TA/Prabhupada 0470 - முக்தி என்பதுகூட மற்றொரு மோசடியாகும்.



Lecture on SB 7.9.9 -- Mayapur, March 1, 1977

முக்தி என்பதும்கூட இன்னுமொரு ஏமாற்று வேலை என ஶ்ரீதர ஸ்வாமி கூறுகிறார். ஏன் முக்தி? நீ முக்தனாக, விடுதலையடைந்தவனாக இல்லாவிடில், நீ சேவை புரிய முடியாது என்று கிருஷ்ணர் கூறவேயில்லை இல்லை. எந்த நிலையிலும் நீங்கள் சேவை செய்யலாம். அஹைதுகி அப்ரதிஹதா. நாம் முதலில் விடுதலை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை ஏனெனில் நீங்கள் பக்தியைத் தொடங்கியவுடன், நீங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டீர்கள். பக்தியின் தளம் அவ்வளவு உயர்ந்தது, ஒரு பக்தன், வேறு எந்த உள்நோக்கம் இல்லாதவன், ஏற்கனவே விடுதலை அடைந்தவன் ஆகின்றான் ப்ரஹ்ம-பூஹ்யாய ஸ கல்பதே. மாம் ச ய ‘வ்யபிஹ்சாரேனி பக்தி யோகேன யஹ ஸேவதே ஸ குணான் ஸமதித்யிதான் ப்ரஹ்ம-பூஹ்யாய கல்பதே (பகவத் கீதை 14.26) உடனடியாகவே.. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்‌ஷயிஷ்யாமி......(பகவத் கீதை 18.66) ஆகவே, உங்கள் பாவ வாழ்வின் எல்ல்லா விளைவுகளை இல்லாமல் செய்யும் பொறுப்பை கிருஷ்ணர் ஏற்கிறார் என்றால், அதன் பொருள், உடனடியாக நீங்கள் முக்தர், நீங்கள் விடுதலையடைந்து விட்டீர்கள். முக்தி என்றால்... நாம் இந்த பௌதிக உலகில் சிக்கிக் கொண்டுள்ளோம், ஏனெனில், நாம் ஒன்றன் மேல் ஒன்றாய் சிக்கல்களை உருவாக்குகிறோம். நூனம் ப்ரமத்தஹ குருதே விகர்ம(ஶ்ரீமத் பாகவதம் 5.5.4).ஏனெனில், நாம் இருக்கும் இந்த நிலையில், நாம் விரும்பாவிட்டாலும்கூட மோசமாக, முறையற்றதாக செயல்பட வேண்டியுள்ளது. ஒரு எறும்பைக்கூட கொல்லாதபடி கவனமாக இருந்தாலும்கூட, நீங்களே அறியாமல், உணராமல், நடந்து செல்லும்போது, நீங்கள் எவ்வளவோ எறும்புகளை கொன்று விடுகிறீர்கள். இந்த காரணத்தினால் நீங்கள் பாவம் செய்யாதவர் என்று நினைக்கக்கூடாது. நீங்கள் பாவம் செய்தவர் ஆகின்றீர்கள். குறிப்பாக, பக்தர் அல்லாதவர்கள், அவர்கள் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இது போன்ற பல சிறிய உயிர்வாழிகள், நடக்கும் போது அல்லது.......... தண்ணீர் ஜாடி உள்ளதைப் பார்த்திருப்பீர்கள். அதற்குள்ளும், பற்பல சிறிய உயிரினங்கள் உள்ளன. அந்த தண்ணீர் ஜாடியை தள்ளி வைக்கும் போதுகூட, நிறைய உயிர்வாழிகளை நீங்கள் கொல்கிறீர்கள். அடுப்பில் தீமூட்டும்போதுகூட, அங்கும் நிறைய உயிர்வாழிகள் உள்ளன. நீங்கள் அவற்றை கொல்கிறீர்கள். ஆகவே, தெரிந்தோ, தெரியாமலோ, நாம் இந்த பௌதிக உலகில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வாழ்கிறோம் அதாவது, நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், பாவச் செயல்களைப் புரிய வேண்டி உள்ளது. நீங்கள் சமண சமயத்தவர்களைப் பார்த்திருப்பீர்கள், அவர்கள் அஹிம்சையைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் இதைப் போன்ற ஒரு துணியை வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள் சிறிய பூச்சிகள் வாயில் நுழைவதைத் தவிர்க்கலாம் என்பதற்காக. ஆனால் இவை செயற்கையானவை. நீங்கள் தடுக்க முடியாது. காற்றில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன தண்ணீரில் பல உயிரினங்கள் உள்ளன. நாம் தண்ணீர் குடிக்கிறோம். நீங்கள் அதை தடுக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால் நீங்கள் உங்களை பக்தித் தொண்டில் உறுதியாக வைத்திருந்தால், பிறகு, நீங்கள் அதன் விளைவுகளுக்கு கட்டுப்படுவதில்லை. யஜ்னார்த்தே கர்மனோ ந்யத்ர லோகோ யாம் கர்ம பந்தன (பகவத் கீதை 3 .9) உங்கள் வாழ்க்கை யக்ஞத்திற்காக, கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தால் தெரியாமல் நாம் செய்யும் தவிர்க்க முடியாத பாவச் செயல்களுக்கு , நாம் பொறுப்பாக மாட்டோம். மனேயே மிதே க்ருதம் பாபம் புண்யாய ஏவ கல்பதே எனவே நம் வாழ்க்கை கிருஷ்ண உணர்வுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட வேண்டும். பின்னர், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். இல்லையெனில், நம்முடைய செயல்பாடுகளின் பற்பல விளைவுகளில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டும் பின்னர் மீண்டும்மீண்டும் பிறவி, இறப்பு என்று மாறிமாறி வரும் சுழற்சியில் பந்தப்படுவோம். மாம் அப்ராப்ய நிவர்த்தந்தே மிருத்யூ சம்சார வ்ரத் மணி (பகவத் கீதை 9 . 3) நுணம் பிரமத்தாஹ் குருதே விக்ரம யத் இந்திரிய ப்ரிதாய அபர்னோதி ந சாது மன்யே யதோ ஆத்மனோ யமாசன் அபி க்லேசட ஆச தேஹாஹ் (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4) பாதுகாப்பான நிலை என்னவென்றால், நாம் எப்போதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவோம் என்பதுதான். பிறகு நாம் ஆன்மீகத்தில் முன்னேறி, பாவ வாழ்க்கையின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.