TA/Prabhupada 0520 - நாம் ஜெபிக்கிறோம், நாம் கேட்கிறோம், நாம் நடனம் செய்கிறோம், நாம் களிகூர்கிறோம். எதற்காக



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

இதுவும் கிருஷ்ணரின் தாமம் தான், ஏனெனில் அனைத்தும் கடவுளுடையது (கிருஷ்ணருடையது). வேறு எவரும் உரிமையாளர் அல்ல. இந்த உரிமைகோரல் அதாவது "இந்நிலமாகிய அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்கா), எமக்கு சொந்தமானது" என்பது தவறான உரிமைகோரல். இது உங்களுக்கோ வேறு ஒருவருக்கோ சொந்தமானதன்று. பல வருடங்களுக்கு முன் போன்று, நானூறு வருடங்களுக்கு முன், இது செவ்விந்தியர்களுக்குச் சொந்தமாயிருந்தது, ஏதோ ஒரு வழியில், இப்போது நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள். மற்றவர்கள் இங்கு வந்து ஆக்கிரமிக்க மாட்டார்கள் என்று யாரால் சொல்ல முடியும்? எனவே இவை அனைத்தும் தவறான உரிமை கோரல்கள். உண்மையில், அனைத்தும் கிருஷ்ணருக்கே சொந்தமானது. கிருஷ்ணர் கூறுகிறார் ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (BG 5.29): என்று "நானே எல்லா கிரகங்களினதும் உன்னத உரிமையாளனும் கட்டுப்பாட்டாளனும் ஆவேன்." கிருஷ்ணர் கூறுகிறார் எல்லாம் அவருக்குச் சொந்தம் என்று. எனவே அனைத்தும் அவருடைய தாமம், அவருடைய இடம், அவருடைய இருப்பிடம். அப்படியிருக்கையில் ஏன் அதை மாற்ற வேண்டும்? அவர் கூறுகிறார், யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் (BG 15.6). பரமம் என்றால் பரமான. இந்த தாமத்தில் கூட (கிருஷ்ணரின் தாமம்) கிருஷ்ணரின் கிரகங்கள், எனினும் இது பரமானதன்று, துயர் நிறைந்தது. எவ்வாறெனின் பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு உள்ளன. எனினும் கிருஷ்ணரின் சொந்த இருப்பிடமான கோலோக விருந்தாவனத்திற்கு (சிந்தாமணி தாமத்திற்கு) திரும்பினால் (Bs. 5.29), நித்தியமான, ஆனந்தமயமான, பூரண அறிவுடைய வாழ்வு கிட்டும். அது எவ்வாறு அடையப் பெறுகிறது? இதோ... கிருஷ்ணர் கூறுகிறார் மய்யாஸக்த-மனா: என்று வெறுமனே கிருஷ்ணர் மீதான பற்றுதலை அதிகமாக்குங்கள். வெறுமனே இச்செயல்முறை. நாம் உச்சாடனம் செய்கிறோம், கேட்கிறோம், நடனம் ஆடுகிறோம், அனுபவிக்கிறோம், இவை எல்லாம் எதற்கு? எம் வாழ்க்கையை அர்த்தமற்ற செயல்களில் இருந்து விடுவித்து கிருஷ்ணரிடம் பற்றுதல் கொள்வதற்கு. இதுதான் செயல்முறை. இதுதான் கிருஷ்ண உணர்வு மனதை எதாவதொரு விடயத்தில் பற்றுதல் கொள்ளச் செய்யவேண்டும். எனினும் மனதை ஏதாவது அர்த்தமற்றதில் பற்றுதல் கொள்ளச் செய்தால், பிறகு அதேதான், ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (BG 13.9), பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு. துன்பப்பட வேண்டி வரும். விஞ்ஞானம் (ஜட விஞ்ஞானம்) அல்லது எதுவானாலும் இத்துன்பங்களுக்கு ஒருவராலும் தீர்வு காண முடியாது. எனினும் உண்மையான, நிரந்தர தீர்வு (நித்திய வாழ்வு) வேண்டுமெனின், கிருஷ்ணர் மீது பற்றுதல் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறை. மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன். அதுதான் யோகத்தின் பூரண வடிவம். மற்ற யோகங்கள், கிருஷ்ண உணர்வு தளத்திற்கு வர உதவலாம், ஆனால் கிருஷ்ண உணர்வு தளத்திற்கு வர தவறினால், பிறகு பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகிவிடும். அது சாத்தியம் இல்லை. அவ்வாறான மெதுவான யோக முறையை கைக்கொண்டால், இந்த யுகத்தில் அது சாத்தியப்படாது. இந்த யுகத்தில் மட்டுமல்ல, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இது சாத்தியமில்லை. ஜிம்னாஸ்டிக் சாதனைகள் செய்யலாம், ஆனால் அது ஒருபோதும் வெற்றியடையாது. இந்த யோக முறை, கிருஷ்ணரால் இறுதி அத்தியாயத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது போன்று... இது ஏழாம் அத்தியாயம். ஆறாம் அத்தியாயத்திலும் கூட இதையேதான் கூறியிருக்கிறார், யோகினாம் அபி ஸர்வேஷாம்: (BG 6.47) "முதல் தரமான யோகி யார் என்றால், எப்பொழுதும் என்னிடம் (கிருஷ்ணர்) பற்றுதல் கொண்ட மனதுடன் இருப்பவர்." இதுதான் கிருஷ்ண உணர்வு.