TA/Prabhupada 0535 - நாம் வாழும் உயிரிணங்கள் - இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை



Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973

மாண்புமிகு, உயர் ஆணையர்; பெண்கள் மற்றும் நன்மகன்கள், நீங்கள் இங்கு வந்து இந்த விழாவில் பங்கேற்றதற்கு மிக்க நன்றி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ணரின் அவதாரம். எனக்குப் பேசும்படி கட்டளையிடப்பட்ட விஷயம் கிருஷ்ணரின் அவதாரம். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்,

ஜன்ம கர்ம ச மே திவ்யம்
யோ ஜாநாதி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி கௌந்தேய
(BG 4.9)

இந்த உண்மை, வாழ்க்கையின் இந்தக் கட்டத்தை நாம் அடைவது, நமது பிறப்பு இறப்பை தடுக்கு முடியும் போது தான்... ச அமிர்தத்தவாய கல்பதே. இன்று காலை, நான் இந்த ஸ்லோகத்தை விளக்கிக் கொண்டிருந்தேன்:

யம் ஹி ந வ்யதயந்த்யேதே
புருஷம் புருஷர்ஸப
ஸம-து:க-ஸுகம் தீரம்
ஸோ 'ம்ருதத்வாய கல்பதே
(BG 2.15)

அமிர்தத்வ என்றால் அழியாத்தன்மை. எனவே நவீன நாகரிகம், அவர்களுக்கு எதுவும் தெரியாது, சிறந்த தத்துவவாதி, சிறந்த அரசியல்வாதி அல்லது சிறந்த விஞ்ஞானி, எவருக்கும், அழியாத கட்டத்தை அடைய முடியும் என்று தெரியாது. அமிர்தத்வ. நாம் அனைவரும் அமிர்தா. பகவத்-கீதையில் இது கூறப்படுகிறது, ந ஜாயதே ந ம்ரீயதே வா கதாசின் நாம் உயிர்வாழிகள் ஒருபோதும் இறக்க மாட்டோம், பிறக்கவும் மாட்டோம்.. நித்ய: ஷாஷ்வதோ யம், ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (BG 2.02). நாம் ஒவ்வொருவரும், நித்தியமானவர்கள், நித்ய: ஷாஷ்வதோ; புராண, பழமையான. இந்த உடலை நிர்மூலமாக்கிய பிறகு, நாம் இறப்பதில்லை. ந ஹன்யதே. உடல் முடிந்தது, ஆனால் நான் மற்றொரு உடலை ஏற்க வேண்டும். ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி. தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா (BG 2.13).

இந்த எளிய விஷயம், தற்போதைய தருணத்தில், அவர்களுக்கு அறிவு குறைவு, நாம், அனைத்து உயிர்வாழிகளும், கிருஷ்ணரின் அம்சம், நாம் நித்தியமானவர்கள், நாம் ஆனந்தமானவர்கள், நாம் அறிவாளிகள். கிருஷ்ணர் வேத சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளார்:

ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:
ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ:
அநாதிர் ஆதிர் கோவிந்த:
ஸர்வ-காரண-காரணம்
(Bs. 5.1)

ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ: கடவுள், கிருஷ்ணா, நான் கிருஷ்ணா என்று குறிப்பிடும் போது, ​​கடவுள் என்று பொருள். ஏதாவது முக்கியமான பெயர் இருந்தால் ... கடவுளே, கடவுளுக்கு பெயர் இல்லை என்று சில சமயங்களில் கூறப்படுகிறது. அது ஒரு உண்மை. ஆனால் கடவுளின் பெயர் அவருடைய செயல்களால் கொடுக்கப்படுகிறது. மகாராஜா நந்தாவின் மகனாக கிருஷ்ணர் ஏற்றுக்கொண்டது போல, அல்லது யசோதமாயி, அல்லது தேவகி, அல்லது வசுதேவ. வசுதேவாவும் தேவகியும் கிருஷ்ணரின் உண்மையான தந்தை மற்றும் தாய். கிருஷ்ணரின் உண்மையான தந்தை மற்றும் தாய் யாரும் இல்லை, ஏனென்றால் கிருஷ்ணரே அனைவருக்கும் அசல் தந்தை. ஆனால் கிருஷ்ணர் இங்கு வரும்போது, ​​அவதரிக்கிறார், அவர் சில பக்தர்களை தனது தந்தையாகவும், தாயாகவும் ஏற்றுக்கொள்கிறார். கிருஷ்ணர் அசல், ஆதி-புருஷம். ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச (Bs 5.33). அவர்தான் அசல் நபர். பின்னர் மிகவும் வயதாக இருக்க வேண்டுமா? இல்லை. ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச எப்போதும் புதிய இளைமையுடன் திகழ்வார். அதுதான் கிருஷ்ணா.