TA/Prabhupada 0530 - ஒருவர் விஷ்ணுவை அனுகும்போது, தனது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார்



Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. இந்த வாழ்க்கை பிரம்மத்தைப் பற்றி அறிவதற்காகவே உள்ளது. பிரம்மன், பரமாத்மா, பகவான். இந்த விசாரணைகள் இருக்க வேண்டும். ஜிஜ்னாசு. அவர்கள் ஜிஜ்னாசு, பிரம்மா-ஜிஜ்னாசா என்று அழைக்கப்படுகிறார்கள். ஜிஜ்னாசு, விசாரணை. "இன்றைய செய்தி என்ன?" என்று தினமும் காலையில் கேட்டுக்கொண்டே உடனடியாக செய்தித்தாளை எடுக்கிறோம். அந்த அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் நாம் மிகவும் அடிப்படை விஷயங்களை மட்டுமே விசாரிக்கிறோம். மிக உயர்ந்த சாத்தியமான பிரம்ம-ஞானத்தைப் பற்றி கேட்டறியும் ஆர்வமில்லை. இந்த நவீன நாகரிகத்தின் பற்றாக்குறை அதுதான். பணம் சம்பாதிப்பது எப்படி என்று விசாரித்தல்: திவா சார்தேஹயா ராஜன் குடும்ப-பரணேன வா (SB 2.1.3) இந்த யுகத்தில் மட்டுமல்ல ... இந்த யுகத்தில் இது முக்கிய காரணியாகிவிட்டது, ஆனால் இந்த பௌதீகஉலகில், எல்லோரும் வெறுமனே - இந்த வாழ்க்கையின் உடல் தேவைகளுக்காக மட்டுமே ஈடுபட்டுள்ளனர். நித்ரயா ஹ்ருயதே நக்தம்: இரவில் அவர்கள் தூங்குகிறார்கள், மிகவும் ஆழ்ந்த உறக்கம், குறட்டையுடன். அல்லது பாலியல் வாழ்க்கை. நித்ரயா ஹ்ருயதே நக்தம் வ்யவாயேன ச வா வய: (SB 2.1.3). இவ்வாறாக அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். மேலும் பகல் நேரத்தில், திவா சார்தே ஹயா ராஜன்... மேலும் பகல் நேரத்தில், "பணம் எங்கே? பணம் எங்கே? பணம் எங்கே?" அர்த்த இஹாய. குடும்ப-பரணேன வா. ஒருவருக்கு பணம் கிடைத்தவுடன், குடும்பத்திற்கான பொருட்களை எவ்வாறு வாங்குவது, அவ்வளவுதான். கடையில் பொருட்களை வாங்குதல், அதனை சேமித்து வைத்தல். இதுவே பௌதீக வாழ்க்கையின் ஈடுபாடு. அதில், உண்மையில் புத்திசாலியான ஒருவர்... மனுஷயானாம் ஸஹஸ்ரேஷு கஸ்ச்சித் யததி ஸித்தயே (BG 7.3). .இதுபோன்ற தூக்கம், இனச்சேர்க்கை, பணம் சம்பாதித்தல் மற்றும் குடும்பத்திற்கு நல்ல அடுக்குமாடி இல்லம் மற்றும் உணவை வழங்குதல் .. என்று உழண்டு கொண்டிருக்கும் முட்டாள் தனமான நபர்களுக்கு, இது பொதுவான தொழில். எனவே பல ஆயிரம் மக்களில், இந்த மனித வாழ்க்கையை எவ்வாறு முழுமையாக்குவது என்று அறியும் ஆர்வமுடையவர் மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே. ஸித்தயே. ஸித்தி என்றால் முழுமை. எனவே இந்த வாழ்க்கை முழுமை பெறுவதற்கானது. முழுமை என்றால் என்ன? முழுமையானது என்பது- வாழ்க்கையின் துன்பம் நிறைந்த நிலையை விரும்பாததைக் குறிக்கும். நாம் அதிலிருந்து வெளியேற வேண்டும். அதுவே முழுமை. எல்லோரும் வாழ்க்கையின் பரிதாப நிலையில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால் பரிதாபகரமான வாழ்க்கையின் உண்மையான நிலை என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. வாழ்க்கையின் பரிதாப