TA/Prabhupada 0528 - ராதாராணி கிருஷ்ணரின் இன்ப சக்தியாவார்



Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

இன்று ஸ்ரீமதி ராதாராணியின் அவதார தினம் ராதாஷ்டமி. கிருஷ்ணர் பிறந்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு, ராதாரணி தோன்றினார். ( இடைவெளி ) ராதாராணி கிருஷ்ணரின் இன்ப ஆற்றல். ராதா-க்ருஷ்ண-ப்ரணய-விக்ருதிர் ஹ்லாதினீ-ஷக்தி:. முழுமுதற்கடவுளான பகவான் பலவிதமான ஆற்றல்களைப் பெற்றுள்ளார், இது வேத இலக்கியத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ருயதே (CC Madhya 13.65, purport). ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே. முழுமுதற் கடவுளுக்கு என்று தனிப்பட்ட முறையில் செய்வதற்கு எதுவும் இல்லை. ந தஸ்ய கார்யம். அவருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த பௌதீக உலகில் மிகப் பெரிய மனிதர்களைக் காண்பதைப் போல, அரசியல் தலைவர் அல்லது வணிகத் தலைவர்; தனிப்பட்ட முறையில், அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அவருக்கு பல உதவியாளர்கள், செயலாளர்கள் உள்ளனர், தனிப்பட்ட முறையில் அவர் செய்வதற்கு எதுவுமில்லை. இதேபோல், ஆறு செழுமைகள் நிறைந்த, முழுமுதற்கடவுள் ஏன் ஏதாவது செய்ய வேண்டும்? இல்லை. அவருக்கு பல உதவியாளர்கள் உள்ளனர். ஸர்வதஹ் பாணி- பாதஸ் தத் பகவத் கீதை: "அவருடைய கைகளும் கால்களும் அனைத்து இடங்களிலும் உள்ளது" என்கிறது. நீங்கள் கிருஷ்ணரைக் காண்பீர்கள். அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர் வெறுமனே கோபிகள் மற்றும் ராதாராணியுடன் இன்பத்தில் ஈடுபடுகிறார். அவர் அசுரர்களைக் கொல்வதில் ஈடுபடவில்லை . அசுரர்களை கொல்லும் பொழுது கிருஷ்ணர் வசுதேவ கிருஷ்ணராக இருக்கிறாரே தவிர உண்மையான கிருஷ்ணராக இல்லை. கிருஷ்ணர் தன்னை விரிவு படுத்திக் கொள்கிறார். பல தேவர் முதல் விரிவாக்கம். பலதேவரில் இருந்து- சங்கர்சன, ப்ரத்யும்ன, அனிருத்த, வாசுதேவ. எனவே வாசுதேவ அம்சத்தால் அவர் மதுரா மற்றும் துவாரகாவில் செயல்படுகிறார். ஆனால் கிருஷ்ணர் தனது அசல் அம்சத்தில், பிருந்தாவனத்தில் இருக்கிறார். வங்காளத்தின் மிகச்சிறந்த புனைகதை எழுத்தாளர்களில் ஒருவரான பன்கிம்ச்சந்திர சாட்டர்ஜி, கிருஷ்ணரைத் தவறாகப் புரிந்து கொண்டார், அதாவது பிருந்தாவனக் கிருஷ்ணர், துவாரகைக் கிருஷ்ணர், மற்றும் மதுரைக் கிருஷ்ணர், என அவரை வெவ்வேறு நபர்கள் என்று தவறுதலாக எண்ணினார். கிருஷ்ணர் அதே ஒருவர் தான். ஆனால் அவர் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான வடிவங்களில் தன்னை விரிவுபடுத்த முடியும். அத்வைதம் அச்யுதம் அனாதிம் அனந்த-ரூபம் ஆத்யம் புராண-புருஷம் ( Bs 5.33 ). அத்வைதம். அனந்த