TA/Prabhupada 0543 - நீங்கள் குருவாவதற்கு பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தத் தேவையில்லை



Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973

சைதன்யா மகாபிரபு கூறுகிறார், ஜாரே தாக்கோ தாரே கஹா கிருஷ்ணா - உபதேஷ (CC Madhya 7.128). எனவே உங்களிடம் எனது கோரிக்கை - சைதன்யா மகாபிரபுவின் அறிவுறுத்தலைப் பின்பற்றவும், நீங்களும், உங்கள் வீட்டில் ஒரு குருவாக ஆகிவிடுங்கள். குருவாக மாறுவதற்கான ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும் என்பதல்ல. தந்தை குருவாக மாற வேண்டும், தாய் குருவாக மாற வேண்டும். உண்மையில், சாஸ்திரத்தில் இது கூறப்படுகிறது, ஒருவர் தந்தையாக மாறக்கூடாது, ஒருவர் தாயாக மாறக்கூடாது, அவர் தனது குழந்தைகளுக்கு ஒரு குருவாக மாறவில்லை என்றால். நா மோசயேத் யஹா சாமுபேதா-மிருத்யம் (SB 5.5.18). பிறப்பு மற்றும் இறப்பின் பிடியிலிருந்து ஒரு நபர் தனது குழந்தையை காப்பாற்ற முடியாவிட்டால், அவர் ஒரு தந்தையாக மாறக்கூடாது. இது ஒரு உண்மையான கருத்தடை முறை, பூனைகள் மற்றும் நாய்கள் போன்று உடலுறவு கொள்ளக்கூடாது, குழந்தை உயிரை கொல்லவோ அல்லது கருகலைப்போ செய்யாதீர்கள். இல்லை, அது மிகப்பெரிய பாவச் செயலாகும். உண்மையான கருத்தடை முறை, பிறப்பு மற்றும் இறப்பின் பிடியிலிருந்து உங்கள் மகனை விடுவிக்க முடியாவிட்டால், தந்தை ஆக வேண்டாம். அது அவசியம். பிதா ந ச ஸ்யாஜ் ஜனனீ ந ச ஸ்யாத் குரு ந ச ஸ்யாத் ந மோசயேத் யஹ் சமுப்பேத்த-ம்ரித்யும் (SB 5.5.18). பிறப்பின் பிடியிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்ற முடியாவிட்டால் ...

இது முழு வேத இலக்கியம். புனர் ஜன்ம ஜயாயஹ. அடுத்த பிறப்பு, அடுத்த பௌதீகப் பிறப்பு ஆகியவற்றை எவ்வாறு வெல்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. முட்டாள்கள் அவர்கள் வேத கலாச்சாரத்தை மறந்துவிட்டார்கள், வேத கலாச்சாரம் என்றால் என்ன, வேத கலாச்சாரம் என்பது அடுத்த பிறப்பை வெல்வது, அவ்வளவுதான். ஆனால் அவர்கள் அடுத்த பிறப்பை நம்புவதில்லை. தொண்ணூற்றொன்பது சதவிகித மக்கள், அவர்கள் வேத கலாச்சாரத்திலிருந்து மிகவும் கீழே சென்றுவிட்டனர். பகவத்-கீதையிலும், அதே தத்துவம் இருக்கிறது. த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (BG 4.9). இது வேத கலாச்சாரம். வேத கலாச்சாரம் என்றால், பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் இந்த மனித வாழ்க்கை வடிவத்திற்கு வருகிறோம். ஆன்மாவை ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவதை நிறுத்துவதற்கான வாய்ப்பு இங்கே. ததா தேஹாந்தர ப்ராப்திர், அடுத்து நான் எந்த வகையான உடலைப் பெறப் போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்த உடல் பிரதமராக இருக்கலாம், அல்லது எதுவாகவோ இருக்கலாம், இயற்கையின் விதிகளின்படி, அடுத்த உடல் நாயாக இருக்கலாம்.

ப்ரக்ரிதேஹ் க்ரியமானானி
குனய்ஹ் கர்மானி ஸர்வாஷாஹ்
அஹங்கார விமூதாத்மா
கர்த்தாஹம் ( இதி மன்யதே )
(BG 3.27)

அவர்களுக்கு தெரியாது. அவர்கள் இந்த கலாச்சாரத்தை மறந்துவிட்டார்கள். இந்த மனித வடிவத்தை தவறாக பயன்படுத்தி விலங்குகளைப்போல் - சாப்பிடுவது, தூங்குவது, இனச்சேர்க்கை மற்றும் பாதுகாத்தல், என்று வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். இது நாகரிகம் அல்ல. நாகரிகம் புனர் ஜன்ம ஜயாயஹ. அடுத்த பௌதீகப் பிறப்பை எவ்வாறு வெல்வது. அதுதான் கிருஷ்ண உணர்வு இயக்கம். எனவே நாங்கள் பல இலக்கியங்களை வழங்குகிறோம். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது, கற்றறிந்த வட்டம். இந்த இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் திறக்க முயற்சித்தோம், இங்கே ஒரு மையத்தைத் திறக்க எங்கள் தாழ்மையான முயற்சி. எங்கள் மீது பொறாமைப்பட வேண்டாம். தயவுசெய்து எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள். நாங்கள் ..., எங்கள் தாழ்மையான முயற்சி. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுதான் எங்கள் கோரிக்கை. மிக்க நன்றி.