TA/Prabhupada 0542 - குருவின் தகுதி என்ன? அனைவரும் குருவாவது எப்படி?



Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973

எனவே கிருஷ்ணர் சொல்கிறார்: ஆச்சார்யம் மாம் விஜானீயான் (SB 11.17.27) "நீங்கள் ஆச்சார்யரை எனக்கு இணையாக ஏற்றுக்கொள்கிறீர்கள்." ஏன்? அவர் ஒரு மனிதர் என்பதை நான் காண்கிறேன். அவரது மகன்கள் அவரை தந்தை என்று அழைக்கிறார்கள், அவரும் ஒரு மனிதனைப் போல் தான் இருக்கிறார், ஆகவே அவரை ஏன் கடவுளுக்கு இணையாக ஏற்க வேண்டும்? ஏனென்றால், கடவுள் பேசுவதைப் போலவே அவர் பேசுகிறார், அவ்வளவுதான். எனவே. அவர் எந்த மாற்றமும் செய்யவில்லை. கடவுள் ( கிருஷ்ணர் ) சொல்வது போல், சர்வ- தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66). நீங்கள் கிருஷ்ணரிடம் அல்லது கடவுளிடம் சரணடையுங்கள் என்று குரு கூறுகிறார். அதே சொல். கடவுள் கூறுகிறார் : மண்-மணா பவ மத்-பக்ஹ்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65). நீங்கள் எப்போதும் கிருஷ்ணரை நினைவில் வையுங்கள் என்று குரு கூறுகிறார், நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடையுங்கள், நீங்கள் அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள், நீங்கள் அவருடைய பக்தராக ஆகுங்கள். எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் அவர் புருஷோத்தமர் சொல்வது போல் கூறுகிறார், எனவே அவர் குரு. அவர் பௌதீகமாகப் பிறந்தவர் என்றாலும், அவருடைய நடத்தை மற்ற ஆண்களைப் போல் இருந்தாலும். வேதங்களோ, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளோ சொன்னதை, அதே உண்மையை அவர் சொல்வதால், அவர் குரு. ஏனென்றால் அவர் எந்த மாற்றத்தையும் விசித்திரமாக செய்யவில்லை, எனவே அவர் குரு. அதுதான் வரையறை. இது மிகவும் எளிது. சைதன்யா மகாபிரபு அனைவரையும் குருவாகும் படி கேட்டுக் கொண்டார். எல்லோரும். ஏனெனில் குருவின் தேவை இருக்கிறது. உலகம் மோசடிகளால் நிறைந்துள்ளது, எனவே அவர்களுக்கு கற்பிக்க பல குருக்கள் தேவை. ஆனால் குருவின் தகுதி என்ன? எல்லோரும் எப்படி குருவாக மாற முடியும்? இது கேள்வி, அடுத்த கேள்வியாக இருக்கலாம். ஏனெனில் சைதன்யா மகாபிரபு கூறுகிறார், ஆமார ஆஜனாய குரு ஹையா டாரா எய் தேஷ (CC Madhya 7.128). எய் தேஷ என்றால், நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், நீங்கள் ஒரு குருவாகி அவர்களை விடுவிப்பீர்கள். நீங்கள் ஒரு சிறிய குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் அந்த சுற்றுப்புறத்தின் குருவாக மாறி அவர்களை விடுவிக்கலாம். "அது எப்படி சாத்தியம்? எனக்கு கல்வி இல்லை, எனக்கு அறிவு இல்லை. நான் எப்படி குருவாகி அவர்களை விடுவிக்க முடியும்? " சைதன்யா மஹாபிரபு இது ஒன்றும் கடினம் அல்ல என்றார். ஜாரே தாக்கோ தாரே காஹௌ கிருஷ்ண-உபதேஷா (CC Madhya 7.128). இது உங்கள் தகுதி. கிருஷ்ணர் கொடுத்த செய்தியை நீங்கள் வெறுமனே வழங்கினால் நீங்கள் குருவாகிவிடுவீர்கள். கிருஷ்ணர் சொல்கிறார், சர்வ- தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66). நீங்கள் பிரசங்கம் செய்யுங்கள், "ஐயா, நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்" என்று அனைவரையும் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் குருவாகி விடுங்கள். மிகவும் எளிமையான விஷயம். கிருஷ்ணர் சொல்கிறார், மண்-மணா பவ மத் பக்ஹ்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65). நீங்கள் சொல்லவேண்டியது "நீங்கள் கிருஷ்ணரின் பக்தராக ஆகுங்கள், அவரை வணங்குங்கள். இங்கே ஒரு கோயில் இருக்கிறது; இதோ கிருஷ்ணர். தயவு செய்து இங்கே வாருங்கள். உங்கள் வணக்கங்களை நீங்கள் செலுத்தவும், உங்களால் முடிந்தால், நீங்கள் அர்பணிக்கவும் - பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (BG 9.26). நீங்கள் அர்ப்பணம் செய்யவில்லை என்றால் ... ஆனால் அது மிகவும் எளிமையான விஷயம். யார் வேண்டுமானாலும் ஒரு சிறிய பூ, கொஞ்சம் பழம், கொஞ்சம் தண்ணீர் திரட்ட முடியும். இது ஒன்றும் கடினம் அல்ல."

எனவே இது குருவின் தகுதி. குரு எந்த மந்திரத்தையும் காட்டி அல்லது சில அற்புதமான விஷயங்களை உருவாக்கி, குருவாக தகுதியடைய முடியாது. எனவே நடைமுறையில் நான் இதை செய்தேன். நான் அற்புதங்களைச் செய்தேன் என்று மக்கள் என்னை போற்றுகிறார்கள், ஆனால் என் அதிசயம் என்னவென்றால், நான் சைதன்யா மகாபிரபுவின் செய்தியை சுமந்து சென்றேன்: ஜாரே தாக்கோ தாரே காஹௌ கிருஷ்ண உபதேஷா (CC Madhya 7.128). இது தான் ரகசியம். எனவே உங்களில் யாராவது, குருவாக மாறலாம். நான் ஒரு அசாதாரண மனிதன், ஒரு அசாதாரண கடவுள் என்று அல்ல ஏதோ மர்மமான இடத்திலிருந்து வந்தேனா. அது இல்லை - இது மிகவும் எளிமையான விஷயம்.