TA/Prabhupada 0501 - கிருஷ்ண பக்திக்கு வரவில்லையென்றால், கவலையற்று இருத்தல் இயலாது



Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972


ஆக நீ சந்தோஷம் அடைய முடியாது. இந்த ஆண்களும் பெண்களும் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் யாவரும் மோட்டார் கார் நாகரிகத்தில் பழகிவிட்டனர். அதில் ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொண்டு விட்டனர். மோட்டார் கார், இரவில் கூடிப் பழகுதல் மற்றும் குடிப்பழக்கம் இவற்றை நன்கு பழகி விட்டனர். இதில் சுகமில்லை. அதனால் கிருஷ்ண பக்திக்கு வந்துவிட்டனர். ஆகவே, நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: (ப.கீ 2.16). அபாவ:, ஸத:. அசத், இல்லாத ஒன்று, அதனை ஏற்றுக் கொண்டபடியால் துன்பப் படுகிறோம். பிரகலாத் மகராஜ் இதனை விளக்குகிறார். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத் (ஸ்ரீ.பா. 7.5.5). ஸதா ஸமுத்விக்ன-தியாம். நாம் எப்போதும் கவலையோடு இருக்கின்றோம். அதுதான் உண்மை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கவலைகள் இருக்கின்றன. ஏன்? அஸத்-க்ரஹாத். ஏனெனில் எல்லாம் இந்த பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளோம். அஸத்-க்ரஹாத். தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம் ஸதா ஸமுத்விக்ன-தியாம். தேஹினாம். தேஹினாம் என்றால்.. தேஹா, தேஹீ என்பன பற்றி நாம் முன்பே பேசி இருக்கிறோம். தேஹீ என்றால் இந்த உடலுக்கு சொந்தக்காரர். எனவே நாம் ஒவ்வொருவரும் தேஹி, மனிதனோ, மிருகமோ, மரமோ எதுவோ எல்லாமே ஒவ்வொரு உயிர்வாழியும் பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே அவர் தேஹி எனப்படுகிறார். எனவே தேஹினாம், ஒவ்வொரு தேஹியும் பௌதீக உடலை எடுத்துக்கொண்டு உள்ளபடியால் கவலைகள் நிறைந்தவனாகவே இருக்கின்றான்.

நம் கவலை அற்றவர்களாக ஆவது கிருஷ்ண பக்திக்கு வந்தாலொழிய முடியாது. அது சாத்தியமில்லை. கிருஷ்ணா உணர்வு பெற வேண்டும். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா (ப.கீ 18.54) - உடனே நீ கவலையற்றவன் ஆகிவிடுவாய். கிருஷ்ண உணர்வு என்னும் நிலைக்கு வராத பட்சத்தில் நீ கவலைகள் நிறைந்தவனாகவே இருப்பாய். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம், வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத (ஸ்ரீ.பா. 7.5.5), இதுவே பிரகலாத‌ மஹராஜ் நமக்கு அளிக்கும் அறிவுரை. அதாவது இந்த கவலையான நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸதா ஸமுத்விக்ன-தியாம், அதன்பின் ஹித்வாத்ம-பாதம், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம்.. க்ருஹம் அந்த-கூபம்.. கிரக... என்றால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. முக்கியமாக அதற்கு வீடு என்று பொருள் வீடு. வீட்டிற்காக ஏங்குதல். வேத நாகரீகத்தை பொருத்தவரை வீட்டை விட்டு வெளியேறுதல். வீட்டை விட்டு வெளியேறு. சன்யாசம் எடுத்துக்கொள் வானப்பிரஸ்த திற்கு செல். மரணம் சம்பவிக்கும் கடைசி நேரம் வரையில் கிருகஸ்தனாகவே இருக்காதே பாட்டனாக முப்பாட்டனாக. அது நமது வேதக் கலாச்சாரம் அல்ல. சிறிது வளர்ந்த உடனேயே பஞ்சாஷோர்த்வம் வனம் வ்ரஜேத், அவன் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது க்ருஹம் அந்த-கூபம். க்ருஹம் அந்த-கூபம். நாம் மிகவும் உன்னிப்பாக விளக்குவோம் ஆனால் ஜீரணம் செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் நாம் சாஸ்திரம் கூறும் கிரகம் என்பது பற்றி புரிந்து கொண்டே ஆக வேண்டும். கிரகம் அதற்கு இன்னொரு வார்த்தை அங்கனாஷ்ரயம். அங்கனா என்றால் பெண். மனைவியின் பாதுகாப்பில் வாழ்வது. அங்கனாஷ்ரயம். எனவே சாஸ்திரம் சொல்கிறது இதனை விடுத்து பரமஹம்ஸ‌ ஆஸ்ரயம் செல் என்று. அப்போதுதான் உன் வாழ்க்கை பாதுகாக்கப்படும். இல்லையேல் பிரகலாத மஹராஜ் சொல்வதைப் போல க்ருஹம் அந்த-கூபம், "இந்தக் குடும்ப வாழ்க்கை என்னும் இரண்டு கிணற்றிலேயே உன்னை நீ வைத்துக் கொள்வாயானால், நீ ஆனந்தமாகவே இருக்க முடியாது" ஆத்ம-பாதம். ஆத்ம-பாதம். என்றால் நீ ஆன்மிக வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ளவே முடியாது என்பதாகும். எப்போதும் அப்படி இல்லை, பொதுவாக. பொதுவாக குடும்ப வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் மிகுந்த பற்றுக் கொண்டவர்... இன்னும் விரிவாக குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை சமுதாய வாழ்க்கை தேச வாழ்க்கை சர்வதேச வாழ்க்கை. இவை அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம். அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம்.