TA/Prabhupada 0467 - கிருஷ்ணரின் கமலப் பாதங்களில் சரணடைந்ததால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன்

From Vanipedia
Jump to: navigation, search
Go-previous.png முந்தைய பக்கம் - வீடியோ 0466
அடுத்த பக்கம் - வீடியோ 0468 Go-next.png

கிருஷ்ணரின் கமலப் பாதங்களில் சரணடைந்ததால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன்
- Prabhupāda 0467


Lecture on SB 7.9.8 -- Mayapur, February 28, 1977

பிரபுபாதர்: ஆக ப்ரஹ்லாத மஹாராஜா, உன்னதமானவர், அதிகாரி, அவர் மிகவும் தன்னடக்கமானவர், அவர் கூறுகிறார், கிம் தோஷ்டும் அர்ஹதி ஸ மே ஹரிர் உக்ர-ஜாதே: "நான் ஒரு முரட்டுத்தனமான குடும்பத்தில் பிறந்தேன். நிச்சயமாக நான் என் தந்தையின, எங்கள் குடும்பத்தின் அசுர குணத்தை பரம்பரையாக பெற்றிருப்பேன். மேலும் பகவான் பிரம்மா மேலும் மற்ற தேவர்கள், அவர்களால் இறைவனை திருப்திப்படுத்த முடியவில்லை, அத்துடன் நான் என்ன செய்வது?" ஒரு வைஷ்ணவர் அவ்வாறு நினைப்பார். வைஷ்ணவர், ப்ரஹ்லாத மஹாராஜா, அவர் நித்தியமானவராக இருப்பினும், நித்திய-சித்ஹ, அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார், தன் குடும்பத்தினருடன் தன்னை அடையாளம் காட்டுகிறார். ஹரிதாஸ் தாகூர் போல். ஹரிதாஸ் தாகூர் ஜெகநாத் கோயிலுக்குள் போகமாடடார். இதே நிலை, ஐநூறு வருடங்களுக்கு முன், இந்துக்கலைத் தவிர வேறு யாரையும் ஜெகநாத் கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டார்கள். அதே நிலை இன்றளவும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஹரிதாஸ் தாகூர் பலவந்தமாக நுழைந்ததில்லை. அவர் தானே நினைத்துக் கொண்டார், "ஆம், நான் தாழ்ந்த குலத்து மனிதன், தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தேன். ஜெகநாதருடன் நேரடியாக தொடர்புடைய பூஜாரிகளையம் மற்றவர்களையும் நான் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? கூடாது, கூடாது." சனாதன கோஸ்வாமீ, அவர் கோயிலின் வாயிலுக்கு அருகில் கூட போகமாடடார். அவர் தானே நினைத்துக் கொள்வார், "என்னை தொடுவதனால், பூஜாரி தூய்மையற்றவராகிவிடுவார். நான் போகாமல் இருப்பதே நல்லது." ஆனால் ஜெகநாத் தானே அவரை தினமும் காண வருவார். இதுதான் ஒரு பக்தரின் நிலை. பக்தர்கள் மிகவும் அடக்கமானவர்கள், ஆனால் பக்தர்களின் தன்மையை நிரூபிக்க, பகவான் அவர்களை பராமரிக்கிறார். கெளந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி (ப.கீ. 9.31). ஆகையால் நாம் எப்போதும் கிருஷ்ணரின் நம்பிக்கையை சார்ந்திருக்க வேண்டும். எவ்வகையான சூழ்நிலையிலும், எந்த அபாயமான நிலையிலும், கிருஷ்ண .... அவஷ்ய ரக்ஷிபே க்ருஷ்ண விஷ்வாச பாலன (சரணாகதி). இதுதான் சரணடைதல். சரணடைதல் என்றால் ... அதில் ஒரு பொருள் கிருஷ்ணர் மேல் முழு நம்பிக்கை, அதாவது "எனக்கு பக்தி தொண்டு செயற்படுத்தும் பொது அங்கு பல அபாயங்கள் ஏற்படலாம், ஆனால் நான் கிருஷ்ணரின் கமலப் பாதங்களில் சரணடைந்துவிட்டதால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன்." இந்த, கிருஷ்ணருக்காக இந்த நம்பிக்கை. ஸமாஸ்ரிதா யே பத-பல்லவ-பலவம் மஹத்-பதம் புண்ய-யஸோ முராரே: பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம் பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம் (ஸ்ரீ.பா. 10.14.58) பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம். விபதாம் என்றால் "ஆபத்தான நிலை." பதம் பதம், இந்த பௌதிக உலகில் எடுக்கும் ஒவ்வொரு படியும் - ந தேஷாம், பக்தர்களுக்காக அல்ல. பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம். இது ஸ்ரீமத் பாகவதம். கற்றறிந்த பார்வையில் கூட உன்னதமானது. ஆகையால் ப்ரஹ்லாத மஹாராஜ்... கவிராஜா கோஸ்வாமி போல். அவர் சைதன்ய சரிதாம்ருதம் எழுதிக் கொண்டிருக்கிறார், மேலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் கூறுகிறார், புரீஷேர கீட ஹைதே முஞி ஸே லகிஷ்ட ஜகாய் மாதாய் ஹைதே முஞி ஸே பாபிஷ்ட மோர நாம எய் லய தார புண்ய க்ஷய (சி.சி. ஆதி 5.205) அது போல். சைதன்ய சரிதாம்ருதாவின் நூலாசிரியர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: "மலத்திலுள்ள புழுவைக் காட்டிலும் தாழ்ந்தவன்." புரீஷேர கீட ஹைதே முஞி ஸே லகிஷ்ட. மேலும் சைதன்ய லீலாவில், ஜகாய்-மாதாய், இரு சகோதரர்களும் பெரும் பாவிகளாக கருதப்படுகிறார்கள. ஆனால் அவரும், அவர்களும் விடுவிக்கப்பட்டனர். கவிராஜா கோஸ்வாமி கூறுகிறார், "நான் ஜகாய், மாதாயைக் காட்டிலும் பெரும் பாவியானவன்." ஜகாய் மாதாய் ஹைதே முஞி ஸே பாபிஷ்ட மோர நாம எய் லய தார புண்ய க்ஷய "நான் மிகவும் தாழ்ந்தவன் எவ்வாறென்றால் என்னுடைய பெயரைக் கேட்பவன், எல்லா புண்ணியச் செயல்களின் நன்மைகளையும் இழக்கின்றான்." இவ்விதமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். மேலும் சனாதன கோஸ்வாமீ, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார், நீச்ச ஜாதி நீச்ச கர்ம நீச்ச சங்க ... அவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் அல்ல. ஒரு வைஷ்ணவர் உண்மையில் அவ்வாறுதான் நினைப்பார். அதுதான் வைஷ்ணவ. அவர் கர்வம் கொள்ளமாடடார்... அதற்கு நேர் மாறான நிலை: "ஓ, நான் இதை வைத்திருக்கிறான். நான் இதை வைத்திருக்கிறான். யார் எனக்கு இணை? நான் மிகுந்த பணக்காரன். நான் மிகவும் இது மேலும் அது." அதுதான் வித்தியாசம். ஆகையால் நாம் இதை கற்க வேண்டும் த்ருணாத் அபி சுனிசேன தரோர் அபி ஸஹிஷ்ணுனா மேலும் ப்ரஹ்லாத மஹாராஜாவின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டும். பிறகு நாம் நிச்சயமாக நரசிம்மதேவ், க்ருஷ்ண, இவர்களால் தோல்வியில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுவோம். மிக்க நன்றி. பக்தர்கள்: ஜெய் பிரபுபாதர்!