பயன்படுகிறது. ஒருவர் மரக்கட்டை தளத்தில் தங்கியிருந்தால், அது முற்றிலும் மறதி. ஒருவர் புகை தளத்தில் தங்கியிருந்தால், அங்கு சிறிது வெளிச்சம் இருக்கும். ஒருவர் நெருப்பு தளத்தில் தங்கியிருந்தால், அங்கு முழு வெளிச்சம் இருக்கும். மேலும் அந்த வெளிச்சம் கிருஷ்ணரின் சேவையில் பயன்படுத்தினால், அது பூரணத்துவம் நிறைந்தது. நாம் அவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும்.