நிலை: திரி-தாப- யந்தனா. எனவே இது முக்தி அல்லது விடுதலை என்று அழைக்கப்படுகிறது ... ஆத்யந்திக-து:க-நிவ்ருத்தி:. து:க, து:க என்றால் துன்பம் என்று பொருள். எனவே எல்லோரும் துயரத்திலிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால் துயரத்திலிருந்து வெளியேறுவதன் இறுதி இலக்கு என்னவென்று அவருக்குத் தெரியாது. ந தே விது. அவர்களுக்கு தெரியாது. ந தே விது சுவார்த்த- கதிம் ஹி விஷ்ணும் (SB 7.5.31). விஷ்ணுவை அணுகும்போது ஒருவர் துன்பத்திலிருந்து வெளியேறலாம். தத் விஷ்ணும் பரமம் பதம் ஸத பஷ்யந்தி ஸூரய:. தத் விஷ்ணும் பரமம் பதம். விஷ்ணு கிரகம்... பௌதீக உலகில் இங்கே அவர்கள் சந்திர கிரகத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள், ஆனால் இந்த முட்டாள்களுக்குத் தெரியாது, அவர்கள் சந்திர கிரகத்திற்குச் சென்றாலும் அவர்கள் எதைப் பெறுவார்கள் என்று தெரியவில்லை. அதுவும் பௌதீக கிரகங்களில் ஒன்றாகும். கிருஷ்ணர் ஏற்கனவே கூறியுள்ளார் பகவத்-கீதையில், அப்ரஹ்மா- புவனால் லோகான். இந்த சந்திர கிரகத்தைப் பற்றி என்ன பேச வேண்டும் - அது மிக அருகில் உள்ளது - பிரம்மலோகா என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த கிரகத்திற்கு நீங்கள் சென்றாலும்... அது உங்கள் முன்னால் உள்ளது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவிலும், எத்தனை லோகாக்கள் மற்றும் கிரகங்கள் உள்ளன என்பதை நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் அங்கு செல்ல முடியாது. நீங்கள் வெறுமனே அருகிலுள்ள கிரகத்திற்கு செல்ல முயற்சிக்கிறீர்கள். அதுவும் தோல்வி. உங்கள் அறிவியல் முன்னேற்றம் என்ன? ஆனால் வாய்ப்பு உள்ளது. அ - ப்ரஹ்மா- புவனால் லோகான். நீங்கள் போகலாம். பௌதீக விஞ்ஞானிகளின் கணக்கீடு என்னவென்றால், ஒருவர் முன்னோக்கிச் சென்றால், நாற்பதாயிரம் ஆண்டுகளாக ஒளியின் வேகம், ஒளி ஆண்டு வேகம், இந்த பௌதீக உலகின் மிக உயர்ந்த கிரகத்தை ஒருவர் அணுகலாம். எனவே குறைந்தபட்சம் நவீன அறிவியல் கணக்கீட்டில், அது சாத்தியமற்றது. ஆனால் ஒருவர் செல்லலாம்; வழிமுறை உள்ளது. எங்கள் சிறிய கையேட்டில் மற்ற கிரகங்களுக்கான எளிதான பயணத்தை விளக்க முயற்சித்தோம். யோக செயல்முறை மூலம் ஒருவர் விரும்பும் எந்த கிரகத்திற்கும் செல்ல முடியும். அதுதான் யோகத்தின் முழுமை. ஒரு யோகி பரிபூரணராகும்போது, ​​அவர் விரும்பும் எந்த கிரகத்திற்கும் செல்லலாம், மற்றும் யோகா பயிற்சி தொடர்கிறது, யோகி அவர் விரும்பும் எந்த கிரகத்திற்கும் பயணம் செய்ய தன்னை முழுமையாக்கிக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் வரை அதுதான் யோகப் பயிற்சியின் முழுமையாகும். எனவே, இது வாழ்க்கையின் முழுமையே தவிர, அந்த சிரிய, மிதக்கும் ஸ்பூட்னிக் அல்ல. (சிரிப்பு) வாழ்க்கையின் முழுமை என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் எங்கும் செல்லலாம்.