TA/Prabhupada 0495 - நான் கண்களை மூடிக்கொண்டுவிட்டால், அபாயம் இருக்காது



Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974

ஷ்ரம ஏவ ஹி கேவலம் (SB 1.2.8) ஷ்ரம ஏவ ஹி கேவலம் என்றால் வேலை மட்டுமே செய்வது, தேவை இல்லாமல் நேரத்தை வீணடிப்பது. இயற்கையின் நியதியை நாம் தடுக்க முடியாது. இந்தப் பிறவியில் நீ பெரிய தலைவனாக இருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம் பிரதம மந்திரியாக.. எல்லாம் இருக்கலாம் ஆனால் உன் மனப்பான்மையைப் பொறுத்து நீ உன் அடுத்த பிறவியை உருவாக்குகிறாய். எனவே நீ இந்த பிறவியில் பிரதம மந்திரி அடுத்த பிறவியில் நாய் ஆகிவிடுகிறாய். பயன் எங்கே போனது? அதனால்தான் இந்த நாத்திக மூடர்கள் அடுத்த பிறவியே இல்லை என்று மறுக்கின்றார்கள். அது அவர்களுக்கு நல்லதல்ல. மிகவும் மோசமானது.‌ அவர்கள் மறுபிறவியை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால்.... அவர்களுடைய இந்தப் பிறவி பாவகரமானது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆக எந்தவிதமான வாழ்க்கை இயற்கையின் சட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு கிடைக்கவிருக்கிறது? அதை நினைக்கும் போதே அவர்கள் நடுங்குகிறார்கள். "அதை மறுத்து விடுவதே மேல் மறுத்து விடுவதே மேல்" என்று எண்ணுகிறார்கள். முயலைப் போல, எதிரி கண்முன்னே நிற்கிறான், தான் சாகப் போவது உறுதி, இருந்தாலும் அது நினைக்கிறது, " நான் கண்களை மூடிக் கொள்கிறேன். அபாயத்திலிருந்து வெளி வந்து விடுவேன். " என்று. இதுதான் நாத்திக நோக்கு, அது ஒன்று இருக்கிறது என்பதையே அவர்கள் மறக்க முயல்கின்றனர்.... அதனால் அதனை மறுக்கின்றனர், "மறுபிறவி இல்லை" என்கின்றனர். ஏன் இல்லை? கிருஷ்ணர் கூறுகிறார் " நீ குழந்தையின் உடலில் இருந்தாய்... அந்த உடல் இப்போது எங்கே? நீ அதைத் துறந்து விட்டாய். நீ இப்போது வேறு உடலில் இருக்கிறாய். அதுபோலத்தான் இந்த உடலும் மாறிவிடும். உனக்கு வேறொரு உடல் கிடைத்துவிடும்" சொல்வது யார்? கிருஷ்ணர். மிகவும் உயர்ந்த அதிகாரியான அவரே சொல்கிறார். எனக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் சொல்லும்போது.... இதுவே ஞானத்தை உணரும் முறை. முழுமை பெற்றவர்களிடம் இருந்து தான் நாம் ஞானத்தை ஏற்க வேண்டும். நான் மூடனாக இருக்கலாம் ஆனால் ஒரு முழுமையான மனிதனிடமிருந்து நான் பெற்ற ஞானமானது முழுமையான தாகும். இதுவே நமது செயல்முறை. இதில் கற்பனைக்கு இடம் இல்லை. இது ஜெயிக்கும் ஜெயிக்காமல் இருக்கும், ஆனால் நீ ஞானத்தை உயர்ந்த அதிகாரியிடமிருந்து ஏற்பாயானால் உன் ஞானம் முழுமையானதாக இருக்கும். "எனது தந்தை யார்?" என்று யோசிப்பதை போல உன் தந்தை யாரென்று நீ யோசிக்கலாம் ஆனால் அந்த யோசனை உனக்கு உதவாது. நீ உன் தந்தை யார் என்று ஒருபோதும் உணரப் போவதில்லை. ஆனால் உன் தாயிடம் செல், அவளே உயர்ந்த அதிகாரி. அவள் உடனே கூறி விடுவாள், "இதுதான் உன் தந்தை" என்று, அது போதும். உன் தந்தையை அறிவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. வேறு வழியே இல்லை. இதுவே நடைமுறை வழி. உன் தாயினுடைய அதிகாரப்பூர்வமான அறிக்கையைத் தவிர வேறு எந்த வழியிலும் உன் தந்தையை நீ அறிய முடியாது. அது போல தான் உன் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவன் மானஸ-கோசர, நீ யோசிக்கவும் பேசவும் முடியாது "கடவுளைப் பற்றிக் கூற முடியாது கடவுளைப் பற்றி நினைக்க முடியாது" என்றெல்லாம் சில சமயங்களில் கூறுவர். அது இருக்கட்டும். ஆனால் கடவுளே உன் முன்னால் வந்து தோன்றி "நான் இதோ இருக்கிறேன்" என்று கூறினால் அதில் என்ன கஷ்டம்? நான் பூரண மற்றவன். எனக்குத் தெரியாது. இருக்கட்டுமே. ஆனால் கடவுளே முன்வந்து சொல்கிறார் என்றால்.... (இடைவெளி)