TA/Prabhupada 0504 - அனைத்து நோக்கிலிருந்தும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்கவேண்டும்

From Vanipedia
Jump to: navigation, search
Go-previous.png முந்தைய பக்கம் - வீடியோ 0503
அடுத்த பக்கம் - வீடியோ 0505 Go-next.png

அனைத்து நோக்கிலிருந்தும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்கவேண்டும்
- Prabhupāda 0504


Lecture on SB 1.10.2 -- Mayapura, June 17, 1973

இந்த உலகை உருவாக்கியவர் கிருஷ்ணர் அது சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். யார் பராமரிப்பாளர்? அவருடைய பிரதிநிதிகள் தான். அசுரர்கள் அல்ல. எனவே அரசன் என்பவன் கிருஷ்ணருடைய பிரதிநிதியாக இருக்க வேண்டும். அவனே இந்த உலகத்தை சரியாக பராமரிப்பான். அனைத்தையும் கிருஷ்ணனுக்காக எப்படி பயன்படுத்துவது என்று ஒரு வைஷ்ணவன் அறிவான். இந்தப் படைப்பின் நோக்கமே கட்டுண்ட ஆன்மாக்களுக்கு முக்தி பெறுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுப்பதுதான். அதுவே நோக்கம். உலகம் முழுவதும் அழிந்து விட்ட பின்னரும் அனைத்து உயிர் வாழிகளும் மகாவிஷ்ணுவின் உடலுக்குள் புகுந்து விடுகின்றனர். பின்னர் மறுபடியும் அடைப்பு ஏற்படும்போது இந்த உயிர்வாழிகள் வெளியே வருகின்றனர், அவரவர் கடந்த கால நிலையை பொறுத்து. இந்த அயோக்கியன் டார்வினின் கோட்பாடை , உயிரானது கீழ் நிலையிலிருந்து உருவானது என்பதை நாம் ஏற்றுக் கொள்வதற்கில்லை... அப்படி ஒரு முன்னேற்றம் இருக்கின்றது ஆனால் படைப்பின் போது அனைத்துமே இருந்திருக்கின்றன. 8,400,000 விதமான உயிரினங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் தரப் பிரிவு இருந்திருக்கின்றது. ஆகவே ஒருவருடைய கடந்தகால கர்மாவின் அடிப்படையில் கர்மணா தைவ-நேத்ரேண (SB 3.31.1), ஒவ்வொருவரும் வெளியே வருகிறார், வெவ்வேறு விதமான உடலை பெறுகிறார், தன் கருத்தை தொடங்குகிறார். மறுபடியும் இன்னொரு வாய்ப்பு. " ஆம். மனிதனின் அறியும் நிலைக்கு நாம் வருகிறோம். கிருஷ்ணர் உடனான நம்முடைய உறவை புரிந்துகொண்டு முக்தி அடைய முயற்சிக்க வேண்டும். வீட்டுக்குச் செல்லுங்கள் இறைவனுடைய திருவீட்டிற்குச் செல்லுங்கள்..." இந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விடுவீர்கள் ஆனால் - இந்தப் படைப்பை அதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது- நீங்கள் மறுபடியும் இங்கேயே இருந்து விடுவீர்கள். மறுபடியும் எல்லாம் அழிவுக்கு உட்படும் போது செயலற்ற நிலையில் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து விடுவீர்கள். மறுபடியும் படைக்கப்பட்டார்கள்.

இது பெரிய விஞ்ஞானம். மனித வாழ்க்கையின் கடமை என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பின்னர் இந்த கடமையை மனிதனையும் மனித சமூகத்தையும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு நல்ல மன்னன் மஹராஜ் யுதிஷ்டிரரைப் போல இருக்க வேண்டும். மன்னன் இறைவனின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். குரு வம்சத்து அசுரர்களைக் கொன்ற பிறகு, குரோர் வம்ஷ-தவாக்னி-நிர்ஹ்ருதம் ஸம்ரோஹயித்வா பவ-பாவனோ ஹரி: நிவேஷயித்வா நிஜ-ராஜ்ய ஈஷ்வரோ யுதிஷ்டிரம்...

