TA/Prabhupada 0475 - நாம் கடவுளின் தொண்டர்களாக வேண்டும் என்று கேட்கப்பட்ட உடனேயே நடுங்குகிறோம்.



Lecture -- Seattle, October 7, 1968

நாம் ஒப்புயர்வற்றவராக முடியாது. குறைந்தபட்சம், அங்கீகரிக்கப்பட்ட வேத இலக்கியங்களில் நாம் இதை காணவில்லை, ஒரு ஜீவாத்மா கடவுளுக்கு நிகராக வலிமையடைவது என்று. இல்லை. இது சாத்தியம் இல்லை. கடவுள் பெரியவர். அவர் எப்போதும் சிறந்தவர். பொருள் பிடியிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர் பெரியவர். அதாவது ... எனவே இந்த வசனம், கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. கடவுளுடனான நமது நிரந்தர உறவு, அவரை வணங்க, அல்லது அவருக்கு சேவை செய்ய. அந்த சேவை மிகவும் இனிமையானது. அதை விலக்கி விட வேண்டாம் ... நாம் சேவையைப் பற்றி பேசியவுடன், நாம் நினைக்கலாம்.. "ஓ, சேவையை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாங்கள் இங்கே துன்பப்படுகிறோம்." என்று . அன்று ஒரு மாலை பொழுது, ஒரு சிறுவன் கேட்டார் "நாங்கள் ஏன் தலைவணங்க வேண்டும்?" என்று அவர் இங்கே இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. யாரோ ஒருவரிடம் சரணடைய தேவைப்பட்டால் அது தவறில்லை, ஆனால் நாம் வேறு சூழ்நிலையில் இருப்பதால், மற்றவர்களிடம் சரணடையும் சந்தர்ப்பம் நேர்ந்தால், அது மிகவும் சங்கடமாக இருக்கிறது. யாரும் மற்ற தேசத்தை சார்ந்து இருக்க விரும்பாதது போல, யாரும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை. எல்லோரும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள், ஏனென்றால் இந்த பௌதிக உலகம் ஆன்மீக உலகின் வக்கிரமான பிரதிபலிப்பாகும். ஆனால் ஆன்மீக உலகில், நீங்கள் அதிகமாக சரணடையும் போது, நீங்கள் எவ்வளவுக்கு கடவுளின் ஊழியராக ஏற்கிறீர்களோ, அவ்வளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் தற்போதைய தருணத்தில் நமக்கு அத்தகைய புரிதல் இல்லை. நமக்கு ஆன்மீக யோசனை இல்லை, ஆன்மீக உணர்தல் இல்லை; ஆகவே, நாம் கடவுளின் ஊழியராக வேண்டும் என்று கேள்விப்பட்டவுடன் நடுங்குகிறோம். ஆனால் நடுங்குவதற்கு எந்த தேவையும் இல்லை. கடவுளின் ஊழியராக மாறுவது மிகவும் இனிமையானது. நீங்கள் பார்க்கிறீர்கள் பல சீர்திருத்தவாதிகளை, அவர்கள் வந்தார்கள், அவர்கள் கடவுளின் பணிக்கு சேவை செய்தார்கள், அவர்கள் இன்னும் வணங்கப்படுகிறார்கள். எனவே கடவுளின் ஊழியராகவும், கடவுளின் சேவகராகவும் ஆக, அது ஒன்றும் அற்பமான விஷயம் அல்ல. இது மிக முக்கியமான விஷயம். கோவிந்தம் ஆதி புருஷம் தம ஹம் பஜாமி. ஆனால் அதை ஏற்க வேண்டாம். முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எனவே வேதாந்த- சூத்திரம் கூறுகிறது, அதாத்தோ பிரம்ம ஜிஜ்னாசா. பிரம்மன் என்றால் யார், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். (ஒலிவாங்கி ஒலிக்கிறது) ஏன் இந்த ஒலி? பிரம்மம் என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், மேலும் அவருடன் உங்கள் உறவைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும். பின்னர், நீங்கள் உண்மையில் சரணடையும்போது, அறிவு நிரம்பிய உங்கள் நித்திய ஆனந்த வாழ்க்கையை நீங்கள் உணருவீர்கள். மேலும் இது பகவான் சைதன்ய பிரபுவின் போதனைகளில் மிக நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. பகவத் கீதையிலும், அதே போதனை இருக்கிறது, ஆனால்... ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது, ஒன்று பகவத் கீதை உண்மையுருவில்; மற்றோரு புத்தகம், பகவான் சைதன்யரின் அறிவுரைகள். எனவே பகவத் கீதை சரணடைதல் செயல்முறையை கற்பிக்கிறது. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (ப கீ 18 .66) "நீங்கள் என்னிடம் சரணடையுங்கள்" என்று கிருஷ்ணர் கூறுகிறார். மேலும் இறைவனின் போதனைகள், சைதன்ய மஹாபிரபுவின் போதனை, எவ்வாறு சரணடைவது என்பதாகும். நமக்கு பழக்கமாகிவிட்டதால், நமது தற்போதைய நிபந்தனை வாழ்க்கையில் சரணடைவதற்கு எதிரான கிளர்ச்சியாகும். அங்கே பல கட்சிகள், பல "துவங்கள், " உள்ளன, மேலும் பிரதான கொள்கை அதாவது "நான் ஏன் சரணடைய வேண்டும்?" அதுதான் பிரதான நோய். கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே எந்த அரசியல் கட்சி இருந்தாலும் ... அவர்களின் கிளர்ச்சி அவர்கள் முதலாளித்துவம் என்று அழைக்கும் உயர்ந்த அதிகாரத்திற்கு எதிரானது. "நாம் ஏன் ..." எல்லா இடங்களிலும், ஒரே விஷயம் என்னவென்றால், "நான் ஏன் சரணடைய வேண்டும்?" ஆனால் நாம் சரணடைய வேண்டும். அதுதான் நமது இயல்பான நிலைப்பாடு. நான் சில குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட அரசாங்கத்திடம் சரணடையவில்லை என்றால், அல்லது குறிப்பிட்ட சமூகம் அல்லது சங்கம் அல்லது ஏதாவது, ஆனால் இறுதியில் நான் சரணடைகிறேன். இயற்கையின் விதிகளுக்கு நான் சரணடைகிறேன். சுதந்திரம் இல்லை. இறுதியில், நான் சரணடைய வேண்டும். மரணத்தின் கொடூரமான கைகளின் அழைப்பு வரும்போது, உடனடியாக நான் சரணடைய வேண்டும். பல விஷயங்கள். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டும் ... இது பிரம்ம-ஜிக்ஞாஸா, "ஏன் சரணடைதல் செயல்முறையில் உள்ளது?" நான் சரணடைய விரும்பவில்லை என்றாலும், பிறகு நான் சரணடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மாநிலத்திலும், நான் மாநில சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை மறுத்தால், காவல் படையினரால், இராணுவ சக்தியால், பல விஷயங்களால் அரசு என்னை சரணடைய கட்டாயப்படுத்துகிறது. அதேபோல், நான் இறக்க விரும்பவில்லை, ஆனால் மரணம் என்னை சரணடைய கட்டாயப்படுத்துகிறது. நான் மூப்படைய விரும்பவில்லை, ஆனால் இயற்கை என்னை மூப்படைய கட்டாயப்படுத்துகிறது. நான் எந்த நோயையும் விரும்பவில்லை, ஆனால் இயற்கை என்னை ஒருவித நோயை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது. எனவே இந்த சரணடைதல் செயல்முறை அங்கே உள்ளது. இது ஏன் என்று இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சரணடைவதே எனது இயல்பான நிலைப்பாடு, ஆனால் தற்போதைய சிரமம் என்னவென்றால், நான் ஒரு தவறான நபரிடம் சரணடைகிறேன். நான் முழுமுதற் கடவுளிடம் சரணடைய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, பிறகு எனது அரசியலமைப்பின் நிலைப்பாடு புதுப்பிக்கப்படுகிறது. அதுவே எனது சுதந்திரம்.