TA/Prabhupada 0521 - ரூப கோஸ்வாமியின் அடிச்சுவட்டை பின்தொடர்வதே என் கொள்கை



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

வெறுமனே இதனை பயிற்சி செய்வதன் மூலம் கிருஷ்ண உணர்வை புரிந்துக் கொள்ள முயலுங்கள். ஏதோ ஒரு வகையில் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொள்ளுங்கள். யேன தேன ப்ரகாரேண, யாரையாவது நீங்கள் காதலித்தால், எப்படியோ, அவரை அடைய முயற்சிப்பீர்களே... அதுபோல இதுவும் கடினமாதொன்றல்ல. அவ்வுத்திகள் எமக்கு தெரியும். ஒரு விலங்கு கூட, அதன் தேவைகளை அடையும் உத்திகளை அறிந்திருக்கிறதே. வாழ்க்கை போராட்டம் என்பது ஒவ்வொருவரும் தங்களுடைய குறிக்கோளை அடைய முயல்வது. பற்பல உத்திகளூடாக. இப்பௌதிக கானல் நீருக்கு பின் செல்வதற்குப் பதில், நீங்களும் முயன்று பாருங்கள். ஏதொவொரு உத்தியைக் கையாண்டு கிருஷ்ணரை அடைய முயலுங்கள். அது உங்கள் வாழ்வை வெற்றியடையச் செய்யும். ஏதொவொரு வகையில். மய்யாஸ்.... யேன தேன ப்ரகாரேண மன: க்ருஷ்ணே நிவேஷயேத் ஸர்வே விதி-னிஷேதா: ஸ்யுர் ஏதயோர் ஏவ கிங்கரா: கிருஷ்ண உணர்வில் பல விடயங்கள் உள்ளன... இந்த செயல்முறையில் நான் ஒன்றன் பின் ஒன்றாக, கொஞ்சம் கொஞ்சமாக, அறிமுகப்படுத்துகிறேன், ஆனால், இந்தியாவில் இந்த கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்பவர்களுக்கு, பல சட்டதிட்டங்கள் உள்ளன. சிலர் கூறுகிறார்கள், "சுவாமிஜி ஒரு பழமைவாதி. அவர் பல சட்டதிட்டங்களை விதிக்கிறார்" என்று, ஆனால் நான் ஒரு சதவீதம் கூட அறிமுகப்படுத்தவில்லை. எனெனில், உங்கள் நாட்டில் எல்லா சட்டதிட்டங்களையும் அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. என்னுடைய கொள்கை, ரூப கோஸ்வாமியின் அடிச்சுவட்டுகளை பின்பற்றுவதாகும். அவர் கூறுகிறார், எப்படியேனும் முதலில் கிருஷ்ணர் மீது பற்றுதல் கொள்ளட்டும். அதுதான் என்னுடைய. சட்டதிட்டங்களை பிறகு பின்பற்றுவார்கள். முதலில் கிருஷ்ணர் மீது பற்றுதல் கொள்ளட்டும். இதுவே இந்த யோகமுறை. கிருஷ்ணர் விவரிக்கிறார், மய்யாஸக்த-மனா: பார்த. கிருஷ்ணர் மீது பற்றுதல் கொள்ள முயலுங்கள். ஏன் கிருஷ்ணர் மீது பற்றுதல் கொள்ளக் கூடாது? கிருஷ்ண உணர்வில் பல நல்ல விடயங்கள் உள்ளன. எம்மிடம் கலை உண்டு, ஓவியம் உண்டு, எம்மிடம் நடனம் உண்டு, சங்கீதம் உண்டு, முதல் தரமான உணவு உண்டு, எம்மிடம் முதல் தரமான உடை உண்டு, முதல் தரமான ஆரோக்கியம் உண்டு, என அனைத்தும் முதல் தரமானவை. முட்டாள் போக்கிரிகள்தான் இம்முதல் தரமான விடயங்களுடன் இணையாதிருப்பார்கள். அதேவேளை இது சுலபமானதும் கூட. இச்செயல்முறையில் இணையாதிருப்பதன் காரணம்தான் என்ன? முதல் தர போக்கிரி என்பதே அதன் காரணம். அவ்வளவுதான். நான் உங்களிடம் வெளிப்படையாக கூறுகிறேன். யார் வேண்டுமானாலும் வரட்டும், என்னுடன் விவாதிக்கட்டும், அவன் கிருஷ்ண உணர்வை ஏற்காததால் முதல் தர போக்கிரியா இல்லையா என்று. நான் அதை நிரூபிப்பேன். முதல் தர போக்கிரியாக இருக்காதீர்கள். முதல் தர புத்திசாலியாக மாறுங்கள். சைதன்ய சரிதாம்ருதத்தின் நூலாசிரியர் கூறுகிறார், க்ரிஷ்ண யேஇ பஜே ஸேஇ பட சதுர. கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்ட எவரும், முதல் தர புத்திசாலி. முதல் தரமான முட்டாளாக இருக்காதீர்கள், அதற்கு பதில் முதல் தர புத்திசாலியாக மாறுங்கள். அதுவே என்னுடைய வேண்டுகோள். மிக்க நன்றி. (நமஸ்காரங்கள்) ஏதேனும் கேள்வி உண்டா? அன்று பல மாணவர்கள் வந்தார்கள், இப்போது ஒருவரும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு முதல் தர போக்கிரிகளாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். அதுதான்... அதுவே உண்மை. ஒருவர் சிறந்த புத்திசாலியாக இல்லாவிட்டால் கிருஷ்ண உணர்வை ஏற்க முடியாது. அவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் ஏமாற்றப்பட வேண்டும். அவ்வளவு தான். எளிமையான விடயமாக, விளைவு பிரமாதமாக இருப்பவற்றை அவர்கள் ஏற்கமாட்டார்கள்.