TA/Prabhupada 0533 - ராதா ராணி ஹரிபிரியா ஆவார். அதாவது கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்



Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

ராதாரானி ஹரி-பிரியா, கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். ஆகவே, கிருஷ்ணரை ராதாரானி வழியாக, ராதாராணியின் கருணையின் மூலம் அணுகினால், அது மிகவும் எளிதானது. ராதாரானி "இந்த பக்தர் மிகவும் அருமை" என்று பரிந்துரைத்தால், நான் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் கிருஷ்ணர் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார். இது ராதாராணியால் பரிந்துரைக்கப்படுவதால், கிருஷ்ணர் ஏற்றுக்கொள்கிறார். எனவே பிருந்தாவனத்தில் நீங்கள் அனைத்து பக்தர்களையும் காணலாம், அவர்கள் கிருஷ்ணரின் பெயரை விட ராதாராணியின் பெயரை ஜெபிக்கிறார்கள். எங்கு சென்றாலும், பக்தர்கள் "ஜெய ராதே" என்று ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளுவதைக் காணலாம். இன்றும் பிருந்தாவனத்தில் காண்பீர்கள். அவர்கள் ராதாராணியைப் போற்றுவார்கள். அவர்களுக்கு ராதாராணியை வணங்குவதிலேயே அதிக ஆர்வம். ஏனென்றால் நான் வாழ்கையில் எவ்வளவு வீழ்ச்சி அடைந்திருந்தாலும், எப்படியாவது ராதாராணியை மகிழ்விக்க முடிந்தால் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதாகி விடும். இல்லையெனில், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஷ்சித் வேத்தி மாம் தத்த்வத: (BG 7.3) கிருஷ்ணரை சொந்த அனுமானம் மூலம் புரிந்துகொள்ள முற்பட்டால், அது பல, பல ஜென்மங்கள் எடுக்கும். ஆனால் பக்தி சேவையை மேற்கொண்டால், ராதாராணியை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள், கிருஷ்ணரை மிக எளிதாக பெறமுடியும். ஏனெனில் ராதாராணியால் கிருஷ்ணரை வழங்க முடியும். அவள் மிகப் பெரிய பக்தர், ஒரு மஹா-பாகவதரின் உருவம். ராதாராணியின் குணம் என்ன என்பதை கிருஷ்ணரால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. கிருஷ்ணர் கூட, வேதாஹம் ஸமதீதான் (BG 7.26), "எனக்கு எல்லாம் தெரியும்" என்று அவர் சொன்னாலும், அவர் ராதாராணியைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். ராதாராணி அவ்வளவு பெருமை வாய்ந்தவர். அவர் கூறுகிறார் ... உண்மையில், கிருஷ்ணருக்கு எல்லாம் தெரியும். ராதாராணியைப் புரிந்து கொள்வதற்காக, கிருஷ்ணர் ராதாராணியின் நிலையை ஏற்றுக்கொண்டார். கிருஷ்ணர் ராதாராணியின் ஆற்றலைப் புரிந்து கொள்ள விரும்பினார், கிருஷ்ணர் "நான் நிரம்பியிருக்கிறேன்" என்று நினைத்தார். நான் ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையானவன், ஆனால் இன்னும், நான் ராதாராணியைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏன்? " இந்த இயல்பு கிருஷ்ணரை ராதாராணியின் குணங்களை ஏற்க வேண்டிய கட்டாயத்தில், கிருஷ்ணரைத் தன்னைப் புரிந்து கொள்ள வைத்தது. இவை நிச்சயமாக புலனின்பத்திற்கு அப்பாற்பட்ட, சிறந்த அறிவியல். கிருஷ்ண உணர்வில் முன்னேறிய ஒருவர் மற்றும் சாஸ்திரங்களை நன்கு படித்து புரிந்தவர், இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நாம் இன்னும் சாஸ்திரத்திலிருந்து கலந்துரையாட முடியும். கிருஷ்ணர் தன்னை புரிந்து கொள்ள விரும்பியபோது, ஸ்ரீமதி ராதாராணியின் போக்கை அவர் பின்பற்றினார். அதுதான் சைதன்யா மஹாபிரபு. ராதா-பாவ-த்யுதி-ஸுவலிதம். சைதன்யா மகாபிரபு கிருஷ்ணர், ஆனால் அவர் ராதாராணியின் குணங்களை