TA/Prabhupada 0510 - நவநாகரிக சமுதாயத்திற்கு ஆன்மா பற்றிய அறிவு இல்லை.
Lecture on BG 2.25 -- London, August 28, 1973
பிரதியும்ன: "ஆன்மா என்பது கண்ணுக்குத் தெரியாத தாகவும் புத்திக்கு எட்டாததாகவும் அழிவு இல்லாததாகவும் மாற்றம் இல்லாததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த நீ உடலுக்காக வருந்துவது கூடாது." பிரபுபாதர்: அவ்யக்தோ 'யம் அசிந்த்யோ 'யம் அவிகார்யோ 'யம் உச்யதே தஸ்மாத் ஏவம் விதித்வைனம் நானுஷோசிதும் அர்ஹஸி ([[Vanisource:BG 2.25 (1972)|ப கீ 2.25) எனவே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தனது முதல் பாடங்களை துவங்கினார், அஷோச்யான் அன்வஷோசஸ் த்வம் ப்ரஜ்ஞா-வாதாம்ஷ் ச பாஷஸே (ப கீ 2.11). "நீ கற்றறிந்த பண்டிதர் போல் பேசினாலும், நீ உடலுக்காக வருந்துகிறாய், அது முக்கியமானதல்ல." நானுஷோசந்தி. இங்கும் அதே தான். தஸ்மாத் ஏவம் விதித்வைனம், இந்த உடல், ந அனுஷோசிதும் அர்ஹஸி. இந்த உடலை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. ஆன்மாதான் முக்கியமாக கருதப்பட வேண்டியது. ஆனால் நவீன நாகரீகமும் உடலை முக்கியமாக கருதுகிறது. நேர்மறையாக. கிருஷ்ணர் கூறுகிறார்: ஆன்மா அழிவற்றது, ஆகவே, தஸ்மாத் ஏவம் விதித்வா, இந்தக் கொள்கையை உணரும் பொழுது, ஏனம், இந்த உடல், ந அனுஷோசிதும் அர்ஹஸி. ஆன்மாவே முக்கியமானது. நாம் ஆன்மாவைத் தான் காக்கவேண்டும், உடலை அல்ல. உடலைப் பொறுத்தவரை, தட்ப வெட்ப மாறுதல்களை போல சுக துக்கங்கள் உண்டு. ஆகமாபாயின: அநித்யா, இத்தகைய உடல் சம்பந்தமான சுகதுக்கங்கள் வரும் போகும். அவை நிலையானவை அல்ல. தாமஸ் திதிக்க்ஷஸ்வ பாரத. இத்தகைய உடல் சம்பந்தப்பட்ட சுக துக்கங்களை சகித்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும், அதே சமயத்தில் ஆன்மாவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நவீன நாகரீகத்தில், ஆன்மாவைப் பற்றிய அறிவு இல்லை, பின் எப்படி அதனை பாதுகாப்பதை பற்றிச் சொல்வது, மேலும், அவர்கள் விலங்குகளைப் போல உடல் உணர்வுடன், உடலை மட்டுமே அதிகமாக பேணிக்காத்து கொண்டு இருக்கின்றனர், அவர்களுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவே இல்லை எனும் போது, அதனை பேணிக்காப்பது பற்றி என்ன சொல்வது? இதுவே நவீன நாகரீகத்தின் கவலைக்கிடமான நிலைமை. விலங்கு நாகரிகம். விலங்குகள் உடலை மட்டுமே பேணிக்காக்கும், ஆன்மாவைப் பற்றி அது அறியாது. எனவே இந்த நாகரிகம் விலங்கு நாகரிகம். மூடா. மூடா என்றால் மிருகம், கழுதை. இப்போது நாம் இதனை மக்களிடம் பொதுவாக கூறினால், அவர்கள் நம் மீது கோபம் கொள்வார்கள், ஆனால் இதுதான் நிலைமை. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ பா 10.84.13). நான் இந்த ஸ்லோகத்தை பலமுறை விளக்கி உள்ளேன். யஸ்யாத்ம-புத்திஹ்: ஆத்மா என்பதே தான், ஆனால், புத்தி உடலைத் தான் என்று எடுத்துக்கொள்கிறது. யஸ்யாத்ம-புத்திஹ்: அப்படி என்றால் உடல் என்பது என்ன? உடல் என்பது வேறொன்றுமில்லை த்ரி-தாதுவால் ஆன பை, கபம், பித்தம், வாயு, மற்றும் அதன் விளை பொருட்கள். சளி, பித்தம், காற்று, ஆகியவை மூன்று மூல பொருட்களின், செயல் எதிர்ச்செயலே... பௌதிக உலகை போல, இந்த வீடு. இந்த வீடு என்பது என்ன? தேஜோ-வாரி-ம்ருதாம் வினிமயஹ். பௌதிக உலகில் எதுவாக இருந்தாலும் அது என்ன? தேஜோ-வாரி-ம்ருதாம் வினிமயதேஜோ-வாரி-ம்ருதாம் வினிமயஹ். நெருப்பு, நீர், மண், இவற்றின் கொடுக்கல்-வாங்கல். தேஜோ-வாரி-ம்ருதாம் வினிமய:. கொடுக்கல் வாங்கல். மண்ணையும், நீரையும் எடுத்துக்கொண்டு, கலந்து, நெருப்பில் செலுத்தினால் அது செங்கல் ஆகிறது, பின்பு அதனை பொடி ஆக்கினால், அதுவே சிமெண்ட் ஆகிறது, அதனை மறுபடியும் இணைக்கும் போது, அது மாபெரும் அடுக்குமாடி கட்டிடம் ஆகிறது. இந்த பௌதிக உலகில், எதை எடுத்துக் கொண்டாலும், இந்த மூன்று பொருட்களின் கலவை தான் அது, அதனோடு காற்றும் வானமும் காய்வதற்காக சேர்கிறது. காற்று உலர்வதற்கு தேவைப்படுகிறது. எனவே ஐந்து மூல பொருட்கள் கொண்ட கூட்டமைப்பு. அது போலத்தான், இந்த உடலும், ஐந்து மூல பொருட்களின் கூட்டமைப்பு. அதில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த மாபெரும் அடுக்குமாடி கட்டிடத்தில் ஆன்மா இல்லை என்பதால், அது ஓர் இடத்திலேயே நிற்கிறது, ஆனால் உடலுக்கு ஆன்மா இருக்கிறது, அதனால் அது அங்கும், இங்கும் செல்கிறது. அதுதான் வேறுபாடு. ஆன்மா தான் முக்கியமானது. ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை. அதுபோலதான் நாம் விமானம் உற்பத்தி செய்து இருக்கின்றோம், ஆனால் அதற்கு ஆன்மா இல்லை, ஆனால் மற்றொரு ஆன்மாவான -விமானி அதனை செலுத்துகிறார். அதனை பார்த்துக் கொள்கிறார். அதனை செலுத்துகிறார். அதனால் அது பறக்குகிறது. எனவே ஆன்மா இல்லையெனில், எதிலும் அசைவில்லை. அந்தப் பொருளுக்கு ஆன்மா இருக்க வேண்டும் அல்லது வேறொரு ஆன்மா அதனை காக்க வேண்டும். அப்போதுதான் அது நகரும். ஆகவே, ஆன்மாதான் முக்கியமானதே தவிர, இந்த பௌதிக உடல் அல்ல.