TA/Prabhupada 0570 - கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் - கணவன் மனைவியிடையே விவாகரத்துக்கு இடமில்லை



Press Interview -- December 30, 1968, Los Angeles

பத்திரிகையாளர்: இந்தியாவில் அதிக அளவில் விவாகரத்து ஆகிறதா ?

பிரபுபாதா: ஆம். நவீன, மேம்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அழைக்கப்படுபவர்கள், இப்போது விவகாரத்தை நாடுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பு, கணவன்-மனைவி இடையே தவறான புரிதல், சண்டை கூட இருந்தது, , விவாகரத்து பற்றிய கேள்வி எதுவும் இல்லை. என் வாழ்க்கையை நடைமுறைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு குடும்ப தலைவராக இருந்தேன். இப்போது நான் துறந்து விட்டேன். எனவே நடைமுறையில் நான் என் மனைவியுடன் உடன்படவில்லை, ஆனால் விவாகரத்து செய்யும் எண்ணம் கனவில் கூட எழவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? அவள் கனவு கண்டதும் இல்லை, நான் கனவு கண்டதும் இல்லை. விவாகரத்து என்பதை அறியவில்லை. இப்போது அவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பத்திரிகையாளர்: ஆமாம். மேற்கத்திய கலாச்சாரம்.

பிரபுபாதா: ஆ, ஆமாம்.

பத்திரிகையாளர்: இந்தியாவில் உங்களை பின்பற்றுபவர் அதிகம் உள்ளார்களா?

பிரபுபாதா: ஆம். எனது தனிப்பட்ட சிஷ்யர்கள் அல்ல, ஆனால் எனது மற்ற ஆன்மிக சகோதரர்களின் சிஷ்யர்கள் உள்ளார்கள், இந்த வழிபாட்டு முறை மிகவும் நல்லது.

பத்திரிகையாளர்: எத்தனை, எத்தனை ...

பிரபுபாதா: ஓ, மில்லியன் கணக்கானவர்கள். இந்த வைணவ தத்துவம், கிருஷ்ண பக்தி உள்ளது, பல லக்ஷ மக்கள் இதனை பின்பற்றுகிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து மக்களும். 80 சதவீதம் இருக்க கூடும். நீங்கள் எந்த இந்தியனையும் கேளுங்கள், அவர் கிருஷ்ண பக்தியைப் பற்றி பல விஷயங்களைப் பேசுவார். அவர் என் சிஷ்யராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னைப் போன்ற பல புனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த பணியைச் செய்கிறார்கள்.

பத்திரிகையாளர்: நீங்கள் ... நீங்கள் முறையான பயிற்சி பெற்றீர்களா ...

பிரபுபாதா: ஆம், எனது குரு மகாராஜாவால் நான் தீக்ஷை பெற்றேன். இங்கே இருக்கிறது, என் ஆன்மீக குருவின் புகைப்படம்.

பத்திரிகையாளர்: ஓ, நான் அறிகிறேன்.

பிரபுபாதா: ஆம். எனவே, உங்கள் நாடு என்னை ஒரு சான்றிதழ் கேட்டபொழுது, என்னை நிரந்தர வாசியாக ஒப்புதல் வழங்க, நான் தீக்ஷை பெற்றுள்ளேன் என்று என் ஆன்மீக சகோதரர்களிடம் ஒரு சான்றிதழைப் பெற்றேன். அவ்வளவுதான். ஆனால் இல்லையெனில், எங்கள் நாட்டில், சான்றிதழ் தேவையில்லை.

பத்திரிகையாளர்: வேறுவிதமாகக் கூறினால், இந்தியாவில் ஒரு பாடசாலைக்கு செல்வது போல் எதுவும் இல்லை. அங்கு நீங்கள் ஒரு பாடசாலைக்கோ அல்லது ஒரு மடத்திக்கோ சென்று நான்கு ஆண்டுகள் ஒரு பாடத்திட்டத்தை எடுத்துக் கொள்வீர்களா ...

பிரபுபாதா: இல்லை, இது மடம். ஆம், ஒரு மடம் உள்ளது. எங்களுக்கு கல்வி நிலையம் உள்ளது, கௌடிய மடம். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான கிளைகள் உள்ளன, ஆம்.

பத்திரிகையாளர்: நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிப்புக்கு சென்றீர்களா ?

பிரபுபாதா: ஆமாம், பரிந்துரைக்கப்பட்ட படிப்பு, இந்த இரண்டு, மூன்று புத்தகங்கள், அவ்வளவுதான். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். பகவத்-கீதா மற்றும் ஸ்ரீமத்-பகவதம் அல்லது சைதன்யா-சரிதாமிரிதா. நீங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் பல பெரிய புத்தகங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. பகவத்-கீதை ஒரு சிறந்த புத்தகம் என்பதால், ஒரு வரியை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், நீங்கள் நூறு ஆண்டுகள் முன்னேறுகிறீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே, நான் சொல்வதின் அர்த்தம் - அர்த்தமுள்ள மற்றும் மிகவும் உறுதியானது. எனவே இந்த பகவத் கீதையை உண்மையுருவில் அப்படியே வெளியிட்டுள்ளோம். உங்கள் மக்கள் அதைப் படிக்கட்டும், அவர்கள் கேள்வி கேட்கட்டும், இந்த இயக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும்.

பத்திரிகையாளர்: மேக்மில்லன் இதை வெளியிடுகிறது?

பிரபுபாதா: ஆம், மேக்மில்லன் வெளியிடுகிறது.