TA/Prabhupada 0538 - சட்டமென்பது ஒரு தேசத்தால் அளிக்கப்படுவது - அதை வீட்டிலிருந்து உருவாக்கமுடியாது



Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973

எனவே கிருஷ்ணா நமக்கு பாடம் கற்பிக்கவே அவதரிக்கிறார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத (BG 4.7). கிருஷ்ணர் சொல்கிறார், “எனதன்பு அர்ஜுனா, தர்மவாழ்க்கையின் செயல்பாட்டில் முரண்பாடுகள் இருக்கும்போது நான் வருகிறேன். " தர்மஸ்ய க்லானிர் பவதி. தர்மம் என்றால் என்ன? தர்மத்தின் எளிய விளக்கம் - தர்மாம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (SB 6.3.19). இது தர்மம். தர்மாம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (SB 6.3.19). சட்டம் என்றால் என்ன என்பது போலவே சட்டம் என்றால் அரசு கொடுக்கும் ஆணை. நீங்கள் வீட்டில் சட்டம் செய்ய முடியாது. அது சாத்தியமில்லை. "நீங்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்று அரசாங்கம் உங்களுக்கு என்ன கொடுத்தாலும் அதுதான் சட்டம். இதேபோல், தர்மம் என்றால் கடவுள் கொடுக்கும் வழிகாட்டல். அதுதான் தர்மம். எளிய விளக்கம். நீங்கள் ஒரு தர்மத்தை உருவாக்குகிறீர்கள். நான் ஒரு தர்மத்தை உருவாக்கியுள்ளேன், மற்றொரு மனிதன் மற்றொரு தர்மத்தை உருவாக்குகிறான்; இவை தர்மம் அல்ல. எனவே, பகவத்-கீதை எங்கே முடிகிறது, சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் என்று (BG 18.66), அதுவே தர்மம் - கிருஷ்ணரிடம் சரணடைதல். வேறு எந்த தர்மமும், தர்மம் அல்ல. இல்லையென்றால், கிருஷ்ணர் ஏன் கேட்கிறார்- சர்வ தர்மான் பரித்யஜ்ய : "விட்டுவிடு" ? கிருஷ்ணர் சொன்னார், தர்ம-ஸம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே (BG 4.8): "நான் தர்மத்தின் கொள்கைகளை நிலைனாட்ட அவதரிக்கிறேன்." கடைசியில் அவர் கூறுகிறார், சர்வ தர்மான் பரித்யஜ்ய. அதாவது நாம் தயாரித்த தர்மங்கள் என்று அழைக்கப்படுபவை, மனிதனால் உருவாக்கப்பட்ட தர்மங்கள், அவை தர்மங்கள் அல்ல. தர்மம் என்றால், அது கடவுள் கொடுத்தது. ஆனால் கடவுள் என்றால் என்ன, அவருடைய வார்த்தை என்ன என்பது நமக்கு புரியவில்லை. அதுதான் நவீன நாகரிக குறைபாடு. ஆனால் ஒழுங்கு உள்ளது, கடவுள் இருக்கிறார் - நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமைதிக்கான சாத்தியம் எங்கே? கடவுளின் கட்டளை உள்ளது. கிருஷ்ணர் - கூறுகிறார் புருஷோத்தம்மர், பகவான் உவாச்ச. வியாசாதேவர் பகவான் உவாச்ச என்று எழுதுகிறார். பகவான் என்றால் என்ன என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். வியாசாதேவர் கிருஷ்ண உவாச்ச என்று எழுதியிருக்கலாம். இல்லை. அவர் கூறுகிறார் ... கிருஷ்ணரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ள கூடும், எனவே அவர் ஒவ்வொரு ஸ்லோகத்திலும், ஒவ்வொரு வசனத்திலும், ஸ்ரீ பகவான் உவாச்ச என்று எழுதுகிறார். எனவே பகவான் இருக்கிறார். பகவான் பேசுகிறார். பகவானை அனைத்து ஆச்சார்யர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். ராமனுஜாச்சார்யா, மத்வாச்சார்யா, விஷ்ணு சுவாமி. சமீபத்திய, பகவான் சைதன்ய மஹாபிரபுவும், சங்கராச்சாரியாரும் கூட, அவர், கிருஷ்ண-சா பகவான் ஸ்வயம் கிருஷ்ணா என்று ஏற்றுக்கொள்கிறார். எனவே நவீன ஆச்சார்யாக்களின் தீர்ப்பு, கடந்த காலங்களிலும், வியாசாதேவர், நாரதர், அசிதர் எல்லோரும் புருஷோத்தமரான முழுமுதல் கடவுளைக் கிருஷ்ணர் என்று ஏற்றுக்கொண்டனர். பகவத்-கீதையைக் கிருஷ்ணரிடமிருந்து கேட்டுப் புரிந்து கொண்ட பிறகு, அர்ஜுனன், பரம் ப்ரஹ்மா பரம் தாமா பவித்ரம் பரமம் பவான் என்றான் புருஷம் ஆத்யம் சாஸ்வதம் (BG 10.12).

எனவே எல்லாம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில், கடவுளைப் புரிந்துகொள்வதற்காக, நமக்கு இவ்வளவு சொத்துக்கள் கிடைத்துள்ளன. எளிய விஷயம். எல்லாம் இங்கே தயாராக உள்ளது. ஆனால் நாம் ஏற்க மாட்டோம். எனவே இத்தகைய நோய்க்கு என்ன தீர்வு? நாங்கள் அமைதியைத் தேடுகிறோம், ஆனால் உண்மையில் எங்களுக்கு அமைதியைத் தரும் எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம். இது எங்கள் நோய். எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் அனைவரின் இதயத்திலும் செயலற்று இருக்கும் கிருஷ்ண உணர்வை எழுப்ப முயற்சிக்கிறது. இல்லையெனில், இந்த ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் எப்படி, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை, கிருஷ்ண உணர்வை அவர்கள் எப்படி தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்? அனைவரின் இதயத்திலும் கிருஷ்ண உணர்வு இருக்கிறது. அதை விழிக்கச் செய்ய வேண்டும். அது சைதன்ய- சரிதாமிர்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளது:

நித்திய- சித்த கிருஷ்ண- பக்தி அஸாத்யா கபூ நய
ஸ்ரவணாதி ஸுத்த சித்த கரையே உதய
(CC Madhya 22.107)

அது விழித்திருக்கிறது. கிருஷ்ணரிடம் அன்பு, கிருஷ்ணர் மீதான பக்தி, இருக்கிறது, எல்லோருடைய இதயத்திலும், ஆனால் அவர் மறந்துவிட்டார். எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் வெறுமனே அந்த கிருஷ்ண உணர்வை எழுப்புவதற்காக மட்டுமே. இது செயல்முறை. நீங்கள் தூங்கும்போது, ​​உன்னை சத்தமாக அழைக்க வேண்டும். "மிஸ்டர் ...எழுந்திருங்கள். உங்களுக்கு இந்த வேலை உள்ளது." நீங்கள் தூங்கும்போது வேறு எந்த புலன்களும் செயல்படாது. ஆனால் காது செயல்படும். எனவே, இந்த யுகத்தில், மக்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தால் அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள், இந்த ஹரே கிருஷ்ணா மஹா-மந்திரத்தை நாம் கோஷமிட்டால், அவர் கிருஷ்ண உணர்வுக்கு விழித்திருப்பார். இது நடைமுறை.