TA/Prabhupada 0465 - வைஷ்ணவ சக்திமிக்கவர்கள், இருப்பினும் சாதுவான பணிவானவர்கள்
Lecture on SB 7.9.8 -- Mayapur, February 28, 1977
ஆக பிரகலாத மஹாராஜ் ஒரு வைஷ்ணவ. வைஷ்ணவரின் தகுதிகள் யாதெனில், த்ருணாத் அபி ஸுநீசேன தரோர் அபி ஸஹிஷ்ணுனா அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி (சி.சி. ஆதி 17.31) வைஷ்ணவர்கள் எப்போதும் பணிவானவர்கள் - சாதுவான பணிவானவர்கள். அதுதான் வைஷ்ணவ. வைஷ்ணவ சக்திமிக்கவர்கள், இருப்பினும் சாதுவான பணிவானவர்கள். ஆகையால் இதோ அதன் அறிகுறி. பிரகலாத மஹாராஜ் மிகவும் தகுதியுள்ளவர், உடனடியாக பகவான் நரசிம்ஹதேவ் அவன் தலையின் மேல் தன் கைகளை வைத்தார்: "என் அன்புக்கு குழந்தை, நீ மிகவும் அதிகமாக அவதிப்பட்டுவிட்டாய். இப்பொது சமாதானமடைவாயாக." இதுதான் பிரகலாத மஹாராஜின் நிலை - உடனடியாக பகவானால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார், "நன் தாழ்ந்த பிறவி, பேராசையும் ஆர்வமும் உள்ள குடும்பத்தில் பிறந்தவன்," உக்ர-ஜாதே:. அவர் பெருமைபடவில்லை அதாவது "இப்போது நரசிம்ஹதேவ் என் தலையை தொட்டுவிட்டார் என்று. என்னைப் போல் யார் இருக்கிறார்? நான் மிகவும் சிறந்த தனிப்பட்ட மனிதன்." இது வைஷ்ணவ அல்ல. சனாதன கோஸ்வாமி, அவர் சைதன்ய மஹாபிரபுவை அணுகும் பொது, அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், நீச்ச ஜாதி நீச்ச கர்ம நீச்ச சங்கீ: "நான் மிகவும் தாழ்ந்த இன குடும்பத்தில் பிறந்தவன், மேலும் என்னுடைய கடமைகளும் மிகவும் தாழ்ந்தது, மேலும் என்னுடைய சேர்க்கையும் மிகவும் தாழ்ந்த தரத்துடையது." ஆனால் சனாதன கோஸ்வாமி கௌரவமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் அவர் முகமதன் மன்னனின் சேவையை எற்றுக் கொண்டதால், உண்மையிலேயே அவர் தன்னுடைய அனைத்து பிராமண கலாச்சாரத்தையும் இழந்தார். அவர் இழக்கவில்லை, ஆனால் மேலோட்டமாக அவ்வாறு தோன்றியது, ஏனென்றால் அவர் முகமதன்களுடன் கலந்து பழகுகிறார், அவர்களுடன் உண்ணுகிறார், அவர்களுடன் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் விட்டுவிட்டார். தயக்த்வா தூர்ணம் அஸெஷ்-மண்டல-பதி ஸ்ரேணீம் சதா துச்ச. அவர் புரிந்துக் கொண்டார், "நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்? நான் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறேன்." ஜானியா சுனியா விஷ காய்ன்னு. நரோத்தம தாஸ தாகூர் கூறுகிறார் அதாவது "நான் தெரிந்தே விஷம் உட்கொள்கிறேன்." அறியாமல் ஒருவர் விஷம் எடுக்கலாம், ஆனால் தெரிந்தே ஒருவர் விஷம் எடுத்தால், அது மிகவும் வருந்ததக்கது. ஆகையால் நரோத்தம தாஸ தாகூர் கூறுகிறார, ஹரி ஹரி பிபாலே ஜனம கோணைனு, மனுஷ்ய-ஜனம பையா, ராதா-க்ருஷ்ண நா பாஜியா, ஜானியா சுனியா விஷ காய்ன்னு. ஆகையால் நாங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதும் சொற்பொழிவு செய்ய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் இருப்பினும், மக்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பிறகு அவன் அறிந்தே விஷம் குடித்துக் கொண்டிருக்கிறான். இது தான் நிலைமை. அவன் விஷம் குடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் உண்மை நிலை. நாங்கள் எதையோ கற்பனை செய்துக் கொண்டிருக்கிறோம், தத்துவம் என்பதல்ல. அவர்கள் நம்மை குற்றம் சாற்றுகிறார்கள், "மன மாற்றத்துக்கான போதனை." ஆம், அது மன மாற்றத்துக்கான போதனை. அது தான் ... அனைத்து தூய்மையற்ற பொருள்கள், மலம், அந்த மூளையில் இருக்கிறது, ஆகையால் நாங்கள் அதை கழுவிவிட முயற்சி செய்கிறோம். அதுதான் எங்களுடைய ... ஸ்ருண்வதாம் ஸ்வ - கதா: க்ருஷ்ண: புண்ய - ஸ்ரவண - கீர்த்தன: ஹ்ருதி அந்த : ஸ்தோ ஹி அபத்ராணி விதுநோதி ஸுஹ்ருத் ஸ்தாம் (ஸ்ரீ.பா. 1.2.17). விதுநோதி, இந்த வார்த்தை, அங்குள்ளது. விதுநோதி என்றால் கழுவுவது. கழுவுவது. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத் கீதையில் உள்ள தகவலை கேட்டுக் கொண்டிருக்கும் பொது, அந்த செயல்முறை விதுநோதியாகும், கழுவுவது. உண்மையிலேயே, அது மன மாற்றத்துக்கான போதனை - ஆனால் நன்மைக்கு. கழுவுவது ஒன்றும் தவறல்ல. (சிரிப்பொலி) அதை இந்த போக்கிரிகள், அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், "ஓ, நீங்கள் என்னை தூய்மைப்படுத்துகிறீர்கள்? ஓ, நீங்கள் மிகவும் ஆபத்தானவர்கள் ." இது அவர்களுடைய ... மூர்காயோபடேஸோ ஹி ப்ரகோபாய ந சாந்தயே: ஒரு போக்கிரியிடம், நீங்கள் நல்ல அறிவுரை கூறினால், அவன் கோபம் கொள்வான்." மூர்காயோபடேஸோ ஹி ப்ரகோபாய ந சாந்தயே: இது எப்படி உள்ளது? பயஹ-பாணம் புஜங்காணாம் கேவலம் விஷ-வர்தனம்.