TA/Prabhupada 0477 - ஒரு புதுவிதமான மதப்பிரிவை அல்லது தத்துவமுறையை நாம் உருவாக்கவில்லை.



Lecture -- Seattle, October 7, 1968

ஆகையால் எங்கள், இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம், இதை புரிந்து கொள்வது, அல்லது செயல்படுத்துவது மிகவும் கடினமானதல்ல . வெறுமனே இதைச் செய்ய நாம் விரும்பவேண்டும். அவ்வளவுதான். அந்த விருப்பம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் விரும்பினால், அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் எதையாவது ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது நிராகரிக்கவோ உங்களுக்கு சிறிதளவு சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரம் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நல்லதை நிராகரிப்பதன் மூலம், நாம் துன்பத்தில் இருக்கிறோம், நல்லதை ஏற்றுக் கொள்வதால், நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆகையால் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் கையில் உள்ளது. ஆகையால் இதோ ஒரு காணிக்கை, கிருஷ்ண உணர்வு, பெரிய அதிகாரிகளான, பகவான் கிருஷ்ணர், சைதன்ய மஹாபிரபு, ஆகியோர்களால் பரிந்துரைக்கப்பட்டது, மேலும் நாம் அவர்களுடைய பணிவான சேவகர்கள் மட்டுமே. நாம் வெறுமனே பரப்புகிறோம். நாம் புது மாதிரியான மதப் பிரிவையோ அல்லது தத்துவ முறையையோ உற்பத்தி செய்யவில்லை. இல்லை. இது மிகவும் பழமையான முறை, கிருஷ்ண உணர்வு. பொதுவாக மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய செயல்முறையில் பரப்புவதற்கு, நாங்கள் வெறுமனே முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இங்கு வருகை அளித்திருக்கும் அல்லது இங்கு இல்லாத அனைவருக்கும் எங்கள் கோரிக்கை, அதாவது இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை நீங்கள் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், மேலும் உங்களுக்கு உடனடியாக புரியவில்லை என்றால், நீங்கள் தயவுசெய்து எங்களுடன் இணைந்தால், உங்கள் கேள்விகளை முன் வைக்கவும், புரிந்து கொள்ள முயற்சிக்கவும். நீங்கள் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. உங்கள் கேள்விகளை முன் வைக்கவும், புரிந்துகொள்ள முயற்சிக்கவும், எங்கள் இலக்கியங்களைப் படியுங்கள், பிறகு நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள். மேலும் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மற்ற செயல்முறைகளில் ... ஒரு அரசியல் கோட்பாடு போல. இது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ... எவ்வாறென்றால் ஒவ்வொரு நாட்டிலும் பல அரசியல் கட்சிகள் இருப்பதைப் போல. கட்சி அரசியலை முன்னணியில் கொண்டு வர அனைவரும் முயற்சிக்கின்றனர். ஏனென்றால், நாடு முழுவதும் அவரது தத்துவத்தை, அவரது கட்சியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தலைவர் வெற்றிபெற முடியாது. ஆனால் கிருஷ்ண உணர்வு மிக அழகானது, அதற்கு இது தேவையில்லை, அதாவது ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு அல்லது ஒரு குடும்பம் அல்லது எந்தவொரு குழுவும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உங்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்கும் என்று. இல்லை. தனிப்பட்ட முறையில், நீங்கள் ஏற்றுக்கொண்டால். உங்கள் குடும்பம் ஏற்கவில்லை என்றால், உங்கள் சமூகம் ஏற்கவில்லை என்றால், உங்கள் நாடு ஏற்கவில்லை என்றால், அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டால், உங்கள் சமூகம் ஏற்றுக்கொண்டால், உங்கள் தேசம் என்றால் ..., நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏனென்றால் அது நித்தியமானது, சுதந்திரமானது, ஆகையால் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளும் எந்த நபரும் உடனடியாக மகிழ்ச்சிஅடைவார்கள். ஆகையால் நாங்கள் உங்களை அழைக்கிறோம். எங்களுக்கு வகுப்புகள் உள்ளன, வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு கிளைகள் உள்ளன, எங்களிடம் புத்தகங்கள் உள்ளன, எங்களிடம் சஞ்சிகைகள் உள்ளன, மேலும் எங்கள் காலை மற்றும் மாலை வகுப்புகள் மூலம் உங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறோம். ஆகையால் உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் யாதெனில் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதே. சைதன்யர் தயா கதா கரஹ விசார. நீங்கள் புரிந்துக்கொள்ள உங்கள் தீர்ப்புக்கு இதனை வைக்கிறோம். உங்கள் தீர்ப்புக்கு இந்த கிருஷ்ண உணர்வை உங்கள் முன் வைக்கிறோம். நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், மேலும் புரிந்து கொள்ள முயற்சித்தால், பிறகு நீங்கள் உணருவீர்கள், "ஓ, இது மிகவும் உன்னதமானது, இது மிகவும் அருமையாக இருக்கிறது." அதுதான் எங்கள் கோரிக்கை. மிக்க நன்றி.