TA/Prabhupada 0494 - நெப்போலியன் உறுதியான வளைவுகளைக் கட்டினான், ஆனால் அவன் எங்கு போனான்
Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974
அன்யதா ரூபம் என்றால் வேறு விதமாக, வேறு விதமாக வாழுதல் அல்லது தங்கி இருத்தல். வேறு விதமாக என்றால் நான் ஒரு ஜீவாத்மா எனக்கு ஆன்மிக உடல் இருக்கின்றது. ஆனால் எப்படியும் சந்தர்ப்பவசமாக என் ஆவலின் காரணமாக, எனக்கு சில சமயங்களில் மனித உடல், சில சமயங்களில் நாயின் உடல், சில சமயங்களில் பூனையின் உடல், சில சமயம் மரத்தின் உடல், சில சமயம் தேவர்களின் உடல் கிடைக்கிறது. 8,400,000 விதமான உடல்களை கொண்ட உயிர் வாழிகள் இருக்கின்றன. என் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நான் மாறிக் கொண்டு இருக்கின்றேன். மேலும் என் தொற்றுக்கு ஏற்றவாறு, காரணம் குண-ஸங்க: அஸ்ய, இவை சூட்சுமமான விஷயங்கள். மனிதனுக்கு தேவையான உண்மையான ஞானம் இதுதான், ஏதோ ஒன்றை தற்காலிகமான மகிழ்ச்சிக்காக உருவாக்குவதில்லை. அது முட்டாள்தனம். மூடத்தனம். சமய விரயம். தற்போதைய இந்த உடலின் சுகத்திற்காக ஏதோ ஒன்றை உருவாக்குவோமானால், நாம் சௌகரியமாக வாழ முடியும், ஆனால் - "நாம் சவுகரியமாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம்" அது நமக்கே தெரியும். ஒரு மனிதன் மிக அழகான வீட்டினை மிக உறுதியான வீட்டினை கட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விழுந்து விடாது. அது இருக்கட்டும், ஆனால் நாம் நமக்காக என்ன செய்து கொண்டோம், இறக்காமல் இருந்து இதனை அனுபவிக்கும் பொருட்டு? "இல்லை. இருக்கட்டும். நான் ஒரு உறுதியான வீட்டை கட்டி விடுகின்றேன்." எனவே வீடு இருக்கின்றது. நாம் இருக்கின்றோம். பிறகு வலுவான நாடு. நெப்போலியன் கட்டியது போல மிகவும் உறுதியான வளைவுகள், ஆனால் அவன் எங்கு சென்று விட்டான் யாருக்கும் தெரியாது. எனவே பக்தி வினோத தாக்குர் சொல்கிறார், பாடுகிறார், ஜட-பித்யா ஜதோ மாயார வைபவ தோமார பஜனே பாதா. பௌதிக இன்பத்திலும் முன்னேற்றத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறுவோமோ, அந்த அளவுக்கு நாம் நமது உண்மையான அடையாளத்தை மறந்து விடுகின்றோம். இதுவே முடிவு.
எனவே நமக்கு ஒரு தனியான அலுவல் உண்மையான அலுவல் இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே தன்னை உணர்தல். "நான் இந்த உடல் அல்ல" இதுவே மெய்ஞானம். இதையே கிருஷ்ணர் தொடக்கத்தில் அறிவுறுத்துகின்றார், "நீ இந்த உடல் அல்ல" என்று. அதுவே முதல் புரிதல், முதல் அறிவு. நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், "நான் இந்த உடல் அல்ல நான் ஆத்மா. எனக்கு வேறு வேலை இருக்கின்றது." அவை தற்காலிக செயல்களோ வேலைகளோ அல்ல, நாயோ மனிதனோ புலியோ மரமுமோ மீனோ போன்று அல்ல. அதற்கென செயல்கள் இருக்கின்றன. உடலுக்கு அவசியமான தேவையை போலவே இதுவும். ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச. உணவு உறக்கம் உடல் இன்பம் மற்றும் தற்காப்பு. ஆனால் மனித வாழ்க்கையில் எனக்கு வேறு ஒரு வேலை இருக்கின்றது அதுவே தன்னை உணர்தல். இந்த உடல் என்னும் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியேறுவதற்கான அறிவு இந்த அறிவு இல்லாமல் வேறு எந்த அறிவில் நாம் முன்னேறினாலும் அது மூடத்தனம் ஆகும். ஷ்ரம ஏவ ஹி கேவலம்(SB 1.2.8).