TA/Prabhupada 0488 - கடவுளை நேசிக்க துவங்கினால் அனைவரையும் நேசிப்பீர்- சண்டைகள் எப்படி வரும்



Lecture -- Seattle, October 18, 1968

பிரபுபாதர்: ஆம். உபேந்திரன்: பிரபுபாதரே, சில சமயங்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிமுக்கும் இடையில், முஸ்லிமுக்கும் பௌத்தர்களுக்குமிடையில், பௌத்தர்களுக்கும் இந்துவுக்குமிடையில் கடவுள் மீதான அன்பு என்ன என்பதைக் குறித்து வேறுபாடு இருக்கலாம். அவர்கள் அதைக் குறித்து சண்டை போடலாம். பிரபுபாதர்: சண்டை, அவர்கள், கடவுளை நேசிக்காதவர்கள், அவர்கள் சண்டையிடத்தான் வேண்டும். அது..... ஏனென்றால் அவை பூனைகள் மற்றும் நாய்கள். பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையில் எந்தவொரு அமைதியான நிலையையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவை சண்டை போதத்தான் செய்யும். எனவே அவர்கள் என்னவாக இருந்தாலும், அவர்கள் சண்டையிடும் வரை, அவர்கள் பக்குவமான நிலையில் இல்லை என்றே பொருள். சண்டை எங்கே? நீங்கள் கடவுளை நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அனைவரையும் நேசிக்கிறீர்கள். அதுவே அடையாளம். சமஹ ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம் லபதே பராம் (பகவத் கீதை 18.54). சமத்துவத்தின் கட்டத்தை அடைந்த பிறகு, கடவுளை நேசிக்கும் உலகில் நீங்கள் நுழையலாம். அதற்கு முன், நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். சட்டக் கல்லூரியில் நுழைவதற்கு முன்பு போலவே நீங்கள் பட்டதாரி ஆக வேண்டும், அதைப் போல, பக்தி சேவையின் அரங்கில் நுழைவதற்கு முன்பு, அனைத்து உயிரினங்களும் ஒரே தளத்தில் உள்ளன என்பதை நீங்கள் உணர வேண்டும். அதுவே உணர்தல். "இது தாழ்ந்தது," "இது உயர்ந்தது" என்று நீங்கள் எந்த வேறுபாட்டையும் கூற முடியாது. இல்லை. பண்டிதா: சம தர்ஷின (பகவத் கீதை 5.18) ஒருவர் முழுமையான கல்வியறிவைப் பெறும்போது, , ​​அவர் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை, அதாவது, "இவர் மனிதர், அது பசு, அது நாய்." அவர் வெவ்வேறு உடையினால் மூடப்பட்ட ஆத்மா என்றே அவர் காண்கிறார். அவ்வளவுதான். அதுவே அவரது பார்வை, உலகளாவிய சமத்துவ பார்வை. நாய்க்கு உயிர் இல்லை, பசுவுக்கு உயிர் இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆத்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? அது உங்கள் அறிவின் பற்றாக்குறை. உயிரின் அறிகுறி என்ன? உயிரின் அறிகுறி மனிதனிலும், எறும்பிலும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். சிறிய உயிரினங்கள், தாழ்ந்த விலங்குகளுக்கு உயிர் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? அது உங்கள் அறிவின் பற்றாக்குறை. மரங்கள், தாவரங்களுக்கும்கூட உயிர் உள்ளது. எனவே பக்குவமான அறிவு தேவை. ஆகவே பூரண அறிவின் அடிப்படையில் கடவுள் மீதான அன்பே -உண்மையான கடவுள் மீதான அன்பு. இல்லையெனில் அது வெறித்தனம். எனவே வெறியர்கள், அவர்கள் சண்டை போடக்கூடும். அது கடவுளின் மீதான அன்பு அல்ல. நிச்சயமாக, அந்த நிலைக்கு வருவது மிகவும் கடினம், ஆனால் ஒருவர் முயற்சி செய்ய வேண்டும். அதுதான் கிருஷ்ண உணர்வு. நாங்கள் அனைவரும் மாணவர்கள். நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால், இதில் பல நிலைகளும் உள்ளது. ஒரு கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு உள்ளது. மேலும் யோக முறையில், இது ஒரு படிக்கட்டு அல்லது ஒரு மின்தூக்கி போன்றது. எனவே வெவ்வேறு நிலைகளிளான பக்குவம் உள்ளது. எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக்கொண்டிருப்பதே மிகவுயர்ந்த பக்குவ நிலையாகும். அது...... யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்- கதேன அந்தராத்மன ஷ்ரத்தாவான் பஜதே...(பகவத் கீதை 6.47). மிகவுயர்ந்த பக்குவ நிலை என்பது, கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக்கொண்டேயிருப்பது. ராதாராணி. அதுவே மிக உயர்ந்த நிலை. அவளுக்கு வேறு செயலுமே இல்லை. கிருஷ்ணரை மட்டுமே நினைத்து கொண்டிருந்தாள்.