TA/Prabhupada 0503 - குருவை ஏற்றல் என்பது அவரிடமிருந்து மெய்ஞானத்தை கேட்டறிதல்
Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972
வேதாந்த சூத்திரத்தின் இயல்பான விரிவுரையே ஸ்ரீமத் பாகவதம். ஜீவஸ்ய தத்த்வ-ஜிஜ்ஞாஸா, ஜீவஸ்ய தத்த்வ-ஜிஜ்ஞாஸா இது தான் நமது வாழ்க்கை. அனைத்து ஜீவன்களினுடையதுமான ஜீவஸ்ய. அனைத்து ஜீவன்களும் என்றால் முக்கியமாக மனிதப் பிறவிகள். ஏனெனில் பூனைகளும் நாய்களும் பிரம்மம் அல்லது மெய்ஞானம் பற்றி விசாரம் செய்வது இயலாது. இந்த மனிதப்பிறவியானது, ஒருவரும் வெறும் விலங்குளைப் போன்ற இன்பம் அனுபவிப்பதற்காக மட்டும் செலவளித்துவிடக் கூடாது. அது வெறும் நேர விரயம். அவன் மெய்ஞானத்தைத் தேடவேண்டும். அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. அதனைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தத் வித்தி, தத்த்வ-தர்ஷிபி:. அதுவும் ஒரு தத்த்வ-தர்ஷிபி:. யிடமிருந்து. ஜ்ஞானின:, தத்த்வ-தர்ஷின:, இவையே அந்தச் சொற்கள். இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு சமுதாயத்திலும் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்கு பலவற்றையும் புரிந்து கொள்வதற்காக அனுப்பப்படும் முறை இருக்கின்றது. எனவே நம் ஆன்மீக புரிதலுக்காக, தத்-விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் (மு.உ. 1.2.12) அபிகச்சேத் என்றால் கட்டாயம் மாற்றுக்கருத்தே இல்லை. ஒருவர் தான், "போக மாட்டேன்" என்று சொல்ல முடியாது. முடியாது. நீ போகவில்லை என்றால் ஏமாற்றுகிறாய் என்று அர்த்தம். அதுவே நமது வைனவ முறையும் கூட. ஆதௌ குர்வாஷ்ரயம். முதலில் ஒரு உண்மையான ஆன்மீக குருவை அடைந்து அவர் சரண் பற்ற வேண்டும். ஆதௌ குர்வாஷ்ரயம் ஸத்-தர்ம-ப்ருச்சா.
நான் மாட்டேன் என்று சொல்லுவதெல்லாம் கூடாது, ஏனென்றால் அதுவே முறையாகிவிட்டது: "நான் ஒரு குருவை உருவாக்குகிறேன். என் வேலை முடிந்துவிட்டது எனக்கு ஒரு குரு கிடைத்து விட்டார்" தத்த்வ-ஜிஜ்ஞாஸா. ஜீவஸ்ய தத்த்வ-ஜிஜ்ஞாஸா. இல்லை. குரு என்பவர் மெய்ஞானத்தை பற்றிய நமது கேள்விகளுக்கு பதில் சொல்பவர். ஜிஜ்ஞாஸு: ஷ்ரேய உத்தமம். இவை வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஜிஜ்ஞாஸு: என்றால் அறியும் ஆர்வம் உடையவர் என்று பொருள். ஜிஜ்ஞாஸு: ஷ்ரேய உத்தமம். ஷ்ரேய:. ஷ்ரேய: என்றால் பயனுடையது என்று பொருள். எனவே உத்தமம் என்பது மிக உயர்ந்த பயன். வாழ்க்கையின் உயர்ந்த பயனை அறியும் ஆர்வம் உடையவர் ஒரு குருவினை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் உடையவர்.
- தஸ்மாத் குரும் ப்ரபத்யேத
- ஜிஜ்ஞாஸு: ஷ்ரேய உத்தமம்
- ஷாப்தே பரே ச நிஷ்ணாதம்
- ப்ரஹ்மண்யுபஷமாஷ்ரயம்
இதுவே நமது கிருஷ்ண உணர்வு இயக்கம். வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து கொள்வதற்கு நாம் மக்களை எங்கு பயிற்றுவிக்கிறோம். முக்கியமாக ஆன்மீக வாழ்க்கையின் மதிப்பை, பாகவத. தர்மான் பாகவதான் இஹ. எனவே ஆன்மீக வாழ்க்கையை புரிந்து கொள்ளும் ஒருவன் உண்மையான நிலையை புரிந்து கொள்கிறான் அதனால் அவன் விழிப்புணர்வு அடைகிறான். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, கடமை என்ன, நோக்கம் என்ன. அதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். மிக்க நன்றி ஹரே கிருஷ்ணா.