TA/Prabhupada 0511 - உண்மையான பற்றாக்குறை ஆன்மாவைப் பற்றியது. அதற்கு ஆன்மீக உணவு கிடைப்பதில்லை
Lecture on BG 2.25 -- London, August 28, 1973
ஆகையால் எவரும் இந்த பௌதிக உடலை முக்கியமானதாக ஏற்றுக் கொள்கிறார்களோ..... எவ்வாறு என்றால் அன்றொரு நாள், சில போக்கிரிகள் வந்தார்கள். இந்த உடலை வளர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த ஆர்வமுடன். பற்றாக்குறையுடன் இருப்பவர்கள், பட்டினி... வாழ்க்கையில் உடல் சம்மந்தப்பட்ட பற்றாக்குறை. ஆனால் அங்கே ஆன்மீகப் பற்றாக்குறை உள்ளது. அதை நாம் அக்கறையுடன் கவனிப்பதில்லை. ஜட பற்றாக்குறை அங்கே இருக்கலாம், உண்மையிலேயே அது ஒரு பிரச்சனை அல்ல ஏனென்றால் அங்கு இந்த ஜட உடலை பராமரிக்க போதுமான ஏற்பாடுகள் உள்ளது. உண்மையான பற்றாக்குறை ஆன்மாவைப் பற்றியது. இந்த ஆன்மாவிற்கு ஆன்மீக உணவு கிடைப்பதில்லை. இங்கு, இந்த சந்திப்பில், பட்டினியாக இருக்கும் ஆன்மீக ஆன்மாவிற்கு கொடுப்பதற்காகவானது. உங்களுக்கு கொஞ்சம் ஆன்மீக உணவு கிடைத்தவுடனடியாக, பிறகு நாம் மகிழ்ச்சி அடைவோம். அதுதான் நிலைமை. யயாத்மா சுப்ரஸீடதி. உங்களுக்கு ஆன்மீக உணவு கிடைக்கவில்லை என்றால் உண்மையான ஆன்மாவிற்கு திருப்பதி இருக்காது. அதே உதாரணம், ௯ண்டிற்குள் இருக்கும் ஒரு பறவை. நீங்கள் வெறுமனே ௯ண்டை அழகாக சுத்தம் செய்து மூடிவிட்டு, மேலும் வர்ணம் பூசினால், மேலும் ௯ண்டினுள் இருக்கும் பறவை அழுதுக் கொண்டிருக்கிறது, பட்டினியோடு இருக்கிறது, இது என்ன நாகரிகம்? அதேபோல், நாம் ஆன்மீக ஆன்மா, இந்த உடலினுள் நாம் அடைப்பட்டிருக்கிறோம், ஆகையால் நம்முடைய இயற்கையான அபிலாசை அடைபட்டிருக்கும் நிலையிலிருந்து விடுதலை பெறுவதாகும். ௯டிய அளவு ௯ட்டிலிருந்து விடுதலை பெற போராடிக் கொண்டிருக்கும் பறவை போல். அதேபோல், நாமும், அடைப்பட்டிருப்பதில் ஆனந்தம் கொள்ளவில்லை. நேற்று நாம் கற்றுக் கொண்டோம், பகவத் கீதையிலிருந்து, ஆன்மாவின் நிலை ஸர்வ கதா:. ஆன்மா எங்கு வேண்டுமென்றாலும் போகலாம். அது தான், அதற்கு சுதந்திரம் உள்ளது. யோகி தெய்வ சக்தியால் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களாலும் தான் விரும்பும் எல்ல இடத்திற்கும் செல்ல முடியும். அணிமா, லஹிமா சித்தி. இப்போதும் இந்தியாவில் யோகிகள் இருக்கிறார்கள் அவர்கள், விடியற் காலையில், நான்கு புனித தளத்திலும் ஸ்னானம் செய்வார்கள்: ஹரிதுவார், ஜெகன்னாத் பூரி, ராமேஸ்வரம், மேலும் துவாரகா. இன்றும் யோகிகள் இருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள், அவர்கள் நான்கு இடத்தில ஸ்னானம் செய்துவிடுவார்கள். ஸர்வ கதா:, அவர்கள் ஒரு இடத்தில் உடகார்ந்துக் கொண்டு, மேலும் யோகிக் செயல்முறைப்படி, சில நிம்டங்களுக்குள், எழுந்துக் கொண்டு மேலும் இதில் இங்கு மூழ்குவார்கள், இந்த நீருக்குள். ஒருவேளை நீங்கள் லண்டனில் மூழ்கினால், தேம்ஸ் நதியில் மூழ்கினால், மேலும் மேலே வந்தவுடன் நீங்கள் கல்கத்தாவில் கங்கை நதியில் இருப்பதை காண்பிர்கள். இது போன்ற யோகிக் செயல்முறை அங்கு உள்ளது. ஸர்வ கதா:. ஆகையால் இந்த ஆன்மிக ஆன்மாவிற்கு இத்தனை சுதந்திரம் உள்ளது, ஸர்வ கதா:, அவர் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் போகலாம். ஆனால் இதற்கு தடையாக இருப்பது இந்த உடல் ஏனென்றால் நம் சுதந்திரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த ஜட உடலை புறக்கணித்து மேலும் ஆன்மீக உடலில் நிலைப்பட்டால் ..... நாரதர் முனிவரைப் போல், அவரால் எங்கும் நடமாடலாம், அவர் நகர்ந்துக் கொண்டிருக்கிறார், அவருடைய வேலையே நடமாடிக் கொண்டிருப்பது. சில சமயங்களில் அவர் வைகுண்ட லோகத்திற்கு செல்கிறார் அல்லது சமயங்களில் இந்த ஜட லோகத்திற்கு வருகிறார்கள். அவர் ஆன்மீக உடலைப் பெற்றிருக்கிறார், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரம் பெற்றுள்ளார், ஆகாய சஞ்சாரி. அவர்கள் ஆகாயத்தில் இயந்திரங்களை கொண்டு பயணம் செய்ய முயற்சி செய்கிறார்கள். இயந்திரங்களுக்கு அவசியமே இல்லை. யந்த்ராரூடானி மாயயா (ப.கீ. 18.61). இயந்திரம் மாயாவால் உருவாக்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு உங்களுடைய சொந்த சக்தி உள்ளது. அது மிகவும் வேகமானது. ஆகையால் அது சோதனைச் செய்யப்படுகிறது. ஆகையினால் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஆன்மாவை எவ்வாறு இந்த ஜட உடல் என்னும் கூட்டில் இருந்து வெளியில் கொண்டுவருவது. அதுதான் நம்முடைய முதல் அக்கறையாக இருக்க வேண்டும். ஆனால் வெறுமனே இந்த உடல் மேல் அக்கறையாக உள்ளவர்கள், அவர்கள் மிருகங்கள், பசுக்கள் மேலும் கழுதைகளை போன்றவர்கள். ஸ ஏவ கோ-கர: (ஸ்ரீ.பா.10.84.13).