TA/Prabhupada 0507 - உங்கள் நேரடி அனுபவத்தில் நீங்கள் எதையும் கணக்கிட இயலாது.
Lecture on BG 2.18 -- London, August 24, 1973
ஒரு நாளை கணக்கிட்டு பிரம்மாவின் வயது என்னவாக இருக்கும் என்று இப்போது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் சஹஸ்ர யுகம், நான்கு யுகங்கள் இருக்கின்றன, சத்யா, த்ரேத்தா, துவாபர, கலி - இந்த நான்கும் நான்காயிரத்து முன்னூறு ஆயிரம் வருடங்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுவே நான்கு யுகங்களின் மொத்த காலமும் ஆகும். பதினெட்டு, பனிரெண்டு, எட்டு, நான்கு. எத்தனை ஆகிறது? பதினெட்டும் பனிரெண்டும்? முப்பது, அதனோடு எட்டு, முப்பத்தி எட்டு, பின்பு நான்கு. இது ஒரு குத்துமதிப்பான கணக்கு தான். நாற்பத்திரெண்டு, நாற்பத்தி மூன்று. சஹஸ்ர யுக பர்யந்தம். பலப்பல ஆண்டுகள், சஹஸ்ர யுக பர்யந்தம் அஹ: அஹ: என்றால் நாள். ஸஹஸ்ர-யுக-பர்யந்தம் அஹர் யத் ப்ரஹ்மணோ விது: (ப.கீ. 8.17). இதுவே பிரம்மாவின் ஒரு நாள். ஒரு நாள் என்றால் காலை முதல் மாலை வரை. 4300 ஆயிரம் ஆண்டுகள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். எனவே இத்தகைய விஷயங்கள் சாஸ்திரங்களை கொண்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். இல்லையேல், நமக்கு ஞானம் இல்லை. நாம் கணக்கிட முடியாது. நாம் பிரம்மாவிடம் செல்ல முடியாது, நம்மால் சந்திர மண்டலத்திற்கு கூட செல்ல முடியாது. பிரம்மலோகம் அனைத்துக்கும் முடிவானது அதைப் பற்றி சொல்வதற்கு இல்லை, அதுவே பிரம்மாண்டத்தில் மிகத் தொலைவில் இருக்கிறது. எனவே நம்முடைய நேரடி அனுபவத்தின் மூலம், கணக்கிடவோ செல்லவோ முடியாது. நவீன விண்வெளியாளர்கள் அதனை கணக்கிடுகின்றனர், அதாவது மிக உயர்ந்த மண்டலத்திற்கு செல்வதற்கு நாற்பத்தாயிரம் வருடங்கள் ஆகும் என மதிப்பிடுகின்றனர் வெளிச்சத்தின் ஆண்டுகளை முன்னிட்டு கணக்கிடுகையில். வெளிச்சத்தின் ஆண்டைப் போலவே நாமும் கணக்கிடுகிறோம். நம்மால் நேரடியாக கண்டு கணக்கிட முடியாது இந்த பௌதிக உலகில் கூட, ஆன்மீக உலகைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அப்படி இல்லை... பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானாம் (பி.ஸ. 5.34) மனி-புங்கவ என்றால் மன அனுமானம். மனோ அனுமானத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம், அதுவும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் செய்தாலும், அதனை கணக்கிடுவது சாத்தியமில்லை. சாஸ்திரங்களைக் கொண்டு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல் அது சாத்தியமாகாது. எனவே கிருஷ்ணர் கூறினார், நித்யஸ்யோக்தா: ஷரீர்-உக்த. உக்த என்றால் கூறப்பட்டது. "நான் ஒரு கொள்கையை கூறுகிறேன்," என்று அவன் சொல்ல வில்லை அப்படி செய்ய முடிந்தால் கூட. அவனே முழுமுதற் கடவுள். இதுதான் முறை. உக்த அதிகாரிகளினால், முந்தைய அதிகாரிகளினால், ஆச்சாரியர்களினால் சொல்லப்பட்டிருக்க வேண்டும், நீ எதையும் சொல்லக்கூடாது. அதுவே பரம்பரை எனப்படும். உன் புத்தியை கொண்டு புரிந்து கொள்ள வேண்டுமே தவிர நீ எதனையும் சேர்க்வோ மாற்றவோ கூடாது. அது சாத்தியமில்லை. அதற்குதான் நித்யஸ்யோக்தா: என்று பொருள். அதாவது அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நீ வாதிட வேண்டியதில்லை. நித்யஸ்யோக்தா: ஷரீரிண: அனாஷினோ 'ப்ரமேயஸ்ய (ப.கீ. 2.18), அளக்க முடியாதது.