TA/Prabhupada 0478 - உங்கள் இதயத்தின் உள்ளே ஒரு தொலைகாட்சி பெட்டி இருக்கிறது.



Lecture -- Seattle, October 18, 1968

பிரபுபாதர்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம ஹம் பஜாமி பக்தர்கள்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம ஹம் பஜாமி பிரபுபாதர்: ஆக நாம் கோவிந்தரை வழிபடுகிறோம், முழுமுதற் கடவுள், ஆதி தெய்வம். ஆகையால் கோவிந்தம் ஆதி-புருஷம் தம ஹம் பஜாமி என்ற இந்த ஒலி, அவரை சென்றடைகிறது. அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கேட்பதில்லை என்று நீங்கள் சொல்ல இயலாது. உங்களால் சொல்ல இயலுமா? இயலாது. குறிப்பாக இந்த விஞ்ஞான யுகத்தில், அதிலும் தொலைகாட்சி, வானொலி செய்திகள், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஒளிபரப்பப்படும் பொது, மேலும் உங்களால் கேட்க முடிகிறது, அது எப்படி சாத்தியமாகிறது? ஏன் உங்களது மனமார்ந்த பிரார்த்தனையை கிருஷ்ணரால் கேட்க்க இயலாது? உங்களால் அதை எப்படி சொல்ல இயலும்? இதை யாராலும் மறுக்க இயலாது. ஆகையால், ப்ரேமாஞ்ஜன சுரித-பக்தி விலோச்சந சந்தஹ சதைவ ஹ்ருதயேசூ விலோகயந்தி (ப்ரம்ம சம்ஹிதை 5.38) எவ்வாறென்றால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தொலைகாட்சி மூலம் படங்களை உங்களால் கொண்டு செல்ல இயலுகிறது, அல்லது வானொலி ஒலியை, அதேபோல் உங்களால் தானே தயாரிக்க முடிந்தால், பிறகு நீங்கள் கோவிந்தரை எப்போதும் காண இயலும். அது சிரமமானதல்ல. இது பிரம்ம சம்ஹிதையில், ப்ரேமாஞ்ஜன சுரித-பக்தி விலோச்சந என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெறுமனே உங்கள் பார்வையை, மற்றும் மனதை அவ்வாறு தயார் செய்ய வேண்டும். இதோ உங்கள் இருதயத்திலேயே அந்த தொலைகாட்சி பெட்டி இருக்கிறது. இதுவே பூரணமான யோக. நீங்கள் ஒரு இயந்திரம், அல்லது தொலைகாட்சி சாதனம் வாங்க வேண்டும் என்பதல்ல. அது ஏற்கனவே இருக்கிறது, மேலும் பகவானும் உடன் இருக்கிறார். உங்களால் பார்க்க இயலும், கேட்க இயலும் பேச இயலும், மேலும் நீங்கள் அந்த இயந்திரம் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் அதை பழுதுபாருங்கள், அவ்வளவு தான். பழுதுபார்க்கும் செயல்முறை கிருஷ்ண உணர்வாகும். மற்றபடி, அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது, முழுமையாக, நீங்கள் முழுமையான இயந்திரங்களை உள்ளே பெற்றிருக்கிறீர்கள். பழுது பார்க்க, எப்படி ஒரு இயந்திர வல்லுனர் தேவைப்படுவாரோ, அதேபோல், உங்களுக்கும் ஒரு வல்லுனரின் உதவி தேவைப்பபடும். பிறகு உங்கள இயந்திரம் வேலை செய்வதை உங்களால் காண இயலும். இதை புரிந்துக்கொள்வது கடினமல்ல. இது சாத்தியமற்றது என யாராலும் சொல்ல இயலாது. சாஸ்திரங்களிலும் இதை நாம் கேட்கிறோம். சாது சாஸ்திரா, குரு வாக்யா, திநேதே கரிய ஐக்யா. ஆன்மீக மெய்ஞ்ஞானம் பூரணத்துவமடைய மூன்று இணையான செயல்முறைகள் உள்ளது. சாது. சாது என்றால் ஞானிகள், மெய்ஞ்ஞானம் அடைந்த ஆத்மாக்கள், சாது. மேலும் சாஸ்த்திரம். சாஸ்திரம் என்றால் வேத புத்தகம், அதிகாரபூர்வமான புத்தகம், வேத புத்தகம், சாஸ்திரம். சாது, சாஸ்திரம், மற்றும் குரு, ஒரு ஆன்மீக குரு. மூன்று இணையான கோடுகள். மேலும் நீங்கள் உங்கள் கார் அல்லது வாகனத்தை இந்த இணையான கோடுகள் மீது வைத்தால், உங்களது கார் நேரடியாக கிருஷ்ணரிடம் சென்றுவிடும். திநேதே கரியா ஐக்யா. ரயில் தண்டவாளங்களில் இரண்டு இணையான கோடுகள் இருப்பது போல். அவை சரியாக இருந்தால், ரயில் பெட்டிகள் சீராக சேருமிடம் நோக்கிச் செல்லும். இங்கும், மூன்று இணையான கோடுகள் உள்ளன - சாது, சாஸ்திரம், குரு: ஞானிகள், ஞானிகளின் தோழமை, அங்கீகாரம் பெற்ற குருவை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்ளுதல், மேலும் வேத