"யுதிர்ஷ்ட மகாராஜர் சிம்மாசனத்தில் அமர்ந்து உலகத்தை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்ததை" கண்டபோது ப்ரீத-மனா பபூவ ஹ, அவர் மிகுந்த திருப்தி அடைந்தார் "இதோ எனது உண்மையான பிரதிநிதி இவன் மிகச்சரியாக செயலாற்றுவான்"

எனவே இந்த இரண்டும் நடந்து கொண்டிருக்கின்றது. தன் சொந்த நோக்கங்களுக்காக அரசாட்சியை கைப்பற்ற முயல்வோர் ஒருபுறம் கொல்லப்பட்டார். கொல்லப்படுவார். எப்படியோ கொல்லப்படுவார். கிருஷ்ணரின் பிரதிநிதியாக இருந்து அரசாட்சியை செவ்வனே நடத்தும் கடமையை எடுத்துக் கொள்வோர் ஒருபுறம் அவர் கிருஷ்ணரால் அருள் செய்யப்படுவார். கிருஷ்ணரும் மகிழ்ச்சியடைவார். தற்போது இருக்கின்ற குடியரசு ஆட்சி முறை... இதில் யாரும் கிருஷ்ணரின் பிரதிநிதி அல்ல. அனைவரும் அசுரர்கள். இந்த அரசாட்சியின் கீழ் அமைதியும் செழிப்பையும் எப்படி எதிர்பார்ப்பது? அது சாத்தியமில்லை. வேண்டுமானால் நாம் அரசியல் ரீதியாகவும் யோசிக்கவேண்டும் ஏனெனில் அனைத்து உயர் வாழிகளும் கிருஷ்ணரின் அவயவங்கள் தானே, கிருஷ்ணர் அவர்களின் நலனை தானே வேண்டுகிறார் அவர்கள் இறைவனின் திருவீட்டை அதனால் அடைய முடியும் என்று எண்ணுகிறார்.

எனவே ஒரு வைஷ்ணவன் என் கடமை அனைவரும் கிருஷ்ண பக்தியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனால் நாம் அரசியல் பலம் பெறுவதும் நல்லதுதான். கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி அந்த கட்சி இந்த கட்சி என்று பல கட்சிகள் இருப்பதைப் போல கிருஷ்ணா கட்சி என்றும் ஒன்று இருக்க வேண்டும். ஏன் கூடாது? கிருஷ்ணா கட்சி ஆட்சிக்கு வருமானால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். உடனே அங்கு அமைதி வந்துவிடும். இந்தியாவில் பல வதை கூடங்கள் இருக்கின்றன. அங்கு பத்தாயிரம் பசுக்கள் ஒரு நாளைக்கு கொல்லப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, இந்த நாட்டில்தான் ஒரு பசுவினை கொல்ல முயற்சிக்க படும்போது பரிக்ஷித் மகாராஜர் உடனடியாக தன் வாளை எடுத்து,"நீ யார்?" என்று கூறி ஓங்கினார். அந்த நாட்டில் இப்போது ஒரு நாளைக்கு பத்தாயிரம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இங்கு அமைதியை எதிர்பார்க்கிறோமா? செழிப்பை எதிர்பார்க்கிறோமா? அதற்கு சாத்தியமில்லை. ஆகவே கிருஷ்ணரின் பிரதிநிதி ஒருவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்பார் ஆனால் முதலில் இந்த வதை கூடங்களை நிறுத்துவார், விபச்சார விடுதிகள், சாராய விற்பனை கூடங்கள் மூடப்படும். பின்னர் அமைதியும் செழிப்பும் தங்கும். பூத பாவன, கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைவார், "இதோ எனது பிரதிநிதி" என்று எனவே ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து புரிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன, முழு அறிவும் அனைத்து அறிவும் மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும். எனவே நாம் அதை பல கோணங்களிலும் படிக்கவேண்டும் வெறும் உணர்ச்சிப் பூர்வமாக மட்டும் அல்லாமல். இதுவே ஸ்ரீமத் பாகவதம்.

மிக்க நன்றி.