TA/Prabhupada 0559 - அளக்கின்ற அனைத்திற்கும் நானே மன்னனென்று முட்டாள்தனமாக நினைக்கிறார்கள்
Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968
பிரபுபாதர்: இது மாயாவின் ஈர்ப்பு. அவர் கீழே வர வேண்டும். ஒரு பதம் உள்ளது,
- ஜன் யே அரவிந்தாக்ஷ விமுக்த- மானினஸ்
- த்வய்ய அஸ்த-பாவாத் அவிஷுத்த-புத்தயஹ்
- ஆருஹ்ய கிரகிச்சென பரம் பதம் ததஹ்
- பதந்தி அதா அனாதரூத-யஸ்மாத்-அங்ராயஹ்
இது பிரஹ்லாதா மகாராஜாவின் பிரார்த்தனை. அவர் கூறுகிறார், "என் அன்பான ஆண்டவரே, தாமரைக் கண்ணன், அரவிந்தாக்ஷா," ஏ அன்யே. "சில மூன்றாம் வகுப்பு ஆண்கள், இந்த பௌதிக வாழ்க்கையை முடிப்பதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள், இவர்கள் கடவுளின் தனிப்பட்ட வடிவத்தை மறுப்பவர்கள். விமுக்த- மாணிநஹ். விமுக்த- மாணிநஹ் - அவர்கள் மாயாவின் பிடியைத் தாண்டிவிட்டார்கள் என்று பொய்யான நினைவில் இருக்கிறார்கள். பொய்யாக.. விமுக்த- மாணிநஹ். நீங்கள் அதை பொய்யாக நினைப்பது போல் அதாவது, "நான் இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் உரிமையாளர்," என்பது ஒருவரின் தவறான சிந்தனை அல்லவா? இதேபோல், "இப்போது நான் நிர்வாணத்தை அடைந்துவிட்டேன் அல்லது நான் கடவுளில் கலந்துவிட்டேன்" என்று யாரோ ஒருவர் நினைப்பது போல் ஆகும். நீங்கள் அப்படி நினைக்கலாம். மாயா மிகவும் வலிமையானவர். அத்தகைய தவறான கவுரவத்தால் நீங்கள் திணறடிக்கப்படலாம். பாகவதம் கூறுகின்றது, த்வய்ய அஸ்த- பாவாத் அவிஷுத்த-புத்தயஹ் (ஸ்ரீ.பா.10.2.32). "ஆனால் அவர்கள் உங்கள் தாமரை பாதங்களைத் தேடாததால், எனவே அவர்களின் உணர்வு தூய்மையற்றது, 'நான் வேறொன்று' என்று நினைத்துக் கொள்கிறார்கள்.' " அவிஷுத்த - பத்தாயஹ். "அவர்களின் புத்திசாலித்தனம், உணர்வு சுத்திகரிக்கப்படவில்லை." எனவே, ஆருஹ்ய க்ரிச்சியென. "அவர்கள் மிகவும் கடுமையான பயிற்சியை மேற்கொள்கிறார்கள்." புத்த மதம் பின்பற்றுபவர் போல், அவர்களுக்கு மிக கடுமையான ... இப்போது, பயிற்சி செய்யாதவர்கள், அது வேறு விஷயம். ஆனால் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், புத்தர் - அவரே காட்டினார். அவர் தனது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறுமனே தியானத்தில் ஈடுபட்டார். யார் அதைச் செய்கிறார்கள்? யாரும் அதைச் செய்யவில்லை. சங்கராச்சார்யாவின் முதல் நிபந்தனை என்னவென்றால், "முதலில் நீங்கள் ஸந்நயாசத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் நாராயணனாக மாறுவது பற்றி பேசுங்கள்." யார் ஸந்நயாசத்தை ஏற்கிறார்? எனவே அவர்கள் வெறுமனே பொய்யாக சிந்திக்கிறார்கள். உண்மையில், அவர்களின் புத்திசாலித்தனம் தூய்மையற்றது, நனவு தூய்மையற்றது. எனவே இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், அதன் விளைவு, ஆருஹ்ய க்ரிச்சியென பரம், அவர்கள் அதிக உயரத்துக்கு சென்றாலும் - 25,000 மைல்கள் அல்லது மில்லியன் மைல்கள் மேலே சென்றாலும், அவர்கள் எந்த தங்குமிடத்தையும் காணவில்லை, சந்திரன் கிரகம் எங்கே, சூரிய கிரகம் எங்கே. அவர்கள் மீண்டும் உங்கள் மாஸ்கோ நகரத்திற்கு வருகிறார்கள், அவ்வளவுதான். அல்லது நியூயார்க் நகரம், அவ்வளவுதான். இவை எடுத்துக்காட்டுகள். அவர்கள் உயரமாக இருக்கும்போது, ஓ, அவர்கள் புகைப்படம் எடுப்பார்கள். "ஓ, இந்த கிரகம் அவ்வாறு