TA/Prabhupada 0489 - நீங்கள் தெருக்களில் ஜெபம் செய்யும்போது, இனிப்பு லட்டுகளை விநியோகம் செய்கிறீர்கள்.



Lecture -- Seattle, October 18, 1968

விஷ்ணுஜன: நாங்கள் எங்கள் சுற்றுகளை உச்சரிக்கும் போதோ, ​​ கீர்த்தனங்களில் உரக்கக் கோஷமிடும்போதோ, நம் மனதை சிந்தனையில் ஈடுபடுத்துவது சரியா? பிரபுபாதர்: இல்லையா? விஷ்ணுஜன: அவர் ஏற்கனவே ... பிரபுபாதர்: இது நடைமுறை வழி. நீங்கள் நினைவில் கொள்ளாவிட்டாலும், அவரை மனதில் கொள்ளும்படி உச்சாடனம் உங்களைக் கட்டாயப்படுத்தும். பார்த்தீர்களா? கிருஷ்ண ஒலி, வலுக்கட்டாயப்படுத்தும். உச்சாடனம் மிகவும் அருமையானது. இந்த யுகத்தில் இதுதான் நடைமுறை யோகம். நீங்கள் தியானிக்க முடியாது. உங்கள் மனம் மிகவும் சஞ்சலமானது, உங்கள் மனதை நீங்கள் நிலைநிறுத்த முடியாது. எனவே பாடுங்கள், மேலும் இந்த ஒலி அதிர்வின் மூலம், அது உங்கள் மனதில் பலவந்தமாக நுழையும். நீங்கள் கிருஷ்ணரை விரும்பாவிட்டாலும், கிருஷ்ணர் உங்கள் மனதிற்குள் நுழைவார். வலுக்கட்டாயமாக. இதுவே எளிமையான முறை. நீங்கள் முயற்சி செய்யத் தேவையில்லை. கிருஷ்ணர் வருகிறார். இது மிகவும் நல்ல செயல்முறை. எனவே, இந்த யுகத்திற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மற்றவர்களும் பயனடைவார்கள். நீங்கள் உரக்க உச்சாடனம் செய்யுங்கள். பழக்கமில்லாத மற்றவர்கள், அவர்களும் குறைந்தபட்சம்... வீதியில், பூங்காவில் அவர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்கள் "ஹரே கிருஷ்ண" என்று கூறுகிறார்கள். அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள்? இந்த கோஷத்தைக் கேட்பதன் மூலம். அவ்வளவுதான். சில நேரங்களில் குழந்தைகள், எங்களைப் பார்த்தவுடன், "ஓ, ஹரே கிருஷ்ண!" மாண்ட்ரீலில் குழந்தைகள், நான் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எல்லா குழந்தைகளும், கடைக்காரர்களும், அங்காடி கடைக்காரர்களும், "ஹரே கிருஷ்ண!" என்று கூறுவார்கள். அவ்வளவு தான். எனவே நாம் ஹரே கிருஷ்ணவை மனதிற்குள் தினித்துள்ளோம். நீங்கள் யோகம் பயிற்சி செய்தால், தியானம் செய்தால், அது உங்களுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் இது பலருக்கும் நன்மை பயக்கும். ஏதேனும் மிக நல்ல ஒன்றை, சில இனிப்பு உருண்டைகளை, நீங்கள் சுவைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், - அது ஒரு நிலை. ஆனால் நீங்கள் அந்த இனிப்பு உருண்டைகளை விநியோகித்தால், அது மற்றொரு நிலையாகும். எனவே சாலையில், வீதிகளில் கோஷமிடுவதன் மூலம், நீங்கள் இனிப்பு உருண்டையை விநியோகிக்கிறீர்கள். (சிரிப்பு) நீங்கள் மட்டும் உண்பதற்கு, நீங்கள் கருமியல்ல. நீங்கள் மிகவும் தாராளமாக இருப்பதால், நீங்கள் மற்றவர்களுக்கு விநியோகிக்கிறீர்கள். இப்போது ஸங்கீர்த்தனம் செய்யுங்கள், விநியோகியுங்கள் (சிரிப்பு).