TA/Prabhupada 0566 - மக்களின் தலைவர்கள் வந்து இந்த அமைப்பைப் புரிந்துக்கொள்ள முயன்றால்



Press Interview -- December 30, 1968, Los Angeles

பத்திரிகையாளர்: காந்தி செய்தது இதுதானா?

பிரபுபாதா: ஹா? காந்திக்கு என்ன தெரியும்? அவர் ஒரு அரசியல்வாதி. இந்த கலாச்சாரம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.

பத்திரிகையாளர்: சரி, அவருக்கு 36 வயதாக இருந்தபோது அவர் ஒரு பிரம்மச்சாரி ஆனார் என்று படித்தேன், இல்லையா ...

பிரபுபாதா: அதாவது ... நிச்சயமாக அவருக்கு சில இந்து கலாச்சார கருத்துக்கள் இருந்தன. அது நல்லாயிருக்கு. அவர் பிரம்மச்சரியத்தைத் தொடங்கினார், அது சரி. ஆனால் காந்திக்கு மிகவும் மேம்பட்ட ஆன்மீகக் கருத்துக்கள் இல்லை. நீங்கள் பார்க்கிறீர்களா. அவர் ஏறக்குறைய ஒரு அரசியல்வாதியே . ஆம், அவ்வளவுதான்.

பத்திரிகையாளர்: ஆம். மிகவும் தைரியமான மனிதர். சரி, பதில் மிகவும் பொருத்தமானது என்று தோன்றுகிறது, எனவே மேலே பேச, அது என்ன என்றால் ...

பிரபுபாதா: இப்போது, ​​நீங்கள் ஒத்துழைத்தால், உங்கள் நாட்டில் மொத்த நிலவரத்தையும் என்னால் மாற்ற முடியும். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அருமையானதாகும். நீங்கள் ஒத்துழைக்க முனைந்தால், முடியும். யாரும் ஒத்துழைக்கவில்லை. வெறுமனே இந்த இளைஞர்கள் போல், அவர்கள் தயவுசெய்து என்னிடம் வந்து ஒத்துழைத்துள்ளனர். எனவே எனது இயக்கம் முன்னேறி வருகிறது, ஆனால் மிக மெதுவாக. ஆனால் அமெரிக்க மக்களின் தலைவர்கள், அவர்கள் வந்து புரிந்து கொள்ள முயன்றால், அவர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்த முயன்றால், ஓ, உங்கள் நாடு உலகின் மிகச்சிறந்த நாடாக இருக்கும்.

பத்திரிகையாளர்: நீங்கள் ... நீங்கள் இதில் எவ்வளவு காலம் ஈடுபட்டுள்ளீர்கள்?

ஹயக்ரீவா: இரண்டரை ஆண்டுகள்.

பத்திரிகையாளர்: இரண்டரை ஆண்டுகள்? நான் கேட்க அனுமதி உண்டு என்றால், உங்களுக்கு எவ்வளவு வயது?

ஹயக்ரீவா: எனக்கு 28 வயது.

பத்திரிகையாளர்: நீங்கள் 28 வயது. இப்போது, ​​இந்த மார்க்கம் உங்கள் வாழ்க்கையை திருத்தியதா ?

ஹயக்ரீவா: ஆ, கணிசமாக. (சிரிக்கிறார்)

பத்திரிகையாளர்: ஆனால் ஒரு நடைமுறை நிலைப்பாட்டில், சுவாமி பேசிக் கொண்டிருந்த இந்த பாலியல் விஷயம் எப்படி இருக்கிறது, இது உங்களை எவ்வாறு பாதித்தது? நாங்கள் பேசிக்கொண்டிருந்தவற்றில் செயல்திறன் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இது இளைஞர்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை.

ஹயக்ரீவா: சரி, ஆசைகள் உள்ளன, நமக்கு பல ஆசைகள் உள்ளன. பாலியல் ஆசை என்பது நம்முடைய வலிமையான ஆசைகளில் ஒன்றாகும். அதனால்...

பிரபுபாதா: ஆம், ஆம்.

ஹயக்ரீவா: எனவே இந்த ஆசைகள் வழிபடுத்தப்படுகின்றன. அவை திருப்பி விடப்பட்டு அவை கிருஷ்ணரை நோக்கி செலுத்தப்படுகின்றன.

பத்திரிகையாளர்: சரி, எனக்கு புரிகிறது, எனக்கு அது புரிகிறது, ஆனால் நான் சொல்வது அது திறமையானதா? இது வேலை செய்யுமா?

ஹயக்ரீவா: ஆம், அது வேலை செய்கிறது. இது வேலை செய்கிறது. ஆனால் நீங்கள் அதனுடன் ஒட்டி வாழ வேண்டும். இது மிகவும் கடினமாக இருக்கும், குறிப்பாக முதலில், ஆனால் அது வேலை செய்கிறது. அதைச் செயல்படுத்துவதற்கு நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அது வேலை செய்ய நீங்கள் விரும்ப வேண்டும்.

பத்திரிகையாளர்: இப்போது, ​​இதை நான் முழுமையாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் விட்டுவிடுகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது ஒன்றுமில்லை.

ஹயக்ரீவா: இல்லை, நீங்கள் எதையாவது சிறப்பாகக் காணும்போது ...

பத்திரிகையாளர்: அதைத்தான் நான் ... அதைத்தான் நான் சொல்கிறேன். அது ...

பிரபுபாதா: ஆம். நீங்கள் சிறப்பான ஒன்றை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

பத்திரிகையாளர்: சிறந்தது. அது ஆம். உங்கள் நாக்கையோ உதட்டையோ கடித்து கொண்டதன் மூலம் அல்ல "நான் அதைத் தொட மாட்டேன், அதைத் தொட மாட்டேன்." ஒரு மாற்று உள்ளது.

ஹயக்ரீவா: அது இல்லை, நீங்கள் இல்லை ... உங்களுக்கு இன்பம் அனுபவிக்கும் திறன் உள்ளது, நீங்கள் எதையும் விட்டுவிடப் போவதில்லை ... மனிதநேயம் சிறந்த மற்றொன்று கிடைக்கும் வரை, தன்னிடம் உள்ளதை எதையும் இழக்க முயலாது. எனவே விஷயம் என்னவென்றால், நீங்கள் விட்டுவிட விரும்புவதை விட சிறந்த ஒன்றை நீங்கள் பெற வேண்டும் ...

பிரபுபாதா: ஆம்.