TA/Prabhupada 0500 - இந்த பௌதீக உலகத்தில் நிரந்தரமான இன்பத்தை அனுபவிக்க முடியாது



Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972

பிரபுபாதர்: உனக்கு உண்மையான இன்பம் உண்மையான நன்மை வேண்டுமானால் கிருஷ்ண பக்தன் ஆக முயற்சி செய். அது உனக்கு உண்மையான இன்பத்தைத் தரும். மாறாக, நீ இந்த பௌதீக நிலையிலேயே பாதிப்பு அடைவாய் ஆனால்

நாஸதோ வித்யதே
பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோர் அபி த்ருஷ்டோ 'ந்தஸ்
த்வனயோஸ் தத்த்வ-தர்ஷிபி:
(ப.கீ. 2.16)

தத்த்வ-தர்ஷிபி: மெய்ஞானத்தைக் கண்டவர், அல்லது மெய்ஞானத்தை உணர்ந்தவர்கள் பொருளுக்கு நிலையான தன்மை இல்லை மேலும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்று அறிந்துள்ளனர் இந்த இரண்டையும் புரிந்து கொள்ளலாம். அசத். அசத்த என்றால் ஜடப்பொருள். நாஸதோ வித்யதே பாவ:. அஸத:, எந்த அசத்.... இந்த பௌதீக உலகத்தில் அசத்தோ, அசத்து என்றால் நிலைக்காது தற்காலிகமானது. எனவே தற்காலிகமான உலகில் நிலையான ஆனந்தத்தை எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால் அவர்கள் ஆனந்தமாக முயல்கின்றனர். எனவே பல திட்டக் குழுக்கள், கற்பனையில். ஆனால் உண்மையில் இன்பம் இல்லை. பல குழுக்கள். ஆனால் அங்கு.... தத்‌வ தர்ஷி அவர்களுக்கே தெரியும்... மெய்ஞானத்தை உணர்ந்தவர் அல்லது நேரில் கண்டவர் தத்துவ தர்ஷி அவருக்கு தெரியும் இந்த பௌதிக உலகில் இன்பம் இருக்காது என்று. இந்த முடிவுக்கு நாம் வர வேண்டும். பௌதீக உலகத்தில் இன்பமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது‌ வெறும் மாயை.

ஆனால் மக்கள் பெரும் முட்டாள்களாக உள்ளனர் அதுவும் தற்காலத்தில், பௌதீக உலகத்தில் எப்படி இன்பமாக இருக்கலாம் என்பதைப் பற்றியே அவர்கள் திட்டமிடுகின்றனர். நாம் நடைமுறையில் காண்கின்றோம். நம் நாட்டில் என்ன நடக்கின்றது? பௌதீக நாகரிகத்திற்கு அது மிக மிகப் பின்தங்கி இருக்கின்றது. அமெரிக்காவில் எத்தனையோ மோட்டார் கார்கள் இருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று மனிதருக்கு ஒருவர் கார் வைத்து இருக்கின்றார். நாம் ஏழை சன்யாசிகள் பிரம்மச்சாரிகள். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் நான்கு அல்லது ஐந்து தேர்கள் இருக்கின்றன ஒவ்வொரு கோவிலிலும் அருமையான தேர். மந்திரிகள் கூட இந்தியாவில் அத்தகைய தேர்களை கற்பனை செய்தும் பார்க்க முடியாது பெரிய பெரிய தேர்கள். பல பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவை எப்போதும் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன, மேம்பாலங்கள், ஒன்றை அடுத்து ஒன்று ஒன்றை அடுத்து ஒன்று ஒன்றை எடுத்து.... அது இப்போது நான்கு ஐந்து என்ற நிலைக்கு வந்துள்ளது. நான்கு ஐந்து அடுக்கு சாலைகள்... இதில் எப்படி இன்பமாக இருப்பது? எனவே, தத்த்வ-தர்ஷிபி: ந அஸத:. இந்த பௌதீக உலகத்தில் நிரந்தரமாக இன்பம் அடைதல் முடியாது. அது சாத்தியமில்லை. எனவே இன்பம் அடைவதற்காக உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம் (ஸ்ரீ.பா. 10.14.58), என்று இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதே உதாரணத்தை இங்கும் எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவில் பல மில்லியன் மக்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். எத்தனை? புள்ளி விபரம் என்ன? ஞாபகம் இல்லை?

சியாம சுந்தரா: 60,000 என்று நினைக்கிறேன்....

பிரபுபாதர்: 60,000? இல்லை இல்லை அழுவதை விட அதிகம்.... எத்தனையோ மக்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். நம் மாணவர்களை கூட சிலர் சில மாதங்கள் முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தனர். சாலை விபத்துகளில் உயிர் இழப்பது என்பது அமெரிக்காவில் அதிசயம் இல்லை. ஏனெனில் வாகனங்கள் அத்தகைய வேகத்தில் பயணிக்கின்றன 70 80 90 மைல் கணக்கில் அப்படி ஒரு மோட்டார் கார் மட்டுமல்ல ஒன்றன்பின் ஒன்றாக நூறு கார்கள். ஒன்று வேகம் குறைந்தாலும் உடனே "டரக் ட்ரக்"