TA/Prabhupada 0565 - இந்திரியங்களை கட்டுப்படுத்துவது எப்படியென்று அவர்களுக்கு பயிற்சியளிக்கிறேன்



Press Interview -- December 30, 1968, Los Angeles

பத்திரிகையாளர்: சமீபத்தில் நாங்கள் சந்தித்த ஒரு முக்கிய விஷயத்தை உங்களிடம் கேட்கிறேன். குழந்தைகளுக்கான இளைஞர் இணைப்பு பக்கம் நாங்கள் தொடங்கினோம். மேலும் முக்கியமான ஒன்று ... நான் எப்படி அதை சொல்ல ? மனிதனுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை வழங்கும் அந்த குறிப்பிட்ட விஷயம், அல்லது குறைந்த பட்சம் அமெரிக்க ஆணும் பெண்ணும் கடவுளை நேசிப்பது அல்லது பத்து கட்டளைகளை பின்பற்றுவது, பிரச்சனை, நான் அதை எப்படி விளக்குவது, பாலியல் பிரச்சினை. இந்த நாட்டில் நாம் இங்கே கற்பிக்கப்படுகிறோம், மற்றும் தூயநெறியினர் பின்னணி உள்ளது, பாலியல் ஒரு மோசமான விஷயம் என்று. நான் நினைக்கிறேன், நாங்கள் அதிலிருந்து வெளியே வருகிறோம், ஆனால், இளைஞர்கள், ஒரு நபர் பருவ வயதை அடையும் பொழுது ... இங்கே இந்த நாட்டில், மற்ற நாடுகளிலிருந்து எனக்குத் தெரியாது. அவர் ஒரு பயங்கரமான, வெளிப்படையாக ஒரு பயங்கரமான பிரச்சனையை சந்திக்கின்றனர். இப்போது நான் வெளிப்படையான ஒன்றைக் கூறுகிறேன். நாம் அனைவரும் இதை கடந்து வந்துள்ளோம்.

பிரபுபாதா: ஆம், எல்லோரும்.

பத்திரிகையாளர்: ஆனால் மேற்கத்திய தேவாலயங்களுக்கு அது சாத்தியமற்றது என்று தெரிகிறது இளைஞர்களுக்குப் புரியும்படி ஏதாவது ஒன்றை, ஸ்திரமாக பற்றிக்கொள்ள கொடுக்க வேண்டும் முதலிடம் அவர்கள் உணருவது ஒரு சாதாரண அழகான விஷயம், மற்றும் எண் இரண்டு, அதை எவ்வாறு சமாளிப்பது என்று. மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு இளைஞருக்கு இந்த விஷயத்தை சமாளிக்க கற்பிக்கும் அல்லது உதவும் விஷயம் எதுவும் இல்லை, இது மிகவும் கடினமான பிரச்சினை. நான் அதன் வழியாக சென்றேன். நாம் அனைவரும் கடந்து இருக்கிறோம். இப்போது நீங்கள் உங்கள் செய்தியில், இளைஞர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பீர்களா ...

பிரபுபாதா: ஆம்.

பத்திரிகையாளர்: ...பற்றிக்கொள்ள, அப்படியானால், அது என்ன?

பிரபுபாதா: ஆம். ஆம் நான் தருகிறேன்.

பத்திரிகையாளர்: என்ன?

பிரபுபாதா: எனது சீடர்கள் அனைவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். காதலன், காதலியுடன் வசிக்க இந்த இளைஞர்களை நான் அனுமதிப்பதில்லை. கூடாது. நீங்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும், நற்பண்புகள் கொண்ட மனிதர் போன்ற வாழ்க்கை, உங்கள் மனைவியை உதவியாளராகக் கருதுங்கள், உங்கள் கணவரை உங்கள் வழங்குநராக கருதுங்கள். இந்த வழியில், நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன். இந்த பையனுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் பேராசிரியர். ஆகவே, என் சீடர்களில் பலரை திருமணம் புரிய நாம் நடத்திவைத்தோம். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். இந்த பெண் திருமணமானவர். முன்பு, அவர்கள் காதலி, காதலனுடன் வசித்து வந்தனர். நான் அதை அனுமதிக்கவில்லை. நான் அதை அனுமதிக்கவில்லை.

