TA/Prabhupada 0571 - வேத கலாச்சாரப்படி ஒருவன் குடும்ப வாழ்வில் நிலைத்திருக்கலாகாது
Press Interview -- December 30, 1968, Los Angeles
பத்திரிகையாளர்: இப்போது நீங்கள் ... ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த பாடசாலைக்குச் செல்கிறீர்களா?
பிரபுபாதா: நிலையான காலம் என்று இல்லை. கிடையாது. ஆனால், சொல்லுங்கள், என்னைப் பொறுத்தவரை, நான் பயிற்சி பெற்றேன், என் தந்தை இந்த வழியில் வந்தவர் ...
பிரபுபாதா: ஓ. என் தந்தை, எனக்கு சிறுவயதிலிருந்தே பயிற்சி அளித்தார், ஆம். பின்னர் நான் என் ஆன்மீக குருவை 1922 இல் சந்தித்தேன், அவர் எனக்கு தீட்ச்சை அளித்தார் ... மொத்தத்தில் ஒரு பின்னணி இருந்தது, ஏனென்றால் நான் சொன்னது போல், 80,90 சதவீத மக்கள் குடும்ப வாரியாக கிருஷ்ண பக்தி உடையவர்கள். நீங்கள் அறிவீர்களா? எனவே எங்கள் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் பயிற்சி பெற்றோம். அதிகாரப்பூர்வமாக, நான் 1933 இல் என் ஆன்மீக குருவை ஏற்றுக்கொண்டேன். அப்போதிருந்து, எனக்கு ஒரு பின்னணி இருந்தது, நான் (குருவை) சந்தித்ததிலிருந்து, நான் இந்த யோசனையை வளர்த்து கொன்டேன்.
பத்திரிகையாளர்: எனக்கு புரிகிறது. எனவே, நீங்கள் ஒரு வகையில், 1933 முதல் இந்த இயக்கத்தை பரப்பி வருகிறீர்கள்.
பிரபுபாதா: இல்லை நான் ஆயிரத்து தொள்ளாயிரத்து........ முதல் மத போதகராக பரப்பி வருகிறேன் ..., நடைமுறையில் '59 முதல்.
பத்திரிகையாளர்: '59, நான் அறிகிறேன். அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் ...
பிரபுபாதா: நான் இல்லறவாழ்வில் இருந்தேன். நான் மருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். முன்பு, நான் ஒரு பெரிய ரசாயன நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தேன். ஆனால் நான் இல்லறவாழ்வில் இருந்தபோதிலும் இந்த அறிவை வளர்த்துக் கொண்டிருந்தேன். நான் இந்த பகவத் தரிசனம் என்ற பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டு இருந்தேன் ...
பத்திரிகையாளர்: எனவே நீங்கள் அதை வெளியிட்டுக் கொண்டு இருந்தீர்களா ...!
பிரபுபாதா: இந்தியாவில்.
பத்திரிகையாளர்: ஓ, நான் அறிகிறேன்.
பிரபுபாதா: ஆம், எனது ஆன்மீக குருவின் கட்டளையின் பேரில் 1947 இல் தொடங்கினேன். எனவே நான் சம்பாதித்ததை, நான் செலவு செய்து கொண்டிருந்தேன். ஆம், எனக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை, ஆனால் நான் விநியோகித்து கொண்டிருந்தேன். எனவே நான் நீண்ட காலமாக இந்த பணியை செய்து கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் எனது குடும்பத்தினருடனான எல்லா தொடர்பையும் கைவிட்ட பிறகு, நான் 1959 முதல் இந்த பணியைச் செய்கிறேன்.
பத்திரிகையாளர்: உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
பிரபுபாதா: ஓ, எனக்கு வளர்ந்த இளைய மகன்கள் உள்ளனர்.
பத்திரிகையாளர்: நீங்கள் அவர்களை விட்டுவிட்டீர்களா?
பிரபுபாதா: ஆம். எனக்கு என் மனைவி, என் பேரக்குழந்தைகள், அனைவரையும் பெற்றுள்ளேன், ஆனால் அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் தங்கள் சொந்த வழியில் இருக்கிறார்கள். என் மனைவி மூத்த மகன்களின் ஆதரவில் உள்ளார். ஆம்.
பத்திரிகையாளர்: சரி, அது ஒரு ...? உங்கள் குடும்பத்தை விட்டுக்கொடுப்பதற்கும், "பின்னர் சந்திப்போம்" என்று சொல்வதற்கும் ஒருவிதமான சிரமத்தை நான் காண்கிறேன்.
பிரபுபாதா: ஆம், ஆம், அதுவே வேத ஒழுங்குமுறை. ஒவ்வொருவரும் 50 வயதிற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட வயதில் குடும்ப தொடர்பை விட்டுவிட வேண்டும். ஒருவர் குடும்ப வாழ்க்கையில் நிரந்தரமாக இருக்கக்கூடாது. அதுவே வேத கலாச்சாரம். ஒருவர் குடும்பத்தில் மரணம் வரை இருப்பது அல்ல, இல்லை. அது சரியில்லை.
பத்திரிகையாளர்: அதை விளக்க முடியுமா?
பிரபுபாதா: முதலில், ஒரு பையனுக்கு பிரம்மச்சாரி, ஆன்மீக வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் குடும்ப வாழ்க்கையில் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார். ஆனால் அவர் தனது பாலியல் ஈர்ப்பை கட்டுப்படுத்த முடியாவிட்டால், "சரி, நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று அனுமதிக்கப்படுகிறார். பின்னர் அவர் குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார். எனவே அவர் 24 அல்லது 25 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். 25 வருடம், அவர் பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கட்டும். இதற்கிடையில், அவர்களின் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள். எனவே 50 வயதில் கணவன் மனைவி வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குடும்ப பாசத்திலிருந்து அவர்களைப் பிரிப்பதற்காக அவர்கள் எல்லா புனித யாத்திரைகளிலும் பயணம் செய்கிறார்கள். இந்த வழியில், அந்த மனிதன் இன்னும் கொஞ்சம் முன்னேறும்போது, அவன் தன் மனைவியிடம், "நீ போய் குடும்பத்தையும் உன் மகன்களையும் கவனித்துக்கொள், அவர்கள் உன்னை கவனித்துக்கொள்வார்கள். நான் சன்யாசம் மேற்கொள்கிறேன்" என்று கேட்கிறார். எனவே அவர் தனியாகி, அவர் பெற்ற அறிவைப் போதிக்கிறார். இது வேத நாகரிகம். ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை குடும்ப வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதல்ல. இல்லை. புத்த மதத்திலும் ஒருவர் குறைந்தது பத்து வருடங்களாவது சன்யாசியாக மாற வேண்டும் என்ற கட்டாய ஒழுங்குமுறைக் கொள்கை உள்ளது. ஆம். ஏனென்றால் முழு யோசனையும் ஆன்மீக முழுமையை எவ்வாறு அடைவது என்பதுதான். ஆகவே, ஒருவர் தனது குடும்ப வாழ்க்கையில் எஞ்சியிருந்தால், அவர் எந்த ஆன்மீக முன்னேற்றத்தையும் செய்ய முடியாது. ஆனால் முழு குடும்பமும் கிருஷ்ண பக்தியில் இருந்தால், அது உதவியாக இருக்கும். ஆனால் அது மிகவும் அரிதானது. கணவர் கிருஷ்ண பக்தியில் இருந்தால், மனைவி அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் கலாச்சாரம் எல்லோரும் கிருஷ்ண பக்தியில் இருக்கும் வகையில் மிகவும் அருமையாக இருந்தது.