TA/Prabhupada 0506 - உங்கள் பார்வை கூர்மையாய் இருக்கவேண்டும். இப்படி மழுங்கலாய் அல்ல.



Lecture on BG 2.18 -- London, August 24, 1973

ஆக மரங்களும் செடிகளும் இரண்டு கோடி வகைகள் இருக்கின்றன. ஸ்தாவரா லக்ஷ-விம்ஷதி க்ருமயோ ருத்ர-ஸங்க்யய:. மேலும் பதினொன்று லட்சம் பூச்சி வகைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் வேத நூல்கள் எப்படி சரியாக குறிப்பிடுகின்றன என்பதே மிகவும் புதிரானது தான். ஒன்பது லட்சம், பதினொன்று லட்சம், இரண்டு கோடி என்று இருக்கின்றன. இதற்குப் பெயர்தான் உணர்தல். அதை நாம் அப்படியே எடுத்துக் கொள்கிறோம். வேதங்களை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதால், அதில் ஏற்கனவே உள்ள ஞானம் கிடைப்பது நமக்கு பெரும் பாக்கியம். உன்னையும் என்னையும் யாராவது இப்படிக் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், "நீருக்குள் எத்தனை விதமான உயிரினங்கள் இருக்கின்றன என்பதை நீ சொல்ல முடியுமா?"என்று அதற்கு பதில் மிகவும் கடினமானது. தாவரவியலாளர்கள் கூட இதனை கூற இயலாது. அவர்கள் வல்லுனர்களாக இருந்தால் கூட முடியாது. என்னாலும் சொல்ல முடியாது. ஆனால் நம்மால் உடனே ஒன்பது லட்சம் என்று சொல்லமுடியும், அதற்கான வசதி நம்மிடம் இருக்கிறது. நான் இதனை சோதனை செய்தும் பார்த்ததில்லை, நேரடியாகவும் பார்த்ததில்லை, ஆனால் வேத நூலில் விளக்கப்பட்டிருப்பதால், நான் அதனை சரியாகச் சொல்ல முடியும். எனவே வேதாந்த சூத்திரம் சொல்கிறது, உனக்கு எதையும் நேரடியாக பார்க்க அல்லது புரிந்துக் கொள்ள வேண்டுமானால்... பல வஞ்சகர்களும் வந்து, சவால்விடுகிறார்கள், "கடவுளை உன்னால் காட்ட முடியுமா?" என்று கேட்பதைப் போல.. ஆம் என்னால் காட்ட முடியும் உனக்கு பார்க்கும் திறன் இருந்தால். பலவிதமான கண்களாலும் கடவுளை காண முடியும். இந்த கண்களால் அல்ல. அதுவும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: (சை.ச. மத்திய 17.136). இந்திரியம் என்றால் புலன்கள், பௌதிகப் புலன்கள். இந்த பௌதிக புலன்களைக் கொண்டு நேரடியாக அனுபவித்தல் முடியாது, கடவுள் எப்படிப்பட்டவர், அவர் குணம் என்ன, அவர் என்ன செய்கிறார் என்பதை. முழுமுதற் கடவுளை பற்றி நாம் பலவற்றையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் அவரது பண்புகள், உருவம் மற்றும் செயல்கள், சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சாஸ்திர யோனித்வத்தை நாம் பயில முடியும். யோனி என்றால் மூலம், ஆதாரம். சாஸ்திர யோனி த்வத். சாஸ்திர சக்சசு. நம் கண்களே சாஸ்திரமாக இருக்க வேண்டும். இந்த முடங்கிய கண்கள் அல்ல. சாஸ்திரம் கொண்டும் இது அத்தனையையும் நாம் அனுபவிக்க முடியும். எனவே நாம் ஆதாரப்பூர்வமான புத்தகங்களைக் கொண்டு படிக்க வேண்டும், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட விளக்கங்கள் அதில் இருக்கும். அசிந்த்யா: கலு யே பாவா ந தாம்ஸ் தர்கேண யோஜயேத். தற்கேன.. வாதத்தின் மூலம், அதாவது நம் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட வாதம். இதில் விஷயங்கள் இருக்கிறது. நாம் தினமும் பல கோலங்களை பார்க்கிறோம், நட்சத்திரங்களை பார்க்கிறோம், ஆனால் அவற்றைப் பற்றி எந்த செய்தியும் நம்மிடம் இல்லை. சந்திர மண்டலத்தை காண பலரும் நேரடியாகச் செல்கின்றனர், ஆனால் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அப்படி சொல்வதே ஐயமாகத்தான் இருக்கிறது. அவர்களிடம் அதிகாரப்பூர்வமான எண்ணம் இருக்கிறது அதாவது: "இந்த கோளம் தவிர, ஏனைய கோள்களில் உயிர் வாழ்க்கை இல்லை." இது சரியான புரிதல் இல்லை. சாஸ்திர யோனியை பொருத்தவரை, சாஸ்திரங்களைக் கொண்டு பார்க்க வேண்டுமானால்... சந்திர மண்டலத்தை போல. ஸ்ரீமத் பாகவதத்தில் இதைப் பற்றிய செய்தி இருக்கின்றது, அங்கு மக்கள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்கிறார்கள். அங்கு ஆண்டுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன? நம் ஆறு மாதங்கள் அவர்களுடைய ஒரு நாளுக்கு சமம். இப்போது 10,000 வருடங்களுக்கு யோசித்துப் பாருங்கள். அதுவே தெய்வ வருஷம் எனப்படும். தெய்வ வருஷம் என்றால் தேவர்களின் கணக்குப்படி ஏற்படுகின்ற வருடம். பிரம்மனின் நாளும், தேவர்களின் கணக்குப்படியே கணக்கிடப்படுகிறது. ஸஹஸ்ர-யுக-பர்யந்தம் அஹர் யத் ப்ரஹ்மணோ விது: (ப.கீ 8.17). பகவத் கீதையில் விபரம் இருக்கிறது, கிருஷ்ணர் கூறுகிறார், அதாவது தேவர்களின் வருடங்கள் கணக்கிடப்படுவதாக. அனைவருடைய வருடமும் கணக்கிடப்படுகிறது. அதுவே... இதுவும் நவீன விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான், தொடர்பியல் உண்மை அல்லது தொடர்பியல் சட்டம். ஒரு சிறு எறும்புக்குக் கூட நூறு வருடம் ஆயுள் இருக்கிறது. ஆனால் ஒரு எறும்பின் நூறு வருடமும் நம் நூரின் வருடமும் வேறுபடக் கூடியது. இதற்குப் பெயர்தான் தொடர்பியல். உன் உடலின் அளவை பொறுத்து, அனைத்தும் தொடர்புடையது. நம் நூறு வருடமும் பிரம்மாவின் நூறு வருடமும் வேறுபாடு உடையது. எனவே கிருஷ்ணர் இப்படி கணக்கிட சொல்கிறார்: ஸஹஸ்ர-யுக-பர்யந்தம் அஹர் யத் ப்ரஹ்மணோ விது: (ப.கீ 8.17).