TA/Prabhupada 0468 - வெறுமனே விசாரணை செய்யுங்கள், பிறகு கிருஷ்ணருக்கு சேவை செய்ய தயாராகுங்கள்
Lecture on SB 7.9.9 -- Mayapur, March 1, 1977
ப்ரடியும்னா: மொழிப்பெயர்ப்பு: "பிரகலாத மஹாராஜ் தொடர்ந்தார்: ஒருவர், செல்வம், உயர்குடிப் பரம்பரை, அழகு, எளிமை, பெற்றிருக்கலாம், கல்வி, புலன் நிபுணத்துவம், பகட்டு, செல்வாக்கு, உடல் வலிமை, விடாமுயற்சி, அறிவாற்றல் மேலும் மனித அறிவுக்கு எட்டாத யோகி தெய்வசக்தி, ஆனால் நான் நினைக்கிறேன் இந்த அனைத்து தகுதிகளாலும் கூட ஒருவரால் முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்த முடியாது. இருப்பினும், ஒருவர் பகவானை வெறுமனே பக்தி தொண்டால் திருப்பதிபடுத்தலாம். கஜேந்திர இதைச் செய்தது, ஆதலால் பகவான் அவர் செயலால் திருப்பதி அடைந்தார்." மன்யே தனாபிஜன-ரூப தப:-ஸ்ருதௌஜஸ்- தேஜ:-ப்ரபாவ-பல-பௌருஷ-புத்தி-யோகா: நாராதனாய ஹி பவந்தி பரஸ்ய பும்ஸோ பக்த்யா துதோஷ பகவான் கஜ -யூத-பாய (ஸ்ரீபா. 7.9.9). ஆகையால் இவை பௌதிக சொத்து. சொத்து, தன... இந்த பௌதிக உடமைகளால் எவரும் கிருஷ்ணரை வயப்படுத்த முடியாது. இவை பௌதிக உடமைகள்: பணம், பிறகு மனிதவளம், அழகு, கல்வி, எளிமை, மனித அறிவுக்கு எட்டாத தெய்வசக்தி மேலும், மேலும். அங்கு பல விஷயங்கள் உள்ளன. அவர்களால் முழுமுதற் கடவுளை நெருங்கும் சாத்தியம் இல்லை. கிருஷ்ணர் தானே கூறியுள்ளார், பக்தியா மாம் அபிஜானாதி (ப.கீ. 18.55). அவர் கூறவில்லை, இந்த அனைத்து பௌதிக ஆஸ்தியும், அதாவது "ஒருவர் செல்வந்தராக இருந்தால், அவர் என்னுடைய ஆதரவை பெறலாம்." இல்லை. கிருஷ்ணர் என்னைப் போல் வறுமையில் உள்ளவர் அல்ல, அதாவது யாராவது எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால், நான் பயனடைந்துவிடுவேன் என்பதற்கு. அவர் சுயதேவை பூர்த்தி செய்யக் கூடியவர், ஆத்மாராம. ஆகையால் எவ்விதமான உதவியும் எவரிடமிருந்தும் அவருக்கு தேவையில்லை. அவர் முழுமையாக திருப்தியாக இருப்பவர், ஆத்மாராம. பக்தி மட்டும், அன்பு, அதுதான் தேவை. பக்தி என்றால் கிருஷ்ணருக்கு சேவை செய்வது. அதுவும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல். அஹைதுகி அப்ரதிஹதா. அப்படிப்பட்ட பக்தி, முழுமையான. அன்யாபிலாஷிதா-ஷுன்யம் ஜ்ஞான-கர்மாதி-யனாவ்ருதம் (ஸிஸி. மத்திய 19.167, பிரச. 1.1.11). எங்கும் இதுதான் சாஸ்திரத்தின் அறிக்கை, அதாவது பக்தி முழுமையாக இருக்க வேண்டும். ஆனு௯ல்யேன க்ருஷ்ணானு- ஷீலனம் பக்திர் உத்தமா (பிரச. 1.1.11) ஸ்ர்வோபாதி-வினிர்முக்தம் தத் பரத்வேன நிர்மலம் ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ ஸேவனம் பக்திர் உச்யதே (ஸிஸி. மத்திய 19.170) அங்கெ இன்னும் வேறு பல வரைவிலக்கணம் உள்ளது. மேலும் நிமிடம் பக்தி, கிருஷ்ணர் மீது அன்பு இருந்தால், பிறகு நமக்கு அதிகமான பணம், வலிமை, கல்வி, அல்லது துறவறம் தேவையில்லை. அம்மாதிரி எதுவும் தேவையில்லை. கிருஷ்ணர் கூறுகிறார், பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி (ப.கீ 9.26). நம்மிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை, ஆனால் அவருக்கு எல்லோரும் வேண்டும் ஏனென்றால் அவர் கிருஷ்ணரின் ஒரு அங்க உறுப்பு, அனைவரும் அவருக்கு கீழ்ப்படைந்து, அவரை நேசிக்கின்றதை அவர் காண விரும்புகிறார். அதுதான் அவருடைய அபிலாசை. எவ்வாறு என்றால் தந்தை பெரிய செல்வந்தர். மகனிடமிருந்து அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை, ஆனால் அவர் ஆசை கொள்கிறார், அவர் மகன் கீழ்ப்படிந்தவனாக, அன்புக்குரியவனாக இருக்க வேண்டும் என்று. அதுதான் அவருடைய திருப்தி. அதுதான் முழுமையான சூழ்நிலை. கிருஷ்ணர் படைத்திருக்கிறார்.... ஏகோ பஹு ஷ்யாம. நாம் விபின்னாம்ச - மமைவாம்ஷோ ஜீவ-பூத: (ப.கீ 15.7) - நாம் அனைவரும் கிருஷ்ணரின், அங்க உறுப்புக்கள். ஆகையால் எல்லோருக்கும் சில கடமைகள் உள்ளன. ஏதோ ஒன்று செய்வதற்கு எதிர்பார்த்து, கிருஷ்ணர் நம்மை படைத்திருக்கிறார், நம்மால் கிருஷ்ணரின் திருப்திக்கு. அதுதான் பக்தி. அதனால், நம்முடைய வாய்ப்பு, இந்த மானிட வாழ்க்கையில் பெறப்படும். நம்முடைய பொன்னான நேரத்தை வேறு தொழிலிலோ அல்லது வாணிகத்திலோ வீணடிக்கக் கூடாது. வெறுமனே விசாரணை செய்யுங்கள், பிறகு கிருஷ்ணருக்கு சேவை செய்ய தயாராகுங்கள். ஆனு௯லயென க்ருஷ்ணானுஷீல. ஆனு௯ல. உங்கள் மன நிறைவு அல்ல ஆனால் கிருஷ்ணரின் மன நிறைவு. அதுதான் ஆனு௯ல என்றழைக்கப்படுகிது, அபிமானமானது. ஆனு௯லயென க்ருஷ்ணானுஷீலனம் (ஸிஸி. மத்திய 19.167). மேலும் அனுஷீலனம் என்றால் நடவடிக்கை, இவ்வாறல்ல "மயக்க நிலையில் நான் தியானத்தில் இருக்கிறேன்." அதுவும் கூட ... ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு ஏதோ இருப்பது தேவலை, ஆனால் உண்மையான பக்தி மயத் தொண்டு நடவடிக்கையாகும். ஒருவர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும், மேலும் சிறந்த நடவடிக்கை முழுமுதற் கடவுளின் மகிமையைப் பற்றி உபதேசித்தல். இது தான் சிறந்த நடவடிக்கை. ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம: (ப.கீ. 18.69).