TA/Prabhupada 0493 - இந்த ஸ்தூல உடம்பு ஓய்வெடுகும் போது, சூக்ஷ்ம உடம்பு செயல்படுகிறது



Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974


சற்றே யோசிக்க, நமக்கே புரியும் நாம் இந்த உடலில், இந்தப் பிறவியில் கூட... இரவில் நமக்கு வேறு உடல் கிடைக்கிறது. நாம் கனவு காண்கிறோம். கனவில் புலி வருகிறது. நாம் காட்டுக்குச் செல்கிறோம், அங்கே புலி இருக்கின்றது அது நம்மை கொல்ல வருகின்றது. பிறகு நான் அழுகிறேன், உண்மையிலேயே நான் அழுகிறேன். அல்லது மாறாக நான் என் அன்புக்குரியவரை நாடிச் செல்கிறேன் ஆணோ, பெண்ணோ நாம் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கிறோம், ஆனால் உடல் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இல்லையேல் நாம் ஏன் அழுகிறோம்? விந்து நீர் என் வெளியேறுகிறது? மக்களுக்கு புரிவதில்லை நாம் இந்த ஸ்தூல உடம்பை விட்டு சூட்சும உடலுக்குள் நுழைகிறோம் என்பது. சூட்சும உடம்பு இருக்கிறது அது உள்ளே இருக்கிறதா என்பது கேள்வி அல்ல. நாம் ஒன்றாக கட்டப்பட்டு இருக்கிறோம். இந்த உடல் எப்படி சட்டை மேல் சட்டை போன்றவற்றால் கட்டப்பட்டு இருக்கிறதோ அதுபோல. மேல்சட்டை என்பதுதான் ஸ்தூல உடம்பு சட்டை என்பது தான் சூட்சும உடம்பு. இந்த ஸ்தூல உடம்பு இளைப்பாறும் போது சூட்சும உடம்பு செயலாற்றுகிறது. மூடர்கள் இதை புரிந்து கொள்ள முடியாது. "நான் ஒரு உடலுக்குள் அடக்கமாக இருக்கின்றேன் சூட்சுமமாகவோ, மூலமாகவோ" பாவப்பட்ட ஒருவர் அதிகமான பாவங்களைச் செய்தவர் ஸ்தூல உடம்பை பெறுவதில்லை. சூட்சும உடம்பிலேயே தங்கி விடுகிறார். அதற்குப் பெயர்தான் பேய். நீங்கள் கேட்டிருப்பீர்கள். சிலர் பார்த்துக்கூட இருப்பீர்கள். பேய் என்பது இருக்கிறது. பேய் என்பது உடல் கிடைக்காத ஒன்று. மிக அதிகமான பாவச் செயல்களை செய்தபடியால் சூட்சும உடம்பிலேயே இருக்கும்படி விடப்பட்டு இருக்கிறான். அவனுக்கு ஸ்தூல உடம்பு கிடைப்பதில்லை. வேத முறைப்படி ஷ்ராதம் என்ற ஒரு சடங்கு இருக்கின்றது. தந்தையாருக்கோ பிற உறவினருக்கோ ஸ்தூல உடம்பு கிடைக்காதபோது, அந்த சடங்குகள் செய்வதன் மூலம் அவருக்கு ஸ்தூல உடம்பு கிடைக்குமாறு செய்யப்படுகின்றது. அதுவே வேத முறை.

எனவே நமக்குப் புரிய வேண்டியது என்னவென்றால், நாம் சிலசமயம் ஸ்தூல உடம்பில் இருக்கின்றோம் சிலசமயம் சூக்ஷ்ம உடம்பில் இருக்கின்றோம் எப்படியோ ஸ்தூலமாகவோ சூக்ஷ்ம மாகவோ இருந்து கொண்டுதான் இருக்கின்றோம். எனவே நமக்கு அழிவு இல்லை. ஆனால் நான் சூக்ஷ்ம உடம்பை கொண்டு செயலாற்றும் போது ஸ்தூல உடம்பை மறந்து விடுகின்றேன். அதேபோல ஸ்தூல உடம்பை கொண்டு செயலாற்றும் போது சூக்ஷ்ம உடம்பை மறந்து விடுகின்றேன். எனவே என்னால் ஸ்தூல உடம்பையோ சூக்ஷ்ம உடம்பையோ ஏதோ ஒன்றை தான் ஏற்றுக்கொள்ள முடிகிறது நான் அழிவற்றவன் நிலையானவன். இப்போது இந்த ஸ்தூல உடம்பையும் சூக்ஷ்ம உடம்பையும் எவ்வாறு தவிர்ப்பது என்பதே நம்முடைய பிரச்சனை. அப்படி என்றால் நாம் நம்முடைய உண்மையான உடலிலேயே இருக்க வேண்டும் அதுவே ஆன்மீக உடல், இந்த ஸ்தூல சூக்ஷ்ம உடலுக்கு வரவே கூடாது, அதுவே நம்முடைய நிலையான வாழ்வாகும். அதாவது... அதை நாம் அடைய வேண்டும். இந்த மனித வாழ்வானது நமக்கு இயற்கையால் கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு பரிசு. ஏதோ ஒருவகையான ஸ்தூல சூக்ஷ்ம உடம்பை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டி இருப்பதால் இந்தப் புதிய நிலையில் இன்பமும் துன்பமும் வந்து நம்மை மாற்றுகிறது என்பதை நாம் இப்போது உணரலாம். நம்முடைய சுக துக்கங்களுக்கு இதுவே மூல காரணம். இந்த ஸ்தூல சூக்ஷ்ம உடலில் இருந்து நாம் வெளியேறி உண்மையான ஆன்மீக உடலிலேயே தங்கி இருப்போமானால், நாம் சுகதுக்கங்களில் இருந்து விடுபடுவோம். இதுவே முக்தி எனப்படும். முக்தி என்பது சமஸ்கிருதச் சொல். முக்தி என்பது விடுதலை, இனி நமக்கு ஸ்தூல உடம்பு மில்லை சூக்ஷ்ம உடம்பும் இல்லை. நாம் நமது உண்மையான ஆன்மீக உடலிலேயே இருக்கலாம். இதற்கு பெயர் முக்தி. முத்தி என்றால்.... முக்திர் ஹித்வா அன்யதா ரூபம் ஸ்வ-ரூபேண வ்யவஸ்திதி: (SB 2.10.6)என்று பாகவதத்தில் விவரிக்கப்படுகிறது. அதுவே முக்தி எனப்படும். அன்யதா ரூபம்.