TA/Prabhupada 0536 - கிருஷ்ணரைப் புரிந்துக்கொள்ளாமல் நீங்கள் வேதங்களைப் படித்து என்ன பயன்
Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973
கிருஷ்ணர் குருக்ஷேத்திரத்தின் போர்க்களத்தில் இருந்தபோது, நீங்கள் படத்தைப் பார்த்திருப்பீர்கள், அவர் இருபது வயது சிறுவனைப் போல, அல்லது, அதிகபட்சமாக இருபத்து நான்கு வயதுடையவராக இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில், அவருக்கு கொள்ளுப்பேரக்குழந்தைகள் இருந்தனர். எனவே, கிருஷ்ணர் எப்போதும் இளைஞர். நவயௌவனம் ச. இவை வேத இலக்கியங்களின் கூற்றுகள்.
- அத்வைதம் அச்யுதம் அனாதிம் அனந்த-ரூபம்
- ஆத்யம் புராண- புருஷம் நவ-யௌவனம் ச
- வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தவ்
- ( Bs 5.33)
எனவே, கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள, வேத இலக்கியங்களை முறைப்படி படித்தால், கிருஷ்ணர் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். வேதேசு துர்லபம். எல்லா வேதங்களும் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்காகவே இருந்தபோதிலும். பகவத்-கீதையில், வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ என்று கூறப்படுகிறது (BG 15.15). அஹம் ஏவ வெத்யோ. கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளாவிட்டால், வேதங்களைப் படிப்பதால் என்ன பயன்? கல்வியின் இறுதி குறிக்கோள் புரிந்து கொள்வது, உயர்ந்த இறைவன், உயர்ந்த தந்தை, உயர்ந்த காரணம். இது வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஜென்மாத் அஸ்ய யத: (SB 1.1.1) அததோ ப்ரம்ம ஜிக்னாசா. ப்ரஹ்ம -ஜிக்னாஸா, முழுமுதற்பரம்பொருளை பிரம்மம் பற்றி கலந்துரையாடுவது. அந்த பிரம்மம் என்ன? ஜென்மாதி அஸ்ய யதஹ். அந்த பிரம்மம் என்றால் எதிலிருந்து எல்லாம் வெளிப்படுத்துகிறதோ அது. எனவே அறிவியல், தத்துவம், என்பது எல்லாவற்றிற்கும் இறுதி காரணத்தைக் கண்டுபிடிப்பதாகும். எல்லா காரணங்களுக்கும் கிருஷ்ணர் தான் காரணம் என்று சாஸ்திரங்களிலிருந்து, வேத இலக்கியங்களிலிருந்து நாம் பெறுகிறோம். சர்வ-காரண-காரணம். சர்வ-காரண-காரணம்.
- ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:
- ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ:
- அநாதிர் ஆதிர் கோவிந்த:
- ஸர்வ-காரண-காரணம்
- (Bs 5.1)
எல்லா காரணங்களுக்கும் காரணம். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் என் தந்தையால் உருவானேன். என் தந்தை அவரது தந்தையால் உருவானார். அவர் தனது தந்தையால், அவரது தந்தையால் உருவானார் ... தேடுங்கள், நீங்கள் இறுதியில் காரணமான ஒருவரிடம் வருவீர்கள். ஆனால் அவருக்கு எந்த காரணமும் இல்லை. அநாதிர் ஆதிர் கோவிந்தஹ் ( Bs 5.1 ). நான் என் மகனுக்கு காரணமாக இருக்கலாம், ஆனால் நானும் என் தந்தையின் காரணத்தின் விளைவாக இருக்கிறேன். ஆனால் சாஸ்திரம் அனாதிர் ஆதீர், அவர்தான் அசல் நபர், ஆனால் அவருக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறது. அதுதான் கிருஷ்ணா. ஜன்ம கர்ம ச மே திவ்யம் யோ ஜாநாதி தத்த்வத: (BG 4.9). கிருஷ்ணரின் வருகை, அது மிக முக்கியமான விஷயம். கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும், அவர் ஏன் அவதரிக்கிறார், அவர் ஏன் இந்த பௌதீக உலகில் வருகிறார், அவருடைய நோக்கம் என்ன, அவருடைய செயல்பாடுகள் என்ன. நாம் வெறுமனே கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சித்தால், அதன் விளைவு என்ன? இதன் விளைவாக தியாக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் எதி கவுந்தேயா (BG 4.9). நீங்கள் அந்த அழியாமையைப் பெறுவீர்கள். அழியாமையை அடைவதே வாழ்க்கையின் நோக்கம். அம்ரிதத்வாய கல்பத்தே. (BG 2.15)
எனவே கிருஷ்ணரின் வருகையில், கிருஷ்ணரின் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். மேதகு விருந்தினர் அமைதியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அமைதி சூத்திரம் உள்ளது, கிருஷ்ணர் பேசுகிறார். அது என்ன?
- போக்தாரம் யஜ்ஞ-தபஸாம்
- ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
- ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம்
- ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி
- (BG 5.29)
அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், அவர்கள் உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் என்றால் ... ஐக்கிய நாடுகள் சபை உள்ளது, மேலும் பல அமைப்புகளும் உள்ளன. அவர்கள் உண்மையான அமைதியையும், சாந்தியையும் பெற முயற்சிக்கிறார்கள், மனிதற்குள்ளும், தேசத்திற்கு இடையேயும், தவறான புரிதல் இல்லை. ஆனால் அது நடப்பதில்லை. அது நடப்பதில்லை. குறைபாடு என்னவென்றால், வேரில் தவறு. எல்லோருடைய சிந்தனையும் "இது என் நாடு. இது எனது குடும்பம். அது எனது சமூகம். அது எனது சொத்து " என உள்ளது. இந்த "என்னுடையது" ஓர் மாயை.