TA/Prabhupada 0522 - இந்த மந்திரத்தை நீங்கள் கவனமாய் ஜெபித்தால், அனைத்துமே தெளிவுபெறும்



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

பிரபுபாதர்: சரி.

விஷ்ணுஜன: பகவான் சைதன்யர் பல அயோக்கியர்களை மாற்றியதைப் பற்றி பல கதைகள் உள்ளன. அவர் அங்கு இருந்தாலே போதும், அவர்கள் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யவார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்ய உதவி செய்ய அவருடைய கருணையை பெறுவது எவ்வாறு?

பிரபுபாதர்: நீங்கள் இந்த மந்திரத்தை சிரத்தையுடன் உச்சாடனம் செய்தாலே போதும், அனைத்தும் தெளிவாகும். இதுவே தெளிவாக்கும் செயல்முறையாகும். சில அயோக்கிய சிந்தனைகள், அயோக்கிய சகவாசம் இருந்தால் கூட பரவாயில்லை. வெறுமனே உச்சாடனம் செய்தாலே போதும்... எல்லோருக்கும் நடைமுறையிலேயே தெரியும், அதாவது இந்த உச்சாடன முறைதான் மக்களை முன்னேறச் செய்யும் ஒரே வழி என்று. எனவே, இதுதான் செயல்முறை, உச்சாடனம் செய்வதும் கேட்பதும். பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவத விரிவுரையை கேளுங்கள், புரிந்து கொள்ள முயலுங்கள், அத்துடன் உச்சாடனம் செய்யுங்கள், சட்டதிட்டங்களையும் பின்பற்றுங்கள். சட்டதிட்டங்கள் பிறகுதான். முதலில், கேட்கவும் உச்சாடனம் செய்யவும் முயலுங்கள். ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண: புண்ய-ஸ்ரவண-கீர்த்தன: (SB 1.2.17). ஹரே கிருஷ்ண சப்தத்தை கேட்கும் எவரும், வெறுமனே கேட்பதன் மூலமே புண்ணியஸ்தராக மாறுவார். தூய்மையாகுகிறார். எனவே, ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்வார். ஆனால், மக்கள் நினைக்கிறார்கள் "இது என்ன ஹரே கிருஷ்ண உச்சாடனம்?" அவர்களிடம் சில வெற்று வேட்டு, குண்டலினி யோகம் போன்ற ஏமாற்று வித்தைகளை கொடுத்தால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதையே விரும்புகிறார்கள். சில மோசடிக்காரர்கள் வருவார்கள், "சரி, நீங்கள் இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு முப்பத்தைந்து டாலர்கள் கொடுங்கள், ஆறு மாதங்களுக்குள் நீங்கள் கடவுளாகிவிடுவீர்கள், உங்களுக்கு நான்கு கரங்களும் கிட்டும்." (சிரிப்பொலி) நாம் ஏமாற்றப்படுவதையே விரும்புகிறோம். அதாவது ஏமாற்றும் செயல்முறை கட்டுண்ட வாழ்வின் ஒரு அம்சமாகும். கட்டுண்ட வாழ்வில் நான்கு குறைபாடுகள் உள்ளன. ஒன்று நாம் தவறு செய்வோம், மற்றோரு குறைபாடு யாதெனில், நாம் இன்னதென நினைக்கும் ஒன்று, அதுவாக இருப்பதில்லை. தவறு செய்வது போன்றது, அது புரிந்து கொள்ள கடினமானதன்று. எம் அனைவருக்கும் தெரியும் நாம் எவ்வாறு தவறு செய்கிறோம் என்று, பெருந்தவறு. பெரிய மனிதர்கள் கூட, அவர்களும் பெருந்தவறு இழைக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்குள் பல உதாரணங்களை காணலாம், சிறு தவறோ பெருந்தவறோ மிகப்பெரும் தவறோ... எனவே, "தவறு செய்வது மனித வழக்கம்," தவறு என்பது இருக்கவே செய்கிறது. அதேபோல், உண்மை இல்லாதவொன்றை உண்மையென்று ஏற்பது. அது எப்படி? கட்டுண்ட வாழ்வில் அனைவரும், "இந்த உடல் நானே" என நினைக்கிறார்கள். ஆனால், நான் இந்த உடல் அன்று. எனவே, இது மாயை என்று அழைக்கப்படுகிறது, பிரமாத. சிறந்த உதாரணம், ஒரு கயிற்றை பாம்பு என நினைப்பது. ஒருவேளை இருட்டில் கயிறொன்று கிடந்தால், நீங்கள் கூறக்கூடும் "ஓ, இங்கு ஒரு பாம்பு இருக்கிறது" என்று. இதுதான் மாயைக்கான சிறந்த எடுத்துக்காட்டு. இன்னதென நினைக்கும் ஒன்று, அதுவாக இருப்பதில்லை. எனவே, இந்த குறைபாடு கட்டுண்ட வாழ்வில் இருக்கிறது. பிழையும், தவறும் செய்யும், குறைபாடு இருக்கிறது. மூன்றாவது குறைபாடு யாதெனில் நமக்கு ஏமாற்றவும், ஏமாற்றப்படவும் வேண்டும். நாமும் சிறந்த நிபுணர்தான். எப்போதும் எவ்வாறு யாரையாவது ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயல்பாகவே, மற்றவரும் என்னை எப்படி ஏமாற்றலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறார். எனவே, இந்த கட்டுணட வாழ்வு முழுவதும் ஏமாற்றுக்காரனுடையதும் ஏமாற்றப்படுபவர்களுடையதும் சகவாசம்தான், அவ்வளவுதான். எனவே, இது மற்றொரு குறைபாடு. நான்காவது குறைபாடு யாதெனில் எம்முடைய புலன்கள் பூரணமற்றது. எனவே, நாம் பெறும் அறிவு அனைத்தும், பூரணமற்ற அறிவே. ஒரு மனிதன் அனுமானிக்கலாம், ஆனால் அவன் மனத்தினூடாகத்தான் அனுமானிக்கலாம். அவ்வளவுதான். ஆனால், அவன் மனம் பூரணமற்றது. அவன் எப்படி அனுமானித்தாலும், முட்டாள்தனமாக ஏதாகிலும் உற்பத்தி செய்வான், அவ்வளவுதான். ஏனெனில், அவன் மனம் பூரணமற்றது. ஆயிரக்கணக்கான பூச்சியங்களை சேர்த்தாலும் பயனில்லை, அது ஒன்றாகிவிடுமா? இல்லை. அது இன்னமும் பூச்சியம் தான். ஏனவே, பரத்தை புரிந்து கொள்வதற்காகச் செய்யும் இந்த அனுமானச் செயல்முறை, வெறொன்றுமில்லை பூச்சியம் தான். எனவே, எமது கட்டுண்ட வாழ்வின் இவ்வனைத்து குறைபாடுகளுடனும், நிஜ வாழ்வுக்கு வருவது சாத்தியமில்லை. எனவே, நாம் கிருஷ்ணர் போன்ற புருஷர்களிடம் இருந்து அவற்றை பெற வேண்டும். அங்கிகாரம் பெற்ற அவரது பிரதிநிதியிடமிருந்தும் பெறலாம். அதுதான் உண்மையான அறிவு. அதன்பிறகு நீங்கள் பக்குவ நிலையை அடைவீர்கள்.