உள்ளது, இந்த பூமி கிரகம் மிகவும் பச்சை அல்லது சிறியது. நான் இரவும் பகலும் சுற்றி வருகிறேன், ஒரு மணி நேரத்தில் மூன்று இரவும் பகலும் பார்க்கிறேன். " என்பார்கள். சரி, மிகவும் நல்லது. தயவுசெய்து மீண்டும் கீழே வாருங்கள். (சிரிக்கிறார்) அவ்வளவுதான். மாயா மிகவும் வலிமையானது, அவள், "ஆம், மிகவும் நல்லது. நீங்கள் மிகவும் முன்னேறியவர்கள் விஞ்ஞான அறிவில் மேம்பட்டது, ஆனால் தயவுசெய்து கீழே வாருங்கள். இங்கே வாருங்கள். இல்லையெனில் நீங்கள் அட்லாண்டிக் கடலில் விழபோகிறீர்கள்." அவ்வளவுதான். அவர்கள் இன்னும் பொங்கி எழுவார்கள், "ஓ, நாங்கள் முன்னேறி வருகிறோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், நீங்கள் டிக்கெட் வாங்கலாம் சந்திரனில் போய் இறங்க." உங்களுக்கு தெரியும், ரஷ்யாவில் அவர்கள் நிலத்தை விற்றனர், மேலும் அவர்கள் "மாஸ்கோ கடல் உள்ளது" என்று விளம்பரம் செய்தனர். நாங்கள் எங்கள் கொடியை கடலில் நட்டிருக்கிறோம் ... "எனவே இவை பிரச்சாரம். அவர்கள் அருகிலுள்ள கிரகத்திற்குள் கூட செல்ல முடியாது, ஆன்மீக வானத்தைப் பற்றி என்ன பேசுவது. ஆன்மீக வானம் மற்றும் வைகுண்டலோகத்திற்கு செல்வதில் நீங்கள் உண்மையில் தீவிரமாக இருந்தால், இந்த எளிய முறையை எடுத்துக் கொள்ளுங்கள், ஹரே கிருஷ்ணா. அதுவே, போதுமானது.
விருந்தினர்: நான் நாத்திகத்தில் ஆர்வமாக உள்ளேன்.
பிரபுபாதர்: (விருந்தினரைக் கேட்காமலோ அல்லது கவனிக்காமலோ) இதுவே- பகவான் சைதன்யாரின் பரிசு. நமோ மஹா-வதான்யாய. எனவே ரூபா கோஸ்வாமி கூறுகிறார், "நீங்கள் அனைத்து தொண்டு நபர்களிலும் சிறந்தவர் ஏனெனில் நீங்கள் மிகப் பெரிய வரத்தை அளிக்கிறீர்கள்." கிருஷ்ணா பிரேமா பிரதாய தே (சை சரி மத்ய 19.53). "நீங்கள் கிருஷ்ணரின் அன்பை வழங்குகிறீர்கள், அது என்னை கிருஷ்ண ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும்." இது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய பரிசு. ஆனால் முட்டாள்தனமான நபர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். என்னால் என்ன செய்ய முடியும்? தைவீ தேஸா குணமயீ (ப.கீ. 7.14). அந்த மாயா மிகவும் வலுவானது. "இங்கே ஒரு சிறிய கையேடு, மற்ற கிரகங்களுக்கு எளிதான பயணம்," என்று நாங்கள் சொன்னால், அவர்கள் அதை எடுக்க மாட்டார்கள். ஸ்பட்னிக் மூலம் மற்ற கிரகத்திற்கு எவ்வாறு செல்வது என்பதை அவர்கள் திட்டமிடுவார்கள், இது சாத்தியமற்றது. நீங்கள் எங்கும் செல்ல முடியாது. அதுதான் நம் நிபந்தனைக்குட்பட்ட வாழ்க்கை. நிபந்தனை என்றால் நீங்கள் இங்கே தங்க வேண்டும். நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும். மற்ற கிரகத்திற்கு செல்ல யார் அனுமதிக்கிறார்கள்? உங்கள் நாட்டின் நிரந்தர விசாவை எடுக்க, நான் மிகவும் போராட வேண்டியிருந்தது, நீங்கள் சந்திரன் கிரகத்திற்குப் போகிறீர்களா? விசா இல்லாமலா ? அவர்கள் உங்களை மட்டுமே நுழைய அனுமதிப்பார்களா? இது மிகவும் எளிதான விஷயமா? ஆனால் அவர்கள் முட்டாள்தனமாக "நான் கணக்கெடுக்கும் அனைத்திற்கும் மன்னர்." என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதான். இந்த கிரகம் மன்னர், மற்ற அனைத்து கிரகங்களும் - அவை அனைத்தும் அடிபணிந்தவை. அவை நம் உணர்வுகளை பூர்த்தி செய்யும். இது முட்டாள்தனம். எல்லாம் சரி. ஹரே கிருஷ்ணா ஜபியுங்கள்.