ரூபம் என்றாலும், இன்னும், அவர் ஆத்யம் புராண-புருஷம், அத்வைதா. அத்தகைய வேறுபாடு எதுவும் இல்லை. எனவே இந்த கிருஷ்ணர், அவர் அனுபவிக்க விரும்பும் போது, ​​அவருக்கு என்ன மாதிரியான இன்பம் இருக்கும்? இதனைப் பற்றி ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி பேசுகிறார். கிருஷ்ணர் பரம் பிரம்மன். பிரம்மன், பரமாத்மா, பின்னர் பரம் பிரம்மன். மெய்ப்பொருள், மூன்று வெவ்வேறு அம்சங்கள். சிலர் மெய்ப்பொருளை அருவ பிரம்மனாக உணருகின்றனர். மெய்ப்பொருளை அறிந்து கொள்ள நினைக்கும் ஞானிகள் மன கற்பனையினாலும் தன் சொந்த அறிவினாலும் பரம்பொருளை அருவ பிரம்மமாக உணர்கிறார். மேலும் தியானத்தால் மெய்ப்பொருளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள், யோகிகள், அவர்கள் பரம்பொருளை பரமாத்மாவாக உணர்கின்றனர். பரமாத்மா அனைவரின் இதயத்திலும் வசிக்கிறார். ஈஸ்வர சர்வ பூதானாம் ஹர்த் தேசே அர்ஜுன திஷ்டதி (BG 18.61) அந்த அம்சம், பரமாத்மா அம்சம். அந்தாண்தர- ஸ்தம் பரமானு-சயாந்தர- அஸ்தம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம அஹம் பஜாமி. அந்த பரமாத்மா அம்சம் கிருஷ்ணரின் ஒரு விரிவாக்கம் ஆகும். இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, அதவா பஹுனைதென கிம் ஞாதேன தவார்ஜுன ஏகாம்ஸேன விஷ்டபியஹம் ஏகாம்ஸேன. கிருஷ்ணரும் அர்ஜுனனும் கிருஷ்ணரின் வெவ்வேறு உண்மை இருப்பைப் பற்றி புரிந்து கொள்ள முயன்றபோது, அவர் பன்னிரண்டாவது (பத்தாவது) அத்தியாயத்தில் விளக்கினார், "நான் இதுதான். இவற்றில் நான் இது இவற்றில்..." என்பதாக. அவர் முடித்தார், "நான் எவ்வளவு தூரம் செல்வேன்? என்னுடைய ஒரு முழுமையான பகுதி மட்டுமே இந்த பிரபஞ்சத்திற்குள் நுழைவதன் மூலம், முழு அண்ட வெளிப்பாடும் உள்ளது. " என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய். ஏகாமசேன ஸ்திதோ ஜகத் (BG 10.42) ஜகத். இந்த பௌதீகஉலகம் கிருஷ்ணரின் ஒரு முழுமையான பகுதியில் உள்ளது. மேலும் கிருஷ்ணர் நுழைகிறார், அந்தாந்தரா-ஸ்தம் பரமாணு-சயாந்தர- ஸ்தம், அவர் இந்த பிரபஞ்சத்திற்குள் நுழைகிறார். அவர் நுழையாமல், இந்த பிரபஞ்சம் உயிர் வாழ முடியாது. எப்படி ஆத்மா இந்த உடலுக்குள் நுழையாமல், இந்த உடல் உயிர் வாழ முடியாதோ அதுபோல். ஆத்மா வெளியே சென்றவுடன், உடல் பயனற்றது ஆகிறது. உடல் பிரதமராகவோ அல்லது எவராகவோ இருக்கலாம், ஆன்மா இந்த உடலில் இருந்து வெளியேறியவுடன், அது ஒரு சிறிய பொருளின் மதிப்பு கூட அதற்கு இல்லை. இதேபோல், கிருஷ்ணர் இந்த பிரபஞ்சத்திற்குள் நுழைவதால், பிரபஞ்சத்திற்கு மதிப்பு உண்டு. இல்லையெனில் அது வெறுமனே ஒரு கட்டியாகும்; அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏகாம்ஸேன ஸ்திதோ ஜகத்.