TA/Prabhupada 0529 - ராதா மற்றும் கிருஷ்ணரின் அன்பு விவகாரங்கள் சாதாரணமானவை அல்ல



Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

எனவே கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கிருஷ்ணர் அனுபவிக்க விரும்பும் போது, ​​அது என்ன வகையான இன்பமாக இருக்கும்? இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். கிருஷ்ணர் மிகவும் உயர்ந்தவர்; கடவுள் உயர்ந்தவர், என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, உயர்ந்தவர்கள் அனுபவிக்க விரும்பும் போது, ​​அந்த இன்பத்தின் தரம் என்னவாக இருக்க வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ராதா- கிருஷ்ணா... ஆகவே ஸ்வரூப தமோதரா கோஸ்வாமி ராதா-க்ருஷ்ண-ப்ரணய-விக்ருதி:. என்ற பாடலை எழுதியுள்ளார். ராதா கிருஷ்ணரின் அன்புப் பரிமாற்றங்கள் சாதாரணமானவை அல்ல, பௌதீகக் காதல் விவகாரங்கள் போல தோன்றினாலும். ஆனால் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவர், அவஜாநந்தி மாம் மூடா (BG 9.11). மூடா, அயோக்கியர்கள், முட்டாள்கள் கிருஷ்ணரை சாதாரண மனிதனாக புரிந்துகொள்கிறார்கள். கிருஷ்ணரை நம்மில் ஒருவராக எடுத்துக் கொண்டவுடன் ... மானுஷீம் தனும் ஆஷ்ரிதாம், பரம் பாவம் அஜானந்த:. இந்த வஞ்சகர்களுக்கு பரம் பாவம் தெரியாது. அவர்கள் கிருஷ்ண லீலை, ராச-லீலையைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள். பல மோசடிகாரர்கள் உள்ளனர். இது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிருஷ்ணரைப் பற்றிய புரிதல் இல்லை. கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத: (BG 7.3) பத்து லட்சம் நபர்களில், ஒருவர் தனது வாழ்க்கையை முழுமையாக்க முயற்சிக்கலாம். எல்லோரும் மிருகத்தைப் போலவே வேலை செய்கிறார்கள். வாழ்க்கையின் முழுமை குறித்து எந்த கேள்வியும் இல்லை. விலங்குகளின் இயற்கைக் குணம்: உண்ணுதல், உறங்குதல், இனச்சேர்க்கை மற்றும் தற்காப்பு ... எனவே எல்லோரும் விலங்குகளைப் போலவே வாழ்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வேறு வேலையில்லை - விலங்கு, பன்றிகள், நாய்கள் போல், பகல் மற்றும் இரவு முழுவதும் வேலை: "மலம் எங்கே? மலம் எங்கே?" மேலும் அவருக்கு கொஞ்சம் மலம் கிடைத்தவுடன், கொஞ்சம் கொழுப்பு கிடைக்கிறது, "இனசேர்கை எங்கே? இனசேர்கை எங்கே?" தாய் சகோதரி என்ற வேறுபாடில்லை. இது பன்றியின் வாழ்க்கை. மனித வாழ்க்கை என்பது பன்றி நாகரிகத்திற்காக அல்ல. நவீன நாகரிகம் சட்டை கோட்டுடன் மெருகூட்டப்பட்டிருந்தாலும் பன்றி நாகரிகமாகவே உள்ளது. எனவே, நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்காகவே. கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளவதற்கு சிறிது உழைப்பு, ஒழுக்கம், தவம் தேவை. தபஸ்ய ப்ரஹ்மசார்யேண ஷமேன தமேன ச. தபஸ்ய. ஒருவர் தவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரம்மச்சர்ய, பிரம்மச்சரியம். தபஸ்ய. ப்ரஹ்மச்சர்ய என்றால் பாலியல் வாழ்க்கையை நிறுத்துதல் அல்லது பாலியல் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துதல் என்று பொருள். ப்ரஹ்மச்சர்ய. எனவே வேத நாகரிகம் ஆரம்பத்திலிருந்தே. சிறுவர்களை பிரம்மச்சர்யத்தில், பிப்ரம்மச்சாரியாக்கப் பயிற்றுவிக்க முனைந்துள்ளது. நவீன நாட்களில், பள்ளிகள், சிறுவர் சிறுமிகள், பத்து ஆண்டுகள், பன்னிரண்டு ஆண்டுகள், அனுபவிக்கிறார்கள் என்றில்லை. மூளை கெட்டுப்போகிறது. அவர்களால் உயர்ந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. மூளை திசுக்கள் செயல் இழந்துவிட்டன. எனவே பிரம்மச்சாரி ஆகாமல், ஆன்மீக வாழ்க்கையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. தபஸ்ய ப்ரஹ்மசார்யேண ஷமேன தமேன ச. ஷம என்றால் புலன்களைக் கட்டுப்படுத்துதல், மனதைக் கட்டுப்படுத்துதல்: தமேன, புலன்களைக் கட்டுப்படுத்துதல்; த்யாகேன; சவுச்சேன, தூய்மை; த்யாக , த்யாக என்றால் கருணை. இவை தன்னைப் புரிந்துகொள்வதற்கான செயல்முறைகள், தன்னை உணர்தல். ஆனால் இந்த யுகத்தில் இந்த செயல்முறைகள் அனைத்தையும் மேற்கொள்வது மிகவும் கடினம். நடைமுறையில் அது சாத்தியமற்றது. எனவே பகவான் சைதன்யர், கிருஷ்ணரே, ஒரு செயல்முறையால் தன்னை எளிதாகக் கிடைக்கும்படி செய்துள்ளார்: ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா (CC Adi 17.21) இந்த யுகத்தில், கலி-யுகம் ... கலி-யுகம் மிகவும் வீழ்ச்சியடைந்த காலமாக கருதப்படுகிறது. நாம் மிகவும் முன்னேறுகிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் இது மிகவும் வீழ்ச்சியடைந்த காலம். ஏனென்றால் மக்கள் விலங்குகளைப் போல ஆகிறார்கள். உடல் தேவைகளின் நான்கு கொள்கைகளைத் தவிர விலங்குகளுக்கு வேறு ஆர்வம் இல்லை என்பதால் - உண்ணுதல், உறங்குதல், இனச்சேர்க்கை மற்றும் தற்காப்பு- ஆக இந்த யுகத்தில் உடல் தேவையின் நான்கு கொள்கைகளில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களிடம் ஆன்மா பற்றிய எந்த தகவலும் இல்லை, ஆன்மா என்றால் என்ன என்பதை உணரவும் அவர்கள் தயாராக இல்லை. அதுதான் இந்த யுகத்தின் குறைபாடு. ஆனால் மனிதனின் வாழ்க்கை "நான் யார்?" என்பதை உணர்வதற்காகவே அமைந்தது. அதுதான் மனித வாழ்க்கையின் தலையான நோக்கம்.