TA/Prabhupada 0514 - வலியிலிருந்து கிடைக்கும் சிறிய நிவாரணமே இங்கே மகிழ்ச்சியென்று கருதப்படுகிறது.



Lecture on BG 2.25 -- London, August 28, 1973

நம்முடைய உண்மையான கடமை ப்ரஹ்ம-பூத: நிலையை அடைவதே. யாரால் அந்நிலையை அடையமுடியும்? அது எற்கனவே விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் ஏற்கனவே அதை விளக்கியுள்ளார், அந்த பதம் என்ன? யம் ஹி ந வ்யதயந்த் யேதே. வ்யதயந்தி, வேதனை தருவதில்லை. ஜட சுமை எப்பொதும் துன்பகரமானது. இந்த உடல் கூட இன்ன்னுமோரு சுமையே, அதை நாம் சுமக்க வேண்டும். ஒருவர் உடல் வலியாலும் சுகத்தாலும் பாதிக்கப்படாத போது... சந்தோஷம் என்பது இங்கு இல்லை, வெறுமனே வேதனை மட்டுமே இங்குண்டு, சந்தோஷம் என்பது வலியிலிருந்து கிடைக்கும் சிறியதொரு நிவாரணம் மட்டுமே. உங்களுக்கு ஒரு கொப்புளம் இருப்பது போன்று. எப்படி கூறுவது? கொப்புளம்? ஃபொரா? ஆக அது எப்போதும் வலிக்கும். சில மருந்துகள் போடுவதன் மூலம், அந்த வலி சற்று குறையும் போது, "இப்போது சந்தோஷமாக இருக்கிறது" என்று நினைக்கலாம். ஆனால் கொப்புளம் அங்குதானே இருக்கிறது. அப்போது எவ்வாறு சந்தோஷப்பட முடியும்? எனவே இங்கு உண்மையிலேயே சந்தோஷம் இல்லை, ஆனால் அதை நிவர்த்தி செய்யும் பல வழிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கின்றோம். நோயொன்றிருக்கையில் அதற்கு மருந்து கண்டுபிடித்தது போன்று. மருத்துவ கல்லூரி, பெரிய பெரிய M.D., FRCS மருத்துவர்கள் எல்லாம் உருவாக்கிவிட்டோம். ஆனால் அவற்றால் நிரந்தரமாக வாழ்வீர்கள் என்பதல்ல. நீங்கள் இறக்கவே நேரிடுகிறது ஐயா. அந்த கொப்புளம் அங்கேதான் இருக்கிறது. தற்காலிகமாக சிறிது மருந்தை தடவினால், ஒருவேளை... எனவே இந்த ஜடவுலகில் மகிழ்ச்சி என்பதே இல்லை. எனவேதான் கிருஷ்ணர் கேட்கிறார், "ஏன் மகிழ்வடைகிறீர்கள்? எவ்வாறெனினும் நீங்கள் இறக்க நேரிடுகிறதே, எனினும் நீங்கள் நித்தியமானவர்கள் என்பதால், இது உங்கள் வேலையுமல்ல. இருப்பினும் நீங்கள் இறப்பை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்." ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க -தோஷானுதர்ஷனம் (BG 13.9). இதுதான் உண்மையான பிரச்சனை. ஆனால் இந்த போக்கிரிகளுக்கு இது தெரிவதில்லை. அவர்கள் இறப்பு இயற்கையானது - இறப்பிற்குப் பிறகு அனைத்தும் முடிவடைந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இறக்கும் வரை, நன்றாக அனுபவிப்போமே. ருணம் க்ருத்வா க்ருதம் பிபேத். இன்பமடைவது என்றால் ... எமது இந்திய முறைப்படி, ஆனந்தம் என்பது மேற்கத்திய நாடுகளைப் போன்று மாமிசம் உண்பதல்ல. அவர்களுடைய சந்தோஷம் நிறைய நெய் உண்பது, கொழுப்பது, குண்டாவது என்பதுவாகும். எனவேதான் சார்வாக முனிவர், "இப்போது நெய்யை உண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள்" என்று பரிந்துரைக்கிறார். கசோரி, சமோசா, அனைத்தும் நெய்யில் செய்யப்படுபவை. "என்னிடம் பணம் இல்லை ஐயா. எனக்கு நெய் எங்கு கிடைக்கும்?" ருணம் க்ருத்வா. "பிச்சையோ, கடனோ, திருட்டோ, நெய்யை வாங்குங்கள்." எப்படியோ, கள்ளச் சந்தை, நல்லச் சந்தை, ஏதோ ஒரு வழியில். பணத்தையும் நெய்யையும் கொண்டுவர வேண்டும், அவ்வளவு தான். ருணம் க்ருத்வா க்ருதம் பிபேத். "முடிந்தவரை நெய்யை உண்ணுங்கள்." ருணம் க்ருத்வா க்ருதம் பிபேத் யாவாத் ஜீவேத் ஸுகம். "உயிருடன் இருக்கும் வரை, சந்தோஷமாக, சொகுசாக வாழுங்கள்." இதுதான் அனைத்து ஐரோப்பிய தத்துவவாதிகளினதும் தத்துவம். ஆனால் இத்தத்துவவாதிகள் இறுதியில் முடங்கிப் போகிறார்கள். அத்துடன் அவர்களுடைய சந்தோஷமும் முடிந்து போகிறது. அவ்வாறு பக்கவாதம் ஏற்பட்ட தத்துவவாதி யார்? அவர்கள் இந்த தத்துவங்களை உருவாக்குகிறார்கள். ஐரோப்பிய தத்துவவாதிகள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள மற்றோரு தத்துவவாதி , கலாநிதி இராதாகிருஷ்ணன், அவருக்கு இப்பொழுது மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டுப்பாட்டாளர் இருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை. நம்முடைய சந்தோஷமான வாழ்க்கைகாக பல தத்துவங்களை உருவாக்கலாம். ஆனால் இந்த ஜடவுடல் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க முடியாது ஐயா, அதுதான் உண்மை. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷாநுதர்ஷனம் (BG 13.9). எனவே அறிவுள்ளவர்கள், அவர்கள் செய்ய வேண்டியது... கிருஷ்ணர் எல்லோரையும் புத்திசாலிகளாக்கிறார்: "ஹே போக்கிரியே, நீர் உடல் சார்ந்த வாழ்வில் இருக்கிறீர். உங்கள் நாகரிகத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. அது போக்கிரிகளின் நாகரிகம்."