TA/Prabhupada 0513 - அங்கே இன்னும் பல உடல்கள் உள்ளன, 8,400,000 வேறுபட்ட உடல்கள் உள்ளன



Lecture on BG 2.25 -- London, August 28, 1973

எப்பொதும் வினா, அதாவது ஏன் ஒருவர் மன்னரின் உடல் பெற்றிருக்கிறார், மேலும் ஏன் அவர் பெற்றிருக்கிறார், ஒருவர் பன்றியின் உடல் பெற்றிருக்கிறார். அங்கே இன்னும் பல உடல்கள் உள்ளன, 8,400,000 வேறுபட்ட உடல்கள் உள்ளன. ஆகையால் ஏன் அங்கு வேறுபாடுகள் உள்ளன? அந்த வேறுபாடு பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. காரணம். காரணம் என்றால் காரணம். இந்த வகை ஏன்..., கரணம் குண-சண்கோ அஸ்ய. அஸ்ய, ஜீவஸ்ய. அவன் வேறுபட்ட தன்மைகள் உடையவர்களுடன் சகவாசம் வைத்திருக்கிறான், ஆகையினால் அவனுக்கு வேறுபட்ட உடல் கிடைத்திருக்கிறது. கரணம் குண-சண்கோ அஸ்ய. ஆகையினால் நம்முடைய வேலை யாதெனில் பௌதிக தன்மைகள் உள்ளவர்கர்களுடன் சேரக் கூடாது. ஸத்வ குணம் வரையிலும் கூட. பௌதிக தன்மைகள், ஸத்வ என்றால் பிராமணர்களின் தன்மை. ஸத்வ ஸம தமஸ் திதிகஷ. ஆகையால் பக்தி தொண்டும் இந்த சிறந்த தன்மைகளுக்கு உன்னதமானது. இந்த பௌதிக உலகில், எப்படியாவது, அவன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தால் அல்லது அவருடைய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தால், நுண்மையான ஒரு கண்டிப்பான பிராமணனாக, இருப்பினும் அவருடைய நிலைமை ஜட இயற்கையின் விதியின் கீழ்தான். மேலும் மற்றவர்களைப் பற்றி, ரஜோ மேலும் தமஸ் குணத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது. அவர்களுடைய நிலைமை மிகவும் வெறுக்கத்தக்கது. ஜகன்ய-குண -வ்ருத்தி -ஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: (ப.கீ. 14.8) தமஸ் குணத்தில் இருப்பவர்கள், ஜகன்ய, மிகவும் வெறுக்கத்தக்க நிலைமை. ஆகையால் இந்த தருணத்தில் ... அது சூத்ர. கால சூத்ர-சம்பவ:. இந்த கலி காலத்தல், எல்லோரும் தமோ குணத்தில் இருக்கிறார்கள். சூத்ர. அவர்களுக்கு தெரியவில்லை ஏனென்றால் அவர்களுக்கு ...... "நான் ஆன்மீக ஆத்மா; நான் இந்த உடல் அல்ல," அதை அறிந்த ஒருவர்தான் ப்ராமண. மேலும் இதை அறியாத ஒருவன், அவன்தான் சூத்ர, க்ருபண. எதத் விதித ப்ராயே ச ப்ராமண:. எல்லோரும் மரணமடைகிறார்கள், அது நல்லது, ஆனால் ஆன்மீக உண்மையைப் பற்றி தெரிந்த பின் இறக்கும் ஒருவன் ... எவ்வாறு என்றால் இங்கு, ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி புரிந்துக் கொள்ள முயலும் மாணவர்கள், மேலும், எவ்வாறெனினும், தான் ஒரு ஆன்மீக ஆன்மா என்று புரிந்துக் கொண்டால், குறைந்தது, பிறகு அவர் ப்ராமணன் ஆகிறார். அவர் ப்ராமணன் ஆகிறார். எதத் விதித. மேலும் இதைப் புரிந்துக் கொள்ளாத ஒருவர், அவர் ஒரு க்ருபண. க்ருபண என்றால் கருமி. ப்ராமண என்றால் தாராளவாதி. இவை சாஸ்திர ஆணை. ஆகையால் முதலில், நாம் ப்ராமணனாக மாற வேண்டும். பிறகு வைஷ்ணவ. ப்ராமணனுக்கு தெரியும் அதாவது "நான் ஆன்மீக ஆத்மா," அஹம் ப்ரமாஸ்மி. ப்ரம ஜானாதி இதி ப்ராமண. ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ. 18.54). இத்தகைய அறிவால் ஒருவர் ப்ரஸன்னாத்மா ஆகிறார். அப்படி என்றால் விடுவித்தல். நிவாரணம் பெறுவதை உணர்வது போல்....... உங்கள் தலையில் சுமை இருந்தால், மேலும் அந்த சுமை எடுக்கப்பட்டவுடன், நீங்கள் விடுதலை பெற்றதை உணருவீர்கள், அதேபோல், இந்த அறியாமை அதாவது "நான் இந்த உடல்" ஒரு பெரிய சுமை, நம் மீது உள்ள சுமை. ஆகையால் இந்தச் சுமையிலிருந்து வெளியே வந்தால், பிறகு நீங்கள் பளு குறைந்ததை உணருவீர்கள். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ. 18.54). அப்படி என்றால் உண்மையிலேயே ஒருவர் இதை புரிந்துக் கொள்ளும் போது "நான் இந்த உடல் இல்லை; நான் ஆத்மா," பிறகு இந்த உடலை பராமரிக்க அவர் கடினமாக உழைக்க வேண்டும், ஆகையால் அவர் பளு குறைகிறது அதாவது "நான் ஏன் இந்த பௌதிக துண்டுக்காக இவ்வளவு கடினமாக உழைக்கிறேன்? என்னுடைய வாழ்க்கையின் உண்மையான தேவையை செயல் படுத்த போகிறேன், ஆன்மீக வாழ்க்கை." அது பெரிய நிவாரணம். அது பெரிய நிவாரணம். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காண்கஷதி (ப.கீ. 18.54). அந்த நிவாரணம் என்றால் பேராசை இல்லை, புலம்பல் இல்லை. இவைதான ப்ரஹ்ம-பூத:.