ஏற்றுக்கொண்டார். ராதாரானி எப்போதும் கிருஷ்ணரைப் பிரிந்த உணர்வுகளில் இருப்பதால், இதேபோல், ராதாராணியின் நிலையில், பகவான் சைதன்யர் கிருஷ்ணரை பிரிந்த உணர்வில் வாடினார். அதுதான் பகவான் சைதன்யரின் போதனைகள், பிரிவினை உணர்வுகள், சந்திப்பு அல்ல. சைதன்யா மகாபிரபு கற்பித்த பக்தி சேவையின் செயல்முறை, கிருஷ்ணரிடமிருந்து பிரிவில் வாடுவதை - அவரது சீடர்கள், அவரை பின்தொடர்ந்து பயின்றனர். அதுதான் ராதராணியின் நிலைப்பாடு, எப்போதும் பிரிவினை உணர்கிறது. கோஸ்வாமிகள், அவர்களும், அவர்கள் பிருந்தாவனத்தில் இருந்தபோது, "நான் கிருஷ்ணரைப் பார்த்தேன்" என்று அவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்கள் மிகச் சிறந்தவர்கள் என்றாலும், "நான் கிருஷ்ணரைப் பார்த்தேன்" என்று அவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களின் பிரார்த்தனை ஹே ராதே வ்ரஜ-தேவிகே ச லலிதே ஹே நந்த-ஸுனோ குத:. என்பதே ஹே ராதே, ராதாராணி, ஹே ராதே வ்ரஜா-தேவிகே சா ... ராதாரானி தனியாக இல்லை. அவன் (அவள்) எப்போதும் அவனுடைய (அவளுடைய) நண்பர்களுடன் இருக்கிறார், வ்ரஜ-தேவி லலிதா, விஷாகா மற்றும் விருந்தாவனத்தின் ஏனைய இளம் மங்கையர்கள். எனவே கோஸ்வாமின்கள் தங்கள் முதிர்ந்த கட்டத்தில், பிரார்த்தனை செய்கிறார்கள், அவர்கள் பிருந்தாவனத்தில் வசித்து வந்தபோது, ​​அவர்கள் இவ்வாறு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், ஹே ராதே வ்ரஜ-தேவிகே ச லலிதே ஹே நந்த-ஸுனோ குத:. "எங்கே, ராதாராணி, நீ எங்கே? உன் கூட்டாளிகள் எங்கே? கிருஷ்ணாவின் நந்தா மகாராஜாவின் மகன் நந்தா-சுனோ, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் , எல்லாம் எங்கே இருக்கிறீர்கள்? "அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். "கிருஷ்ணர் கோபிகளுடன் நடனமாடுவதை நான் பார்த்திருக்கிறேன். நேற்று இரவு பார்த்தேன்" என்று அவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை. (சிரிப்பு) இது சஹஜியா. இது முதிர்ந்த பக்தர் அல்ல. இது.... இவை சஹஜியா என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் எல்லாவற்றையும் மிகவும் மலிவாக எடுத்துக்கொள்கிறார்கள் - கிருஷ்ணா மிகவும் மலிவானவர், ராதாராணி மிகவும் மலிவானவர் - அவர்கள் ஒவ்வொரு இரவும் பார்க்க முடியும் போல. இல்லை. கோஸ்வாமிகள் எங்களுக்கு அப்படி கற்பிக்கவில்லை. அவர்கள் தேடுகிறார்கள். ஹே ராதே வ்ரஜ-தேவிகே ச லலிதே ஹே நந்த-ஸுனோ குத:. ஸ்ரீ-கோவர்தன-பாதப-தலே காலிந்தீ-வன்யே குத:: "நீங்கள் கோவர்தன மலையின் கீழ் இருக்கிறீர்களா, அல்லது யமுனாவின் கரையில்?" காலிந்தீ-வன்யே குத:. கோஷந்தாவ் இதி ஸர்வதோ வ்ரஜ-புரே கேதைர் மஹா-விஹ்வலௌ. அவர்கள் வாழ்க்கை முழுவதும் புலம்பி கொண்டிருந்தார்கள், "நீங்கள் எங்கே? " என்று "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், ராதாராணி? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், லலிதா, விஷாகா, ராதாராணியின் கூட்டாளிகளே ? "என்று. "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், கிருஷ்ணா? நீங்கள் கோவர்தன மலைக்கு அருகில் இருக்கிறீர்களா அல்லது யமுனாவின் கரையில் இருக்கிறீர்களா?" கோஷந்தாவ் இதி ஸர்வதோ வ்ரஜ-புரே ஆகவே, விருந்தாவனத்தின் முழுப் பகுதியிலும் அவர்கள் அழுதுகொண்டே தேடினார்கள், கேதைர் மஹா-விஹ்வலௌ, பைத்தியக்காரனைப் போல. கேதைர் மஹா-விஹ்வலௌ. வந்தே ரூப-ஸநாதனௌ ரகு-யுகௌ ஸ்ரீ-ஜீவ-கோபாலகௌ.