பத்திரிகையாளர்: சரி, ... இன்னும் கொஞ்சம் அடிப்படையில் கேட்கிறன். ஒருவருக்கு பதினான்கு, பதினைந்து, பதினாறு வயது இருக்கும்போது எப்படி?

பிரபுபாதா: அதே விஷயம். நிச்சயமாக, இன்னொரு விஷயம் என்னவென்றால், நம் பையன்களுக்கு பிரம்மச்சாரி ஆக கற்றுக்கொடுக்கிறோம். பிரம்மச்சாரி. பிரம்மச்சாரி என்றால் பிரம்மச்சரியத்தின் வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்று பொருள்.

பத்திரிகையாளர்: ஹ்ம்?

பிரபுபாதா: ஹோவர்ட், பிரம்மச்சாரி வாழ்க்கையை விளக்குங்கள்.

பத்திரிகையாளர்: ஆம். எனக்கு புரிகிறது. ஹயக்ரீவா: சரி, இது புலன்களின் கட்டுப்பாடு, மற்றும் புலன்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அவர் நமக்குக் கற்பிக்கிறார். பொதுவாக, ஒரு பையன் 22, 23, 25 வயது வரை திருமணம் நடப்பதில்லை.

பத்திரிகையாளர்: நீங்கள் அவருடைய கலாச்சாரத்தில் சொல்கிறீர்கள்.

பிரபுபாதா: ஆம். நாங்கள் பெண்ணை தேர்வு செய்கிறோம், சுமார் 16, 17 வயது, மற்றும் ஆண்கள் 24 வயதுக்கு மேல் இல்லை. நான் அவர்களை திருமணம் செய்து கொள்ள வைக்கிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் அவர்களின் கவனம் கிருஷ்ண பக்திக்கு திசை திருப்பப்படுவதால், அவர்கள் வெறுமனே பாலியல் வாழ்க்கைக்கு ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்களுக்கு சிறந்த பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தியுள்ளோம். பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே (ப கீ 2.59). பார்த்தீர்களா ? நாங்கள் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். "நீங்கள் அதை செய்ய வேண்டாம்" என்று நாங்கள் வெறுமனே சொல்லவில்லை, ஆனால் நாங்கள் சிறப்பாக வேறு ஒன்றை கொடுக்கிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா? பின்னர் தானாகவே "தவிர்க்க வேண்டியது " தானாக தெளிவடையும். நீங்கள் பார்க்கிறீர்களா?

பத்திரிகையாளர்: சரியான நேரத்தில்.

பிரபுபாதா: உடனே. நாங்கள் ஏதாவது சிறந்த ஈடுபாட்டைக் கொடுக்கிறோம்.

பத்திரிகையாளர்: இது என்ன?

பிரபுபாதா: எங்கள் சீடர்களை போலவே, அவர்கள் அனைவரும் கிருஷ்ண பக்தி உணர்வில் ஈடுபட்டுள்ளனர், கோவில் வேலைகளில், ஓவியத்தில், தட்டச்சு செய்வதில், பதிவு செய்வதில், பல விதமான விஷயங்களில். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் சினிமாவுக்குப் போவதில்லை, கிளப்புக்குச் செல்லவில்லை, அவர்கள் குடிப்பதில்லை, புகைப்பதில்லை. எனவே நடைமுறையில் நான் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இந்த இளைனர்கள், அவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பதால் வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆனவர்கள் அல்ல. அவர்கள் இதை ஏன் ஏற்றார்கள்? இந்த செயல்முறை மிகவும் நன்றாக இருக்கிறது, அவர்கள் அதை விரும்பினார்கள். எனவே நீங்கள் இந்த அமைப்பை பரப்பினால் எல்லாம் தீர்க்கப்படும்.

பத்திரிகையாளர்: அப்படியானால் ...

பிரபுபாதா: நீங்கள் பெண்ணுடன் கலக்க வேண்டாம் அல்லது பாலியல் வாழ்க்கையை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் தடை செய்யவில்லை. நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கிருஷ்ண பக்தியின் கீழ் கட்டுப்படுத்துகிறோம். அவர்களின் நோக்கம் உயர்ந்தது. இவை அனைத்தும் இரண்டாம் நிலை தளம். எனவே இந்த வழியில் எல்லாம் நன்றாக இருக்கிறது.