TA/Prabhupada 0532 - கிருஷ்ணரின் இன்பம் எந்த பௌதிகப் பொருளிலும் இல்லை



Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

ஆகவே, கிருஷ்ணர், பரம உண்மை, ஆனந்தமயமானவர், ஆகையால், ஏகோ பஹு ஸ்யாம், அவர் பல ஆகிவிட்டார். நாமும் கிருஷ்ணருக்கு இன்பம் அளிக்க, கிருஷ்ணரின் பகுதியாக உள்ளோம். மற்றும் முக்கிய இன்ப ஆற்றல் ராதாரானி. ராதா-க்ருஷ்ண-ப்ரணய-விக்ருதிர் ஹ்லாதினீ-ஷக்திர் அஸ்மாத் ஏகாத்மானாவ் அபி புவோ (புரா) தேஹ-பேதோ-கதௌ தௌ சைதன்யாக்யம் ப்ரகடம் அதுனா தத்-த்வயம் சைக்யம் ஆப்தம் ஆதா-பாவ-(த்யுதி)-ஸுவலிதம் நௌமி க்ருஷ்ண-ஸ்வரூபம் (CC Adi 1.5) எனவே கிருஷ்ணர் தான் பரம் பிரம்மம் என்பது பகவத் கீதையிலிருந்து உங்களுக்கே தெரியும். அர்ஜுனன் பகவத் கீதையைப் புரிந்து கொண்டபோது, ​​அவர் கிருஷ்ணரை உறுதிப்படுத்தினார், பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் (BG 10.12). எனவே கிருஷ்ணர் பரம் பிரம்மம். எனவே இந்த பௌதீக உலகில் ஒரு சிறந்த, புனிதமான நபர், வெறுமனே ப்ரஹ்மானந்தத்தை அனுபவிக்க, அவர் பௌதீக இன்பம் அனைத்தையும் விட்டுவிடுகிறார். அவர் சன்யாசி ஆகிறான். அஹம் ப்ரஹ்மாஸ்மி. அவர் பிரம்ம உணர்வில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள. ஆகவே, பிரம்மன் உணர்தலுக்கான எல்லாவற்றையும் ஒருவர் விட்டுவிட வேண்டும் என்றால், பரம பிரம்மம், உயர்ந்த பிரம்மம், பௌதீகமான ஒன்றை அனுபவிக்க முனைவார் என்று நினைக்கிறீர்களா? இல்லை. கிருஷ்ணரின் இன்பம் பொருளில் இல்லை. இதனை நன்றாக புரிந்துகொள்ளவும். பிரம்மன் உணர்தலுக்காக நாம் ஜடத்தின் மேல் உள்ள பற்றை விட்டுவிடுகிறோம். பரம் பிரம்மம் எவ்வாறு எந்தவொரு பொருளையும் அனுபவிக்க முனைவார்? இந்த கேள்வியை ஜீவ கோஸ்வாமி மிக நேர்த்தியாக விவாதித்துள்ளார். எனவே பரம் பிரம்மம் ... முதலில், இந்த பௌதீக உலகில் பரம் ப்ரஹ்மத்தின் தகவல் இல்லை. சிறிய அளவில் பிரம்ம தகவல் உள்ளது. அல்லது சிறிய அளவில் பரமாத்மா தகவல் உள்ளது. ஆனால் பரம் பிரம்மம், அல்லது பகவன் தகவல் அல்ல. மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே (BG 7.3). சித்தயே என்றால் பிரம்மம் அல்லது பரமாத்மாவைப் புரிந்துகொள்வது. ஆனால் அத்தகைய பல நபர்களில், பிரம்மம் அல்லது பரமாத்மாவை உணர்ந்தவர்கள், ஒரு நபராவது கிருஷ்ணரை அறியவது முடியாது. அது ... முதலில் ... (தடங்கல்) ... கிருஷ்ணரின் இன்ப ஆற்றலைப் பற்றி நாம் என்ன புரிந்து கொள்ள முடியும்? சில பெரிய மனிதர்களை நான் தெரிந்து கொள்ள விரும்பினாற்போல. அது ஒரு செயல்முறை. அந்த பெரிய மனிதரை அறியாமல், அவருடைய உள் விவகாரங்களைப் பற்றி நான் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இதேபோல், கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளாவிட்டால், கிருஷ்ணர் எப்படி அனுபவிக்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அது சாத்தியமில்லை. ஆனால் கோஸ்வாமிகள், அவர்கள் நமக்கு தகவல் தருகிறார்கள், கிருஷ்ணரின் இன்ப ஆற்றல் என்னவென்று. அது தான் ஸ்ரீமதி ராதாரானி. எனவே ராதா- கிருஷ்ணா அன்புப் பரிமாற்றங்கள் பற்றி விவரித்தோம், பகவான் சைதன்யரின் போதனைகளில், பக்கம் 264 இல். இந்த புத்தகம் உங்களிடம் இருந்தால், அதில் நீங்கள் படிக்கலாம், ராதா- கிருஷ்ணரின் அன்புப் பரிமாற்றங்கள் எவ்வாறு உள்ளது, ஆழ்நிலையில். எனவே ராதாராணிக்கு நம்முடைய பிரார்த்தனை ... கிருஷ்ணரின் இன்ப ஆற்றல் அவள் என்பதால் நாம் ராதாராணியை வேண்டுகிறோம். கிருஷ்ணர் என்றால் "அனைவரையும் கவர்பவர்" என்று பொருள். ஆனால் ராதாரணி கிருஷ்ணரை ஈர்க்கும் அளவுக்கு பெரியவர். கிருஷ்ணா அனைவரையும் கவர்ந்திழுக்கிறார், ஆனால் ராதையோ - கிருஷ்ணரையே ஈர்க்கும் கவர்ச்சிக்குடையவள். அப்படியானால் ஸ்ரீமதி-ராதாராணியின் நிலை என்ன? இந்த நாளில் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் நமது வணக்கங்களை ராதாரானிக்கு வழங்க வேண்டும். ராதே விருந்தாவனேஷ்வரி. தப்த-காஞ்சனா-கௌராங்கி ராதே விருந்தாவனேஸ்வரி விருஷபானு-சுதே தேவி ப்ரணமாமி ஹரி-ப்ரியே. நமது வேலை "ராதாரானி, நீங்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். நீங்கள் மன்னர் விருஷபானுவின் மகள், நீங்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் எனவே எங்கள் மரியாதைக்குரிய வணக்கங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். " டப்தா-காஞ்சனா- கௌராங்கி ராதே விரிந்தாவனேஸ்வரி வ்ரிஷபானு- சுதே தேவி ப்ரணமாமி ஹரி-ப்ரியே.