புத்தகங்களின் மீது நம்பிக்கை. அவ்வளவு தான். பிறகு உங்கள் வண்டி நன்றாக செல்லும், எந்தவித இடையூறுமின்றி. சாது சாஸ்த்திரா குரு வாக்யா, திநேதே கரியா ஐக்யா. ஆகையால் இங்கு பகவத்கீதையில், முழுமுதற் கடவுள் தானே விளக்குகிறார், கிருஷ்ணர். ஆனால் நீங்கள் கூறினால், ”கிருஷ்ணர் தான் இதை கூறியது என நான் எவ்வாறு நம்புவது? யாரோ கிருஷ்ணரின் பெயரில் எழுதியிருக்கிறார்கள் அதாவது 'கிருஷ்ணர் கூறினார்', 'பகவான் கூறினார்.'" என்று. இல்லை. இது சீடர் தொடர் முறை என்று கூறப்படுகிறது. நீங்கள் இந்த புத்தகத்தில் காண்பீர்கள், பகவத் கீதை, கிருஷ்ணர், கிருஷ்ணர் என்ன சொன்னார், மேலும் அர்ஜுனர் எவ்வாறு புரிந்து கொண்டார். இந்த விஷயங்கள் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. மற்றும் சாது, ஞானி, வியாசதேவரிலிருந்து தொடங்கி, நாரதர், பல ஆச்சார்யர்கள், ராமானுஜாச்சார்ய, மத்வாச்சார்ய, விஷ்ணுஸ்வாமி வரை, மற்றும் சமீபத்தில், பகவான் சைதன்ய, இவ்வாறாக, அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்: ”ஆம். இது கிருஷ்ணரால் கூறப்பட்டது.” ஆகையால் இதுதான் ஆதாரம். ஞானிகள் ஏற்றுக் கொண்டுவிட்டால்... அவர்கள் நிராகரிக்கவில்லை. அதிகாரிகள், ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், "ஆம்." இது சாது என்று அழைக்கப்படுகிறது. மேலும் சாதுக்களும், ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர், ஆகையினால் இது வேத புத்தகமாகும். இதுவே பரீட்சை போன்றது. இது இயல்பறிவு. வழக்கறிஞர் சில புத்தங்களை ஏற்றுக் கொண்டால், பிறகு அதுதான் சட்ட புத்தகம் என்று புரிந்துக் கொள்ள வேண்டும். ”இந்த சட்டத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?” என்று நீங்கள் கூற முடியாது. வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொண்டதே அதற்கான சான்று. மருத்துவம் ... மருத்துவர்கள் ஒன்றை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அதுவே அதிகாரமுள்ள மருத்துவம். அதேபோல், ஞானிகள் பகவத் கீதையை வேத புத்தகமாக ஏற்றுக் கொள்ளும் போது அதை நீங்கள் மறுக்க இயலாது. சாது சாஸ்திரம்: ஞானிகள் மேலும் வேத புத்தகங்கள், இரண்டு விஷயங்கள், மேலும் ஆன்மீக குருவுடன், மூன்று, இம்மூன்றும் இணையான கோடுகள், சாது, சாஸ்திரத்தை ஏற்றுக் கொள்பவர்கள். சாது உறுதி செய்த வேத புத்தகத்தை ஆனமீக குரு வேத புத்தகமாக ஏற்றுக் கொள்கிறார். மிக எளிமையான முறை. அதனால் அவர்களுக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. வேத புத்தகங்களில் கூறப்படுபவை ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, மேலும் வேத புத்தகங்களில் கூறப்படுவதை, அந்த விஷயத்தை மட்டுமே ஆனமீக குரு விளக்குகிறார். அவ்வளவுதான். ஆகையால் வேத புத்தகம் ஒரு இடைநிலை ஊடகமே. எவ்வாறென்றால் வழக்கறிஞருக்கும் வழக்கு தொடுத்தவருக்கும்-இடைநிலை ஊடகம் சட்டபுத்தகங்கள். அதேபோல், ஆன்மீக குரு, வேத புத்தகம் .... ஞானி என்பவர் வேத சாரத்தை உறுதி செய்பவர், அதை ஏற்றுக் கொள்பவர். வேத புத்தகம் என்பது ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் ஆன்மீக குரு என்றால் வேத புத்தகத்தைப் பின்பற்றி அதன்படி நடப்பவர். ஆகையால் சில பொருட்கள் ஒரே பொருளுக்கு ஒப்பானதாக இருந்தால் அவை ஒவ்வொன்றும் சமமானதாகும். இதுதான் ஏற்றுக் கொள்ளப்பட் ட நெறி. உங்களிடம் நூறு டாலர் இருந்தால், மேலும் மாற்றொருவரிடம் நூறு டாலர் இருந்தால், மேலும் என்னிடம் நூறு டாலர் இருந்தால், பிறகு நாம் அனைவரும் சமமே. அதேபோல், சாது, சாஸ்திர, குரு வாக்யா, இந்த மூன்று கோடுகளும் இணக்கமாக இருந்தால், பிறகு வெற்றிகரமான வாழ